Thursday, June 9, 2011

பிறந்த நாள்..இன்று பிறந்த நாள்....

ஹலோ மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலம் னு தான் நினைக்கிறேன்.
சரி இப்ப மேட்டர் என்னன்னா, நம்ம யூனியன் தலைவியா(ஒருகாலத்துல) இருந்தாங்களே நினைவிருக்கா? அதான் அதேதான் அவங்களேதான்
சுதா
அக்காவோட செல்ல மகளோட முதலாம் ஆண்டு பிறந்த நாள் நாளைக்கு 10-6-2011 வெகு சிறப்பா கொண்டாட படறதால யாரெல்லாம் பாப்பாக்கு வாழ்த்து சொல்றாங்களோ(அவங்களுக்கு மட்டும்) இங்க கீழே இருக்குற கேக்குல ஒரு ஒரேஒரு சின்ன துண்டு மட்டும் தாராளமாக வழங்கப் படும் னு இங்க யூனியன் சார்பா அறிவிக்கப் படுகிறது.




My DEAR KRUTHIKA, MANY MANY MANY HAPPY RETURNS TO YOU.
LOVING SUMATHI AUNTY.



Tuesday, November 30, 2010

Thursday, November 18, 2010

Happy News For one and All!!

This is to inform one and all that we have got a girl baby of 5 months today.. Tomorrow we will get the custody of the baby.. I am happy to inform you all about this good news... And hope you are all also happy for it...

Monday, October 25, 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

இமெயிலாக வந்தது. அப்படியே ஜி3 செய்து உள்ளேன். (எ.பி சரி பாக்கலை)விருப்பமுள்ளவர்கள் ஓட்டு போடவும், எனகில்ல, இந்த நபருக்கு.

ஏற்கனவே ஓட்டு போட்டவர்கள் மறுபடியும் கள்ள ஓட்டு போட முயற்சி செய்யவும். :))

***************************************************************************************

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.


இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.


பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை


அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.


தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு லட்சத்து இருபதாயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர், கீழேகிடக்கும் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.


நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி."


ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.


ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in


மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்:

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

Thursday, September 9, 2010

வாழ்த்துக்கள் ஜி3

அது என்னபா பேரு ஜி3, ஏதோ இன்சாட்-3 செயற்கைகோள் மாதிரியா..?

சமீபத்தில் 2006ல் ஒருத்தர் என்னிடம் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி தான் இது.. இப்படி நம் எல்லோராலும் ஜி3 என அன்பாக அழைக்கப்படும் காயத்ரி அக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி கண்ணாலம் நடக்கப் போவுது. முகூர்த்தம் அதி காலை ஆறு மணிக்கு.

வெளியூர்காரர்கள் முந்தைய நாளே வந்து பெசண்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோவில், பீச் எல்லாம் சுத்தி பாத்து விட்டு அப்ப்டியே துளசி டீச்சர் வீட்டில் டேரா போட்டுக் கொள்ளலாம். முகூர்த்தத்துக்கு இவ்ளோ சீக்ரமா எப்படி ஜி3 அக்கா எழுந்திருக்க போறாங்க? என்பது தான் என் மிகப் பெரிய சந்தேகம். :)

இடம்: பெசண்ட் நகர் கம்யூனிட்டி ஹால் (பேருந்து நிலையம் மிக மிக அருகில்).

இன்று மாலை (9 செப் 2010) மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கு. டிபன் போண்டாவும் கேசரியும் தானே..?

மணப்பெண் ஜி3க்கு வாழ்த்துக்கள், மணமகனுக்கு "விதி யார விட்டது..?" :))

பத்திரிகைன்னு சொல்லி அண்டை நாட்டுக்கு ஓலை அனுப்பியிருக்காங்க. ;)

Friday, March 26, 2010

டாமுக்கு எழுபது வயது!


டாமுக்குஅம்மாஞ்சிஎழுபது வயசாச்சாமே?? அப்படியா?? அப்போ ஜெரிக்கு??? ஜெரி சின்னது தானே? எண்ணங்கள்ஆனால் அதுதான் நல்ல சுறுசுறுப்பு. வேகம். தூங்கிட்டு இருக்கும் டாமை எப்படி நைசா எழுப்பி விட்டுட்டுப் போய் ஒளிஞ்சுக்கும். அது ஒண்ணே போதுமே! என்ன இருந்தாலும் ஜெரியைப் பார்த்தால் தான் டாமுக்கு அடுத்துச் செய்ய வேண்டியது என்னனே தோண ஆரம்பிக்கும். டாமுக்கா ஒண்ணுமே தெரியாது. ஜெரி கிட்டே மாட்டிண்டு முழிக்கும்போதும், வீட்டு எஜமானி கிட்டே மாட்டிண்டு அசடு வழியும்போதும் டாமின் முகத்தைப் பார்க்கணுமே! அசடு வழியும். ஆனாலும் ஜெரிக்கு என்னமோ டாமிடம் பாசமும் அதிகம் தான். விட்டுக் கொடுக்காது. இல்லையா? டாம், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பீமரத சாந்தி பண்ணிக்குங்க! வந்து வாழ்த்தி வணங்கறோம். ஓகேயா? எங்கேப்பா யூனியன் ஆளுங்க எல்லாம்?? வரிசையா வந்து டாமை வாழ்த்துங்க. அநியாயத்துக்குத் தூங்குது யூனியன். :P:P:P

Wednesday, March 3, 2010

பஸ்ஸா காரா?

பஸ்ஸா காரா?
பஸ் நல்லதா கெட்டதா?
சமீப காலமா இது பெரிய சர்ச்சை ஆகிகொண்டிருக்கு! சமீப காலம்??? ஓ, பஸ் வந்தே ஒரு வாரம்தான் ஆகிறது. இது சமீப காலம்ன்னு தோணுவதற்கு அவ்வளோ சீக்கிரம் வளர்ந்துவிட்டது.

திடீர்ன்னு ஒரு நாள் ஜிமெய்ல் திறக்கும்போது பஸ் ன்னு புதுசா வந்திருக்கு. செயலாக்கலாமா ன்னு செய்தி வந்தது. அதிலே நிச்சயமா learn more ஆப்ஷன் இருந்தது. அப்புறமா என்னோட இன்னொரு மெய்ல் ஐ திறக்கிறப்ப வேண்டாம்ன்னும் சொன்னேன்; அது செயலாகலை. ஏன் இதை சொல்கிறேன்னா சிலர் கூகுள் தனக்கு ஒரு தேர்வை தரலைன்னு எழுதுகிறதுதான்.

பல வருஷங்களுக்கு முன்பே கூகுள் கருவிப்பட்டையை (டூல் பாரை) நிறுவம் போது வழக்கம் போல நிறுவலாமான்னு அனுமதி கேக்கறப்ப இது வழக்கமான "யாடா யாடா" இல்லை; கவனமா படிச்சுட்டு நிறுவுங்கன்னு சொன்னது. உள்ளே தானியங்கியா எதை மக்கள் தேடுறாங்கன்னு விவரம் சேமிக்கப்படும். ஆனா உங்க பெர்சனல் தகவல் ஏதும் சேகரிக்கப்படாது ன்னு தெளிவாகவே சொல்லியது. இப்படி அப்பட்டமா தன்னைப்பத்தி சொல்லிக்கொண்டது முதல் கூகுளை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

பஸ் ஐ திறந்தப்ப உன் அஞ்சல் பட்டியல்லே இருக்கிற இன்னின்னார் பஸ்லே ஏற்கெனெவே இருக்காங்க. அவங்களை தொடரலாமான்னு கேட்டுது. இருந்த 2-3 பேரை சரின்னு தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் நேரம் கொடுத்து இதைப்பத்தி ஆராய்ஞ்சப்ப இது என்ன விஷயம்ன்னு புரிஞ்சது.
பிரைவேட்டா அரட்டை அடிக்கத்தான் gசாட், gடாக் எல்லாமிருக்கே? அப்ப இது எங்கே ஃபிட் ஆகும்ன்னு பாத்தப்ப பொதுவான செய்திகளை சும்மா ஒரு போர்டிலே எழுதி வைக்கிற மாதிரி இதுன்னு புரிஞ்சு போச்சு. அதிலே யார் படிப்பாங்க மாட்டாங்கன்னு கவலை இல்லை, இல்லையா?
சிலர் நான் எழுதறது மத்தவங்க படிச்சுடறாங்களேன்னு புகார் பண்ணறது தமாஷா இருக்கு! அப்படி படிக்கத்தானே எழுதறோம்? ஏம்பா நீ மத்தவங்க எழுதறதை படிக்க முடியும் என்கிறப்ப அவங்களும் உன்னுதை படிக்க முடியும்ன்னு புரியலையா? தனியா யாருக்கும் ஏதும் சொல்லனும்ன்னா gமெய்ல் இருக்கு, சாட் இருக்கு, இருநூத்து இருபத்தெட்டரை வழி இருக்கு....
பஸ்லே போட்டுட்டு புகார் பண்ணுவானேன்?

ஆக மொத்தம் பஸ்ஸை கொஞ்சம் நிதானமா ஆராய்ஞ்சு பாத்தவங்க அது எதுக்கு பயன்படுமோ அது தேவையானா பயன்படுத்தலாம். நான் என்ன வாங்கினாலும் அதோட ஒரு பேப்பர் இருந்தா சும்மா அதை முழுக்க படிச்சுடுவேன். ஏதாவது எலக்ட்ரானிக் பொருள் வாங்கினா கையேட்டை (மேனுவலை) படிச்சுடுவேன். எதையும் பயன்படுத்தும் முன்னே அது எனக்கு புரியனும். புரியலைன்னா பயன்படுத்த மாட்டேன்.
ஆனா இப்படி இருந்தாதான் பஸ்ஸோட நுணுக்கம் புரியும்ன்னு இல்லையே! கொஞ்சம் நிதானத்தோட அணுகி இருந்தா ஒரு பிரச்சினையும் இல்லை.
இப்ப பாத்தா நிறைய எதிர்வினை இருக்கு. எல்லாரும் நான் போறேன் ன்னு குதிக்கறாங்க. எதுக்கு? பயம்தான். இது என்னன்னு சரியா புரியாத பயம்.
சில விஷயங்களை புரிஞ்சுண்டு அப்புறம் செய்கிறதை செய்யுங்க.
பஸ் ஓபன் போர்ட். எழுதறதை யாரும் பாக்கலாம். பொன் மொழிகள் எல்லோருக்கும் சொல்லக்கூடிய செய்திகள், விவரங்கள் எல்லாம் இதிலே வரலாம். நான் வீட்டுக்கு இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டேன் ன்னு கூட ஒத்தர் செய்தி போட்டார்!
பஸ்லே கொஞ்சம் தனிமை வேணும்ன்னா அதுக்கும் வசதி இருக்கு. நாம் சில நபர்களுக்கு மட்டுமே சில விஷயங்களை சொல்ல விரும்பறோம். அந்த சிலர் ஒத்தருக்கு ஒத்தர் நல்லா தெரிஞ்சவங்க. க்லூ க்லக்ஸ் க்லான் மாதிரின்னு வெச்சுக்குங்களேன்! முதல்லே ஒரு குழுவை gமெய்ல்லே உருவாக்குங்க. இஷ்டமான பேரை - என் முக்கிய எதிரிகள் மாதிரி- என்ன வேணா கொடுங்க. உருவாக்கிய பிறகு பஸ்ஸுக்கு வாங்க. ஒரு செய்தியை தட்டுங்க. கீழே பப்ளிஷ் டு வெப் ன்னு இருக்கும். பக்கத்திலே இருக்கிற அம்பு குறி மேலே சொடுக்கினா இன்னும் தேர்வு தெரியும். பிரைவேட் ன்னு இன்னும் ஒரு தேர்வு. இதை சொடுக்கினா உங்க மெய்ல் கணக்கிலே இருக்கிற குழுக்கள் பேர் தெரியும். (இதை எழுதறப்ப பாத்தா புதுசா குழு உருவாக்கற வசதிக்கு லிங்க் இந்த இடத்தில் பஸ்லேயே இருக்கு.) குழுவை தேர்ந்தெடுத்து சொடுக்கினா வேலை முடிஞ்சது. அந்த குழுவிலே இருக்கிறவங்களுக்கு மட்டுமே இந்த செய்தி தெரியும்.

சுருக்கமா சொன்னா பஸ் பப்ளிக் காரியர். யார் வேணுமானா ஏறுவாங்க இறங்குவாங்க. கார் பிரைவேட். நாம் அனுமதிச்சாத்தான் யாரும் ஏறமுடியும்.

வாழ்க்கையிலே ஏதானாலும் கொஞ்சம் நிதானம் தேவை. அப்பதான் கண்ட படி மாட்டிக்காம இருப்போம். ம்ம்ம்ம்ம் கல்யாணம் ஆகு முன்னே இதை சொல்லக்கூடாதா என்கிறீங்க? விதி வலியது! :-))

Friday, February 19, 2010

மை பிரண்டுக்கு கல்யாணம்

இன்று மலேசிய மண்ணில் பின்னூட்ட புயல், தேண் கிண்ணம் புகழ், மலேசிய மாரியாத்தா, யாராலும் யுவர் பிரண்ட் என பிரித்து சொல்ல முடியாதபடி பெயர் வைத்துக் கொண்ட மைப் பிரண்ட் என்ற அனுவின் திருமணம் இனிதே நடைபெறுகிறது. இனிமே தேண் கிண்ணத்துக்கு பாட்டு எழுதாமல் தனது தேனிலவுக்கு பாட்டு எழுதுவார் என நம்புவோம்.

நேற்றிரவே கஜா அனுப்பிய கள்ள் தோணிய பிடிச்சு ஜி3 அக்கா மலேசியாவுக்கு கடல் மார்க்கமாக போய் விட்டதாக தகவல்கள் நமக்கு வந்திருக்கிறது. மேலும் ரிசப்ஷனுக்கு செல்ல விருப்பம் உள்ள கீதா பாட்டி மற்றும் பலர் இன்று மாலை பெசண்ட் நகர் பீச்சில் காத்திருந்தால் கஜா அனுப்பும் அடுத்த தோணியில் பயணிக்கலாம்.

பாவப்பட்ட மணமகனுக்கு ரங்கமணிகள் கிளப் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மண மக்களுக்கு நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

Thursday, January 14, 2010

தகப்பன்சாமி - கார்த்தி

நமது பிளாக் யூனியனில் பலர், குறிப்பாக கல்யாணம் ஆனதும் தலையில் முக்காடு இட்டு கடந்த பல மாதங்களாக (சில வருடங்களாக) தலைமறைவாக இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

அதில் குறிப்பிட்ட புள்ளியான நமது கார்த்தி கடந்த நவம்பர் 5ம் தேதி ஒரு அழகான பெண்குழந்தைக்கு அப்பாவானார் என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு தெரிவித்து கொள்கிறேன். டயப்பர் மாத்துவதில் ஏதேனும் ஐயம் இருந்தால் இங்கு கேக்கவும். நமது யூனியன் மக்கள் உதவுவார்கள்.

சாக்லேட், கேக் அல்லது அஞ்சப்பரில் விருந்து கேட்க விரும்புபவர்கள் (ஜி3 அக்கா இது உங்களுக்கு தான்) உடனே அணுக வேண்டிய முகவரி:
http://mkarthik.blogspot.com

பிளாக் யூனியன் மற்றுமொரு இளம் தந்தைக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. :)

Friday, January 8, 2010

RTO - Any Vehicle details

Useful one for people in Karnataka...
You can now get any vehicle's details from RTO. Just SMS, RTO followed by registration no. (Example: RTO KA-05-MR-7678) to 56006.

This will be very useful in hit & run cases and selling theft vehicles. Pass it on to as many people you know.

This works well for Karnataka (KA) registered vehicles.

SMS charge will be Rs.3/- :)

Thursday, December 31, 2009

Sunday, November 22, 2009

நாகைப் புலிக்கு கண்ணாலம்

இதுவரை சூடான் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த நமது நாகை புலியை, சர்க்கஸ் புலியாக மாற்றி கூண்டில் அடைக்க முடிவு பண்ணி தகுந்த ரிங்க் மாஸ்டருக்காக சுற்றமும் நட்பும் வலையை விரித்து வைத்திருந்தனர். நமது புலியும் அப்பாவித்தனமாய் மாட்டிக் கொண்டது என ஏற்கனவே வலையில் விழுந்த நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

கும்மி அடிக்க வேண்டிய இடம்: லலிதா திருமண மகால், நாகப்படினம்,
நாள்: 28, 29 நவம்பர் 2009

மேலும் பல தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

ஏற்கனவே ஏதோ சொல்கிறேன் என சொல்லி வந்த நம் புலி, இனி என்னத்த சொல்வேன்? என்றோ ஒன்னும் சொல்றதுகில்லை என்றோ தனது வலைப்பூ பெயரை மாத்த போவதாக உறுதி செய்யா தகவல்கள் தெரிவிக்கிறது.

இனி நமது புலி சலாம் போடலாம், கரணம் கூட அடிக்கலாம், எல்லாம் ரிங்க் மாஸ்டரின் சாட்டை சுழற்றும் திறமையில் தான் இருக்கிறது. நமது பிளாக் யூனியன் மக்கள் அணி திரண்டு புலியை வாழ்த்த வேண்டுகிறேன்.

Friday, October 30, 2009

THANKS ONE AND ALL



Thanks to one and all.... My husband is fine and he will be back home tomorrow... He jus had some viral infection and is fine now... Spl thanks to Sumthi for the concern...

WISH YOU TO GET WELL SOON..


மக்களே ,நமது அன்பான தோழி சுதா என்கிற டிடி அக்காவின் மறுபாதியான ப்ரசன்னா என்கிற ரங்கமனி உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் உடல் நலமாக வேண்டியும் விரைவில் நல்ல தேக சுகத்துடன் சுகமாகி வீடு திரும்பவும் நீங்கள் ப்ரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Thursday, October 8, 2009

அன்பு நெஞ்சங்களே அணி திரண்டு வாரீர்.. உதவி செய்ய... !!!!

அன்பு நெஞ்சங்களாகிய ப்ளாக் உலக பெருமக்களே... உங்களிடம் ஒரு உதவி கோரி வந்துள்ளேன்...
உங்களால் முடிந்தால் செய்யவும்.. அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்த உதவி செய்ய கூடிய அன்பர்களிடம் சொல்லவும்
கீழே குடுத்துள்ள சுட்டிக்கு போகவும் அதில் அவர்களின் தேவைகள் கொடுக்க பட்டுள்ளன. இந்த நிறுவனம் உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவுகிறது.. ஆதலால் நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லவும் இப்படியே நமக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி அவர்களால் இயன்ற உதவிகளை செய்யட்டுமே... !!!

Sukriti

Sunday, October 4, 2009

Advance bday wishes to dreamzz




Happy Birthday Dreamz (a) Dinesh !!!

பிறந்தநாள் பரிசா தம்பிக்கு புடிச்ச விஷுவல் ட்ரீட்டு ;)))

Tuesday, September 1, 2009

Happy Birthday G3

ப்ளாக் யூனின் சார்பாக ஜி3 அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..



Wednesday, August 26, 2009

போர்க்கொடி தூக்கியாச்சு!சும்மா விடுவோமா?

எனக்கு சில கேள்விகள் இருக்கு.. சின்ன பொண்ணு தானே அதான் எவ்ளோ யோசிச்சும் விடை தெரியலை.. உங்களுக்கு தெரியும்னா சொல்லுங்களேன் கொஞ்சம்?//

இன்னும் எத்தனை வயசுக்குச் சின்னப்பொண்ணுனு சொல்லிக்கிறதுனு எல்லாரும் துப்போ துப்புனு துப்பறாங்களே! :P


1. கந்தசாமி படம் நல்லாருக்கு / பிடிச்சுருக்குனு சொன்னவங்க யாராவது இருக்காங்களா உங்களுக்கு தெரிஞ்சு?

அதெல்லாம் நாங்க பார்க்க மாட்டோம்.

2. இது வரை ஒபாமா அவர் சொன்னதுல என்னவெல்லாம் செஞ்சு இருக்காரு?

அங்கே தானே இன்னும் இருக்கீங்க? இந்தியா வந்தாச்சா? ஒபாமாவையே கேட்டிருக்கலாமில்லை? :P

3.வயசாகியும் இளம் ஹீரோனு விஜயகாந்த்துக்கு நினைப்புனு சொல்லும் அழகிரி ஏன் தலைக்கு ஒரு முடி விடாம டை அடிச்சுருக்காரு?

ஹிஹிஹி, நான் வரலை இந்த ஆட்டைக்கு. அப்புறம் ஆட்டோ வருமே!

4. கீதா பாட்டிக்கு எவ்ளோ வயசு? (அவங்களை தவிர வேறு யாரேனும் சொல்லலாம்..)

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன தைரியம்? வலை உலகத்தின் ஈடு இணையற்ற தலைவியைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க? என்ன ரொம்ப ஆட்டம் அதிகமாப் போயிட்டு இருக்கு போல?? :P :P:P

5. இந்தியாவில் ஸ்வைன் ஃப்ளூ எவ்ளோ தீவிரமா இருக்கு? இல்ல இது வெறும் மீடியா ஹைப்பா?

இதுக்குக் கொஞ்சம் சீரியஸாவே பதில். அங்கங்கே வர சீசனல் ஜுரத்தைக் கூட ஸ்வைன் ஃப்ளூனு சொல்லிக்கிறாங்க.

6. நம்ம கேயாழ்வார் அதாங்க பதிவர் கே.ஆர்.எஸ் எப்படி இத்தனை வலைப்பூக்களையும் வைத்து சமாளிக்கிறார்??? :O

ஹிஹிஹி, நாமளும் வச்சிருக்கோமில்லை?? நல்லவேளை உங்களுக்கு அந்த இடமெல்லாம் தெரியாது, பிழைச்சேன்! :))))))))

இந்த கேள்விகளில் எதற்கும் விட தெரியாமலோ தெரிந்தும் சொல்லாமல் இருந்தாலோ, உங்கள் தலை சுக்கு ஆயிரமாக வெடிக்கும்னு எல்லாம் ஒண்ணுமில்லை.. என்னவோ இதுக்காவது இந்த யூனியன் முழிக்குதானு டெஸ்ட் பண்ணறேன்..

யூனியன் எல்லாம் முழிச்சுட்டுத் தான் இருக்கு, இந்தப் போர்க்கொடி வந்து ஒண்ணும் எழுப்பவேண்டியதில்லை. எல்லாம் டிடி அக்கா பார்த்துக்கறாங்க!

கொடியின் கேள்விக் கணைகள்

எனக்கு சில கேள்விகள் இருக்கு.. சின்ன பொண்ணு தானே அதான் எவ்ளோ யோசிச்சும் விடை தெரியலை.. உங்களுக்கு தெரியும்னா சொல்லுங்களேன் கொஞ்சம்?


1. கந்தசாமி படம் நல்லாருக்கு / பிடிச்சுருக்குனு சொன்னவங்க யாராவது இருக்காங்களா உங்களுக்கு தெரிஞ்சு?

2. இது வரை ஒபாமா அவர் சொன்னதுல என்னவெல்லாம் செஞ்சு இருக்காரு?

3.வயசாகியும் இளம் ஹீரோனு விஜயகாந்த்துக்கு நினைப்புனு சொல்லும் அழகிரி ஏன் தலைக்கு ஒரு முடி விடாம டை அடிச்சுருக்காரு?

4. கீதா பாட்டிக்கு எவ்ளோ வயசு? (அவங்களை தவிர வேறு யாரேனும் சொல்லலாம்..)

5. இந்தியாவில் ஸ்வைன் ஃப்ளூ எவ்ளோ தீவிரமா இருக்கு? இல்ல இது வெறும் மீடியா ஹைப்பா?

6. நம்ம கேயாழ்வார் அதாங்க பதிவர் கே.ஆர்.எஸ் எப்படி இத்தனை வலைப்பூக்களையும் வைத்து சமாளிக்கிறார்??? :O

இந்த கேள்விகளில் எதற்கும் விட தெரியாமலோ தெரிந்தும் சொல்லாமல் இருந்தாலோ, உங்கள் தலை சுக்கு ஆயிரமாக வெடிக்கும்னு எல்லாம் ஒண்ணுமில்லை.. என்னவோ இதுக்காவது இந்த யூனியன் முழிக்குதானு டெஸ்ட் பண்ணறேன்..