Thursday, May 14, 2009

மே மாத முக்கிய தினங்கள்!`


நேத்திக்கு டாமின் திருமணநாள். வாழ்த்துப் பதிவு போடணும்னு நினைச்சேன். நேத்திக்காலையிலேயே போட்டிருக்கணும். அப்புறம் கணினி கிட்டேயே வரமுடியலை. தாமதமான மணநாள் வாழ்த்துகள் டாம்! இன்னும் சில முக்கியமானவங்களோட திருமணநாளும் வருது. அதெல்லாமும் அப்புறமாய். டாமோட ஜூனியருக்கும் முதலாண்டுப் பிறந்த நாள் வருது. ஒரு இரண்டு வருஷம் போச்சுன்னா அவரும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சுடுவார். முன் கூட்டிய வாழ்த்துகள்.

Monday, April 27, 2009

ஹையா, ஜாலி, டிடி அக்கா வந்துட்டாங்களே!


பலநாட்களாய்க் காணாமல் போய் அறிவிப்புக் கொடுக்கலாமா வேண்டாமானு இருந்தப்போ அப்போ அப்போ ஆன்லைனில் கண்ணில் பட்டு, சாட்டிட்டுப் போயிட்டிருந்த டிடி அக்கா வந்துட்டாங்க டோய்! ஜாலி, இனிமேல் அடுத்தது நம்ம வேதா(ள்) தான் வரணும், வந்தால் களை கட்டிடும் ! மக்களே காத்திருங்க. முதல்லே டிடி அக்காவுக்கு நல்வரவு சொல்லுங்க எல்லாரும்.

நல்வரவு டிடி அக்கா.

Wednesday, March 18, 2009

வேலை வாய்ப்புச் செய்தி

ஹலோ நண்பர்களே, நலமா? எனது நண்பர் ஒருவர்
வேலை வாய்ப்புச் செய்தி பற்றி அவ்வபொழுது எனக்கு
மின்மடல் அனுப்பிக் கொண்டிருப்பார். அவர் இப்பொழுது
அதற்காகவே தனியாக ஒரு பிரிவே ஆரம்பித்துள்ளார்.
அதை பற்றி அவரே செய்தி அனுப்பியுள்ளார், பாருங்கள்
வேண்டுவோர் இதன் மூலம் பயன் பெற வாழ்த்துக்கள்.

வேலை வாய்ப்புச் செய்தி
கள்.
Dear Friends,

Just wanted you to update about a yahoo group named 'AllTheVeryBest' which I had created and maintained for sending job related mails. It was inactive for sometime and hereafter I shall be forwarding the job related emails to that group. Moreover there would be no further needs to stand against the Corporate SMTP server's policy :).

Whoever is interested, can just join the group by sending a blank mail to 'AllTheVeryBest-Subscribe@yahoogroups.com'. You can very well inform your friends also to do the same. This is a common group for sending the openings for both Freshers and Experienced people.

Cheers,
Raghavan alias Saravanan M




உங்களில் யாருக்காகவாவது உபயோகமாக இருக்கும்
என நினைக்கிறேன்.

Thursday, January 29, 2009

20-20-20

During a recent visit to an optician, one of my friends was told of an exercise for the eyes by a specialist doctor that he termed as 20-20-20 ." It is apt for all of us, who spend long hours at our desks, looking at the computer screen. I Thought I'd share it with you. 20-20-20

Step I :-

After every 20 minutes of looking into the computer screen, turn your head and try to look at any object placed at least 20 feet away. This changes the focal length of your eyes, a must-do for the tired eyes.

Step II :-

Try and blink your eyes for 20 times in succession, to moisten them.

Step III :-

Time permitting of course, one should walk 20 paces after every 20 minutes of sitting in one particular posture. Helps blood circulation for the entire body.

Sunday, November 30, 2008

பிறந்த நாள் வாழ்த்துகள் டாம்!

டாமுக்கு இன்று பிறந்த நாள். அதுக்காக வாத்தியம் இசைக்கிற சத்தத்திலே டாமுக்குத் தூக்கி வாரிப் போடுது போல! பாவம் இல்லை டாம்?? என்னது பாவமா? அதெல்லாம் இல்லை! நல்லா வேணும்! :P


போனால் போகுது டாம், இந்தா இந்த ரோஜாப் பூவை வச்சுக்கோ இன்னிக்கு உனக்குப் பிறந்த நாளாச்சேனு ஜெரி கொடுக்குது. டாமும் சந்தோஷமா வாங்கிக்குதே? ம்ம்ம்ம் இப்போ தைரியமா கேக்கைக் கொடுக்கலாமா?? ப.கொ. கேக் இது, டாமுக்குனு ஸ்பெஷலாத் தயாரிச்சது.
Happy Birthday Tom.

Wednesday, November 12, 2008

seeking change of job

நான் பங்கேற்கிற ஒரு குழுவில வந்த ஒரு அஞ்சல். முடிஞ்சா உதவுங்க!
~~~~~~~~~~~~~~~~
நண்பர்களுக்கு வணக்கம்,

IBM Websphere Admin ஆக பணிபுரிகின்ற நான் தற்போது வேறு நிறுவனங்களில் வேலை தேடுகிறேன். உங்கள் அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் அலுவலகத்திலோ இவ்வேலைக்கான காலியிடங்கள் இருப்பின் எனக்கு மடலிடுங்கள்( nilaraseegan@gmail.com )மறக்காமல் உங்களது அலைபேசி எண்ணையும் குறிப்பிடுங்கள்.

மாணவ சமுதாயம் எங்கே போகின்றது???

சற்று முன் தொலைக்காட்சிகளில் செய்தி ஒன்றைப் பார்த்ததும் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு குழுவினருக்குள் நடந்த சண்டையின் நேர்முக ஒளிபரப்பைப் பார்த்ததும் மனம் அதிர்ந்து போனது. ஒரு வாரமாக இரு குழுவினருக்குள்ளே ஏதோ போஸ்டர் ஒட்டுவதில் தகராறு இருந்து வந்திருக்கின்றது. அது எதனால், என்ன போஸ்டர் என்பது நாளைக்குச் செய்தித் தாள் பார்த்தால் தான் தெரியும். ஆனால் ஒரு வாரமாய்க் கனிந்து கொண்டிருந்த நெருப்பு இன்று பிடித்து எரிய ஆரம்பித்துக் கடைசியில் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் இரு மாணவர்களை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கியதில் அந்த மாணவர்களின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது என நம்புகின்றேன். வருங்காலத்தில் மக்களுக்குச் சட்டத்தையும், ஒழுங்கையும், நேர்மையையும் போதிக்க வேண்டிய ஒரு முக்கியமான, உன்னதமான இடத்தில் இருக்கப் போகின்றவர்கள் இன்று அல்ப விஷயத்துக்காக இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டால், பின் சாமானிய மக்கள் இவர்களை நம்பித் தங்கள் வழக்கை எவ்வாறு ஒப்படைப்பார்கள்?? மாணவ சமுதாயம் எங்கே போகின்றது? இவர்களா வளமான இந்தியாவை உருவாக்கப் போகின்றார்கள்? இவங்க கையில் இந்தியா எப்படி இருக்கும்?? இதை ப்ளாக் யூனியனில் போடுவதன் காரணம் இளைஞர்களும், இளைஞிகளும் இங்கே அதிகம் இருப்பதால். அவங்களுக்கும் செய்தியின் தீவிரம் புரியணும்னு.