Showing posts with label wedding wishes. Show all posts
Showing posts with label wedding wishes. Show all posts

Thursday, September 9, 2010

வாழ்த்துக்கள் ஜி3

அது என்னபா பேரு ஜி3, ஏதோ இன்சாட்-3 செயற்கைகோள் மாதிரியா..?

சமீபத்தில் 2006ல் ஒருத்தர் என்னிடம் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி தான் இது.. இப்படி நம் எல்லோராலும் ஜி3 என அன்பாக அழைக்கப்படும் காயத்ரி அக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி கண்ணாலம் நடக்கப் போவுது. முகூர்த்தம் அதி காலை ஆறு மணிக்கு.

வெளியூர்காரர்கள் முந்தைய நாளே வந்து பெசண்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோவில், பீச் எல்லாம் சுத்தி பாத்து விட்டு அப்ப்டியே துளசி டீச்சர் வீட்டில் டேரா போட்டுக் கொள்ளலாம். முகூர்த்தத்துக்கு இவ்ளோ சீக்ரமா எப்படி ஜி3 அக்கா எழுந்திருக்க போறாங்க? என்பது தான் என் மிகப் பெரிய சந்தேகம். :)

இடம்: பெசண்ட் நகர் கம்யூனிட்டி ஹால் (பேருந்து நிலையம் மிக மிக அருகில்).

இன்று மாலை (9 செப் 2010) மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கு. டிபன் போண்டாவும் கேசரியும் தானே..?

மணப்பெண் ஜி3க்கு வாழ்த்துக்கள், மணமகனுக்கு "விதி யார விட்டது..?" :))

பத்திரிகைன்னு சொல்லி அண்டை நாட்டுக்கு ஓலை அனுப்பியிருக்காங்க. ;)

Friday, February 19, 2010

மை பிரண்டுக்கு கல்யாணம்

இன்று மலேசிய மண்ணில் பின்னூட்ட புயல், தேண் கிண்ணம் புகழ், மலேசிய மாரியாத்தா, யாராலும் யுவர் பிரண்ட் என பிரித்து சொல்ல முடியாதபடி பெயர் வைத்துக் கொண்ட மைப் பிரண்ட் என்ற அனுவின் திருமணம் இனிதே நடைபெறுகிறது. இனிமே தேண் கிண்ணத்துக்கு பாட்டு எழுதாமல் தனது தேனிலவுக்கு பாட்டு எழுதுவார் என நம்புவோம்.

நேற்றிரவே கஜா அனுப்பிய கள்ள் தோணிய பிடிச்சு ஜி3 அக்கா மலேசியாவுக்கு கடல் மார்க்கமாக போய் விட்டதாக தகவல்கள் நமக்கு வந்திருக்கிறது. மேலும் ரிசப்ஷனுக்கு செல்ல விருப்பம் உள்ள கீதா பாட்டி மற்றும் பலர் இன்று மாலை பெசண்ட் நகர் பீச்சில் காத்திருந்தால் கஜா அனுப்பும் அடுத்த தோணியில் பயணிக்கலாம்.

பாவப்பட்ட மணமகனுக்கு ரங்கமணிகள் கிளப் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மண மக்களுக்கு நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

Sunday, November 22, 2009

நாகைப் புலிக்கு கண்ணாலம்

இதுவரை சூடான் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த நமது நாகை புலியை, சர்க்கஸ் புலியாக மாற்றி கூண்டில் அடைக்க முடிவு பண்ணி தகுந்த ரிங்க் மாஸ்டருக்காக சுற்றமும் நட்பும் வலையை விரித்து வைத்திருந்தனர். நமது புலியும் அப்பாவித்தனமாய் மாட்டிக் கொண்டது என ஏற்கனவே வலையில் விழுந்த நான் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

கும்மி அடிக்க வேண்டிய இடம்: லலிதா திருமண மகால், நாகப்படினம்,
நாள்: 28, 29 நவம்பர் 2009

மேலும் பல தகவல்களுக்கு இங்கு சொடுக்கவும்.

ஏற்கனவே ஏதோ சொல்கிறேன் என சொல்லி வந்த நம் புலி, இனி என்னத்த சொல்வேன்? என்றோ ஒன்னும் சொல்றதுகில்லை என்றோ தனது வலைப்பூ பெயரை மாத்த போவதாக உறுதி செய்யா தகவல்கள் தெரிவிக்கிறது.

இனி நமது புலி சலாம் போடலாம், கரணம் கூட அடிக்கலாம், எல்லாம் ரிங்க் மாஸ்டரின் சாட்டை சுழற்றும் திறமையில் தான் இருக்கிறது. நமது பிளாக் யூனியன் மக்கள் அணி திரண்டு புலியை வாழ்த்த வேண்டுகிறேன்.

Monday, November 3, 2008

தி.ரா.ச சார் வீட்டு கல்யாணம்


வாழ்க்கையில் சிலர் வீட்டு கல்யாணங்களை மிஸ் பண்ணவே கூடாது. ஒரு வேளை மிஸ் பண்ணி விட்டால் அப்புறம் ஒரே பீலிங்க்ஸா இருக்கும். எனவே ஒரு மாதத்துக்கு முன்னமே பிளான் பண்ணி தீவாளியோடு சேர்த்து லீவு போட்டு தி.ரா.ச சார் வீட்டு கல்யாணத்துக்கு ரிஷப்ஷனிலிருந்து, முகூர்த்தம் வரை கலந்து கொள்ள முடிந்தது.

ரிசப்ஷனுக்கு தங்கமணி, ஜுனியர், அவன் தம்பி அங்கதன் சகிதமாக மண்டபத்தில் வந்து இறங்கியதும் வாசலிலேயே பளீரிடும் வெண் சட்டை, டை சகிதம் தி.ராச.சார் உமா மேடம் சகிதமாக எங்களை வரவேற்றார். எனக்கு அப்பவே கண்ணை கட்டி விட்டது. உள்ளே நுழைந்தால் நாதஸ்வர கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து காமிராக்கள் பளிச்சிட மணமக்கள் மேடைக்கு வர சர்க்யூட் டிவி உதவியால் மேடையில் நடைபெறுவதை எந்த மூலையிலிருந்தும் பார்க்க முடிந்தது.

மொய்க்கு முந்து! பந்திக்கு பிந்து!(கீதா மேடம் நோட் தி பாயின்ட்!) என்ற கொள்கைப்படி வாங்கி வந்திருந்த கிப்ட்களுடன், அமெரிக்காவில் இருக்கும் எஸ்கேஎம்மின் மொய் கவருடன் வரிசையில் காத்திருந்தோம். கிப்ட் என்ன?னு தி.ராச. சார் பிரித்து பார்த்து பின்னூட்டம் இடுவார்.

தம்பியுடையான் ஏற்கனவே சாருக்கு உதவியாக வருபவர்களை வரவேற்பதிலும், கிப்ட்களை அடுக்கி வைப்பதிலும் முனைந்து விட்டான். மிக சரியாக மேடைக்கு ஏறும்போது தங்கஸ், புடவை பார்டர் வீடியோவில் சரியா தெரியாது! அதான்! என ஜுனியரை என் கையில் திணித்து விட்டது தற்செயலான விஷயம் என ஏமாந்து விட்டேன். அதுவரை என் மீது ஒரு நல்ல அபிப்ராயம் வைத்திருந்த பல காயத்ரி, வைஷ்ணவிகளின் அம்மாக்கள் முகத்தை திருப்பி கொண்டதும் தான் தங்கமணியின் நமட்டு சிரிப்பில் ஒளிந்திருந்த வில்லத்தனம் எனக்கு லேட்டாக புரிந்தது. பின் மனதை தேற்றிக்கொண்டு பந்திக்கு போய் பஃபே முறையில் ஒரு பெங்காலி ஸ்வீட்(பெயர் என்ன?), கட்லட், சாம்பார் சாதம், ரசம் சாதம்,(சில ஐட்டங்கள் மறந்து விட்டது) எல்லாம் அமுக்கி விட்டு நான் வந்திருந்த வாடகை காரில் ஏறிக் கொண்டேன்.

மறு நாள் முகூர்த்ததுக்கு காலை எட்டு மணிக்கே நான் மட்டும் வந்து சேர்ந்தேன். தம்பி அங்கேயே தங்கி விட்டான். காசி யாத்ரைக்கு கிளம்பிய மாப்பிள்ளை ஆழ்வார்பேட்டை சிக்னல் தாண்டி லஸ் கார்னர் வரை போய்விடும் அபாயம் இருந்ததால் சார் பெரிய மனது பண்ணி அழைக்க திரும்பி வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். தானே இயற்றிய ஒரு பாடலை, மைக் பிடித்து தன் சொந்த குரலில் இனிமையாக சார் பாட ஆரம்பிக்க ஊஞ்சல் களை கட்டியது. ராகம் என்ன ஆபேரியா?

மாப்பிள்ளை கட்டி இருந்த அதே ஸ்டெயில், ரகத்தில் தி.ராச சாரும் பட்டு வேஷ்டி கட்டி இருந்தது மற்றும் உமா மேடமும் கிளி பச்சை அரக்கு பார்டரில் பாந்தமான ஒன்பது கஜத்தில் இருந்தது மண்டபத்தில் பொண்ணு மாப்ளை யாரு? என்ற சந்தேக அலை பரவியதை தவிர்க்க முடியலை.

இடைப்பட்ட கமர்ஷியர் ப்ரேக்கில் நான் காலை டிபனுக்கு நழுவி விட்டேன். மெதுவான இட்லி, முறுகலான தோசை, நெய் மணக்கும் பொங்கல், தொட்டுக்க தேங்காய் மற்றும் தக்காளி சட்னி, பருப்பு சாம்பார் மற்றும் அசோகா அல்வா ( நான் அதை கேசரின்னு நினைச்சு கொசுறு எல்லாம் கேட்டு தொலைத்தேன்) என லைட்டா ஒரு டிபனை (இதுவாடா லைட்டு?) சாப்பிட்டு விட்டு பில்டர் காப்பியையும் சாப்பிட்டு விட்டு தெம்பாக வந்தமர்ந்தேன்.

இதற்கிடையில் முந்தின நாளே அம்பத்தூர்ல இருந்து மொபெட், பேருந்து, எலக்ட்ரிக் டிரேயின் என சகலவிதமான வாகனங்களிலும் ஆரோகணித்து கல்யாணத்துக்கு கிளம்பிய கீதா மேடம், ஒரு வழியா அடுத்த நாள் காலை மண்டபத்தில், நேரே டிபன் நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். எனக்கு சாம்பு மாமாவின் பாவமான முகம் ஏற்கனவே நினைவில் இருந்ததால் டக்குனு அடையாளம் கண்டு கொண்டு ஷேம நலன் விசாரித்தேன். பக்கத்தில் கர்ர்ர் புர்ர்ர்ர்னு சவுண்டு வரவே அது நிச்சயமாக சம்பு மாமாவை அடக்கியாளும் கீதா மேடமாக தான் இருக்கும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

பின் மூத்த பதிவரான மேடத்தை தக்க ஆசனத்தில் அமர்த்தி பேசிக் கொண்டு இருந்தோம். ஒரு காலத்தில் பதிவர் என அறியப்பட்டவரும், கீதா மேடத்தின் பினாமியுமான திருமதி வேதா, தன் ரங்கமணி பின் தொடர வந்து சேர்ந்தார். அதுக்கப்புறம் ஒரே வம்பு! வம்பு வம்பு தான். தனக்கு லட்சகணக்கான பின்னூட்டங்கள் மெயில் வந்து குவிவதாகவும் பப்ளிஷ் பண்ண நேரமே கிடைப்பதில்லை!னு மேடம் விட்ட அலப்பரை இருக்கே!


முகூர்த்தம் முடிந்ததும், ஏற்கனவே சாம்பு மாமா சமைத்து வைத்திருப்பதால் நாங்க கிளம்பறோம்! என அவசரம் அவசரமாக மேடம் கிளம்பி விட்டார். கிளம்பும் போதும் கையில் கிப்ட் பாக்ஸ் வைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பீன்ஸ் உசிலி (அன்று பீன்ஸ் கிலோ என்பது ரூபாய் சென்னையில்), கத்ரிகாய் சாம்பார், அவியல், கடலை பருப்பு பாயசம் (இரவு வயத்தை கலக்கி விட்டது), தக்காளி ரசம், அப்பளம், வடை என முகூர்த்த சாப்பாடு அமர்களமாய் இருந்தது. சிறிது நேரம் திராச சாருடன் பேசிவிட்டு மறக்காமல் தாம்பூல பை, பக்ஷணம் (லட்டு, ஐந்து சுத்து முறுக்கு, அதிரசம்) எல்லாம் நானும், மெளலி அண்ணாவும் வாங்கி கொண்டோம்.

சில துளிகள்:


திருமண மண்டபம் முழுக்க நம்மாழ்வார், பெரியாழ்வார், மணவாளமாமுனிகள்னு ஒரே வைஷ்ணவ பெரியவர்களின் திருபடங்கள். ஒரு போட்டோவில் பெயர் இல்லை, ஒரு வேளை கேஆரேஸ்ஸ் அண்ணாவா இருக்குமோ?னு உத்து உத்து பாத்தேன். :)


கொண்டை போட்டு பூ முடித்து ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஒரு மாமி, அம்பி உன் ஜாதகம் கிடைக்குமா?னு கேட்டார்கள். மேடையில் ஜுனியர் சகிதம் போட்டோவுக்கு போஸ் குடுத்து விட்டு நான் இறங்கிய பின் ஜாதகம் குடுக்க அந்த மாமியை தேடினேன். எஸ்கேப் ஆயிட்டாங்க போலிருக்கு. திராசா சார், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.

கேட்டரிங்க் கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்தின் பெயர் அம்பி கேட்டரர்ஸ் என்பது தற்செயலான ஒற்றுமையே.

Thursday, September 11, 2008

அருண்குமாருக்கு கல்யாணமுங்கோ!

ரங்கமணிகள் கிளப்புக்கு மீண்டும் ஒரு வருகை. ஆம்! மதுரை மைந்தன், அமெரிக்காவில் ஆணி பிடுங்கும் வீரன், அருண்குமார் இன்று(11-sep-2008) மண மகள் ஸ்வப்னாவை திருமணம் செய்கிறார்.


மண மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ பிளாக் யூனியன் சார்பாக எல்லோரும் வாழ்த்துவோம் வாங்க.


பி.கு: ஜி 3 அக்கா ரெண்டு நாளைக்கு முன்னாடியே முத பந்திக்கு முந்திவிட்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கிறது. :))