Friday, October 31, 2008

கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தாச்சு!


நாம எல்லாம் ஒரு இடத்துக்குப் போறதுனு ஆரம்பிச்சா சும்மாவா! ஒரு வாரம் முன்னேயே அறிவிப்பு எல்லாம் கொடுத்து, ஆலோசனைகள் நடத்தி, மெய்க்காப்பாளர்களைத் தயார் செய்து, எவ்வளவு இருக்கு! நம்ம உ.பி.ச. வேறே பார்த்து ரொம்ப நாட்கள் ஆயிடுச்சு, நானும் வருவேன்னு சொல்லி இருந்தாங்க. அம்பிதான் ஒரு வாரம் முன்னேயே வந்து சேர்ந்தாச்சு. ஆனால் இன்னும் அம்பத்தூருக்கு வர வழி தெரியலையாம். தொலைபேசியில் பேசிட்டு, வரேன்னு சொன்னதோடு சரி. நல்லவேளையாப் பருத்திக் கொட்டை மட்டும் வாங்கலை, வந்ததும் வாங்கிக்கலாம்னு வச்சிருக்கேன்.

அம்பி மூன்று நாட்களும் சத்திரத்தில் டேரா போடப் போவதையும் தெரிந்து கொண்டேன். நம்பகமான தகவல்கள் கிடைச்சது. மெளலியும் வரப் போகின்றார் என்பதும் தெரிய வந்தது. டிக்கெட் கிடைச்சதும், தொலைபேசறேன்னு சொன்ன மெளலி, கல்யாணத்தில் என்னைப் பார்த்தபின்னரும் வாயே திறக்கலை. :P நாங்க வழக்கம்போல் அமளி, துமளி இல்லாமல் இம்முறை கிளம்பி, என்ன ஆச்சரியம்?? வீட்டை விட்டுக் கிளம்பும்போது உடனேயே வண்டி ஸ்டார்ட் ஆக, அதிர்ச்சியில் நான் வண்டியில் ஏறத் தோணாமல் முழிக்க, ஏறுனு அவர் அதட்ட, ஏறி உட்கார்ந்ததும், வண்டி நின்றது. எனக்கும் போன மூச்சுத் திரும்பி வந்தது. மறுபடியும் பெட்ரோல் டாங்கை உலுக்கிவிட்டு வண்டியைக் கிளப்ப அரை மனசா வண்டி கிளம்ப நானும் ஏறி உட்கார்ந்து கொண்டேன், கொஞ்சம் பயத்தோடேயே. பழைய வண்டிக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. ஏறி உட்கார்ந்தால் கிளம்ப மறுக்கும். பிடிவாதமாய் அதிலேயே போகணும்னு நான் இருக்க, என்னைக் கேட்காமல் அதை விற்றுவிட்டார். அந்த வண்டி இந்தப் புது வண்டி கிட்டே நல்லாப் போட்டுக் கொடுத்திருக்கு போல! அது இருக்கும் வரைக்கும் இது ஒழுங்காத் தான் இருந்தது. இப்போ இதுவும் கத்துக்கிட்டது.

திரு திராச அவர்கள் பத்திரிகை அனுப்பி விட்டுத் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார். ஆகவே நேற்று மாலை வரவேற்புக்குச் செல்லவேண்டும் என நினைத்துப் பின்னர் அப்போக் கிளம்ப முடியாமல் இன்று காலை திருமண நிகழ்ச்சிக்குச் சென்றோம். நாங்கள் சென்ற சமயம் ஊஞ்சலில் பெண்ணும், மாப்பிள்ளையும் ஆட, எல்லாரும் பாடிக் கொண்டிருந்தனர். போய்ச் சிறிது நேரத்துக்கு எல்லாம் திரு திராச அவர்களே பாட ஆரம்பித்தார். அவர் பாட, மற்றவர்கள் பாட என ஊஞ்சல் ஆரம்பித்தது. நாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்து அம்பியையோ, கணேசனையோ பார்க்கலாம் என்று நினைத்தால் அவங்க யாருமே கண்ணில் படலை. டைனிங் ஹாலில் இருந்திருக்காங்கனு அப்புறமாத் தெரிஞ்சது. அம்பிக்கு அது வழக்கம் தானேன்னு நினைச்சுட்டு நாங்க போய் டிபன் சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு நான் கீழே போக நின்னுட்டு இருந்தப்போ இந்த டாம் ஒரு மூணு தரம் இப்படியும், அப்படியும் ஏதோ வேலை இருக்கிறாப்போல் போயிட்டுப் போயிட்டு வர, என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,., என்ன ஒரு சோகம்!

கடைசியில் என்னோட ம.பா.வைப் பார்த்துட்டு எங்கேயோ பார்த்த முகமா இருக்கேனு டாமின் மூளையில் பல்ப் எரிய, அப்புறமா என்னைக் கண்டு ஓடிவர, கணேசனோ உடனேயே என்னைக் கண்டு கொள்ள, டாமைப் பார்த்துப் பல்லைக் கடித்தேன். அப்புறம் நாங்க கீழே போனதும் டாமும், அவர் தம்பியும் வந்து உட்கார்ந்து கொண்டனர். மெளலி இதோ வந்தாச்சு, பஸ்ஸில் இருந்து இறங்கியாச்சு, என்று நேர்முக வர்ணனையைக் கொடுத்தார் கணேசன். அதுக்கு முன்னாலேயே உ.பி.ச. அவங்க கணவரோட வந்தாங்க. பாவம், என்னைத் தொடர்பு கொள்ளறேன்னு சொல்லி இருந்தாங்க. நாம நம்ம வழக்கம்போல் செல்லை வீட்டிலேயே பத்திரப்படுத்தி வச்சுட்டுப் போனதாலே அவங்களாலே தொடர்பு கொள்ள முடியலை என்றாலும் வந்துட்டாங்க. அப்புறமாய் மெளலியும் வந்தார். வந்ததும் மதுரைக்காரர் ஒருத்தரைத் தேடிப் பிடிச்சுக் கண்டு பிடிச்சு அவரோடயே பேசிட்டு இருந்துட்டு, எங்க பக்கம் வந்ததும், கணேசன், அம்பி இவங்களோட மட்டும் பேசிட்டு இருந்தார். சரிதான், கன்னடக்காரங்க இப்படித் தான் தமிழ் துரோகியா இருப்பாங்க போல என்று நினைத்துக் கொண்டிருக்க அங்கே மேடையில் தாலி கட்டித் திருமணம் முடிஞ்சுட்டது. ஆசிகளை வழங்கிட்டு நாங்களும் கிளம்பிட்டோம்.
செளபாக்கியவதி பிருந்தாவுக்கும், சிரஞ்சீவி பாலசந்திரனுக்கும் இனிய திருமண வாழ்த்துகள். மகிழ்ச்சியான மணவாழ்வுக்கும் வாழ்த்துகின்றோம்.

Sunday, October 26, 2008

எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நண்பர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும்
ப்ளாக் யூனியனின்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.