Thursday, July 31, 2008

மதுரை மைந்தனுக்கு நாளை பிறந்த நாள்

மதுரை என்றவுடன் மணக்கும் மல்லிகை நினைவுக்கு வந்தது போய் இப்பவெல்லாம் மதுரையம்பதி என்ற மெளலி அண்ணா தான் நினைவுக்கு வருகிறார்.

இளம் நொங்கு அல்லது இனிமையான நீரையுடைய இளனீர் குடித்து முடித்தவுடன் ஒரு விவரிக்க முடியாத புத்துணர்ச்சி வருமே? அனுபவித்து இருக்கிறீர்களா? அதே போல், பழகுவதற்க்கு இனிமையானவரும், தம் சொற்களால் பிறர் மனம் சற்றும் வாடாதபடி வார்த்தைகளை வெகு ஜாக்ரதையாக பேசுபவரும், தன்னடக்கத்தை அனுமனிடமிருந்து பெற்றவரும், ஆச்சார்ய ஹ்ருதயத்தில் குரு உபாசனை செய்பவரும், லலிதையின் ரூபத்தை செளந்தர்ய லஹரி வாயிலாக மிக எளிமையாக நமக்கு அளிப்பவரும், சிதம்பர ரகஸ்யத்தில் பின்னூட்டத்தில் கலக்குபவரும், எதிர்கட்சியிலிருந்து தப்பித்து நமது கட்சிக்கு வந்து பலம் சேர்பவரும், மதுரையம்பதி என்ற தமது சொந்த பிளாகில் கூட மொக்கை போட தெரியாத அப்பாவியுமான மெளலி அண்ணாவுக்கு நாளை ஆகஸ்ட் 2ம் நாள் பிறந்த நாள் வருகிறபடியால் வாழ்த்த இந்த அடியேனுக்கு வயதில்லை, வணங்குகிறோம்.


(அண்ணாவுக்காக, முட்டை இல்லாத கேக்)

பி.கு: இவங்க வீட்டு ரசம் ரொம்ப நல்லா இருக்கும், அன்பர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். :))

Tuesday, July 29, 2008

ஹெல்த் அட்டவணை


(click the image to view in big size)
ரொம்ப நாளாச்சு இங்க பதிவு போட்டு.இந்த அட்டவனையை பின்பற்ற முடியுமா?னு பாருங்க.

Saturday, July 26, 2008

சோழர் கால நாணயங்கள்

இப்பல்லாம் மீடியா படுத்தற பாடு சகிக்கலை.


நேற்று பங்களூருவில் தொடர் குண்டு வெடிப்புன்னு கலக்கினதை சொல்லலை.
இன்றைய தினமலர் பத்திரிகை செய்தியை பருங்க:
http://tinyurl.com/5bnqsd

சோழர் கால நாணயங்கள் சீர்காழி அருகே கண்டுபிடிப்பு

ஜூலை 26,2008,00:00 IST

சீர்காழி : சீர்காழி அருகே சோழர் காலத்து சிவன் கோவில் திருப்பணியின் போது பழங்கால நாணயம் மற்றும் மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. சீர்காழி அருகே உள்ள அரிகரன்கூடல் கிராமத்தில் பழங்கால சிவன் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவில் தற்போது திருப்பணிக்காக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக அப்பகுதி மக்கள் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காப்பாட்சியர் முத்துசாமியை வரவழைத்தனர்.


அவர் ஆய்வு செய்தபோது கோவிலில் இருந்த பழைய திருநீற்று மாடத்தில் இரண்டு டேனிஷ் கால செம்பு நாணயங்கள், விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த ஒரு நாணயம், உருது எழுத்து பொறித்த நாணயம் உட்பட நான்கு நாணயங்களும் ஒரு வெள்ளி மோதிரமும் கிடைத்தது. மேலும், 12ம் நூற்றாண்டை ஆண்ட சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதும் தெரியவந்தது.


கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால நாணயங்களும், மோதிரமும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தலைப்பு என்னவோ சோழர்கால நாணயங்கள். உள்ளே படிச்சா ஆச்சரியம்!
//டேனிஷ் கால செம்பு நாணயங்கள், விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த ஒரு நாணயம், உருது எழுத்து பொறித்த நாணயம்//

சோழர்கள் தீர்க்க தரிசிகளா இருந்து இருக்கணும். ம்ஹும் அது கூட போதாது. டைம் மெஷின் வெச்சு இருந்து இருக்கணும். பின்னே? விக்டோரியா படமும் உருதுவும் எப்படி வந்ததோ?

Friday, July 25, 2008

HAPPY BIRTHDAY TO DEAR FRIEND.

HAI BHARANI,

MANY MANY HAPPY RETURNS TO YOU
FROM BLOG UNION.

Tuesday, July 22, 2008

HAPPY BIRTHDAY TO YOU DEAR FRIEND.


இன்று பிறந்த நாளை வெகு சிறப்பாக ஊரெல்லாம் ஏன்
மலேசிய மக்களெல்லாம் கூட திருவிழாவாக
கொண்டாடும் (அரசாங்கமே இன்று விடுமுறை
விட்டதாமே...?) எங்கள் "மலேசிய மாரியாத்தா"
என்று அன்புடன் அழைக்க படும் அனுவுக்கு இந்த
ப்ளாக் யூனியன் சார்பாகவும் என் சார்பாகவும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Sunday, July 13, 2008

Especially for Tom, I mean for Ambi!

இன்னிக்கு தினசரியில் வந்த ஒரு செய்தி! அம்பி போன்ற விடாக்கண்டர்களுக்கு மொய் வசூலிக்க ஒரு வழி!

மொய் வசூலிக்க புது கருவி அறிமுகம்:
திருமணத்திற்குச் சென்றுவிட்டு மணமக்களை வாழ்த்தும்போது, பரிசுப் பொருளை மறந்துவிட்டது நினைவுக்கு வருகிறதா? அல்லது மொய்ப்பணம் எடுத்து வர மறந்துவிட்டதா? இவர்களுக்கு உதவுவதற்காக புது இயந்திரம் வந்துள்ளது. கிரெடிட் கார்டை செருகி, எவ்வளவு தொகை மொய் செலுத்த வேண்டும் என்று பொத்தானை அமுக்கினால் போதும். மறுநாள் மணமக்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும்.
உலகிலேயே (அப்பாடா, நிம்மதி! :P) புதுமையான இந்தக் கருவி இஸ்ரேலில் அறிமுகமாகி உள்ளது. இதற்காக கருவியைச் சொந்தமாக வாங்கத் தேவையில்லை, வாடகைக்குக் கிடைக்கிறது. ஆறாயிரம் ரூபாய் (அம்மாடியோவ்) கட்டணமாகச் செலுத்தி இயந்திரத்தை எடுத்துச் செல்லலாம்.

திருமண தினத்துக்கு முன்யே, இந்தக் கருவிக்கு முன்பதிவு செய்துவிட வேண்டும். எந்த வங்கியில் பணம் செலுத்தப் படவேண்டும், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைத் தெரிவித்தால், அதற்கேற்ப, இயந்திரம் ப்ரோகிராம் செய்யப் படும். திருமண தினத்தன்று, மண்டபத்தில் இந்தக் கருவியைப் பொருத்திவிட வேண்டும்.

திருமணப்பரிசு அல்லது மொய்ப்பணம் செலுத்த விரும்புவோர் தங்களின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி இந்த இயந்திரத்தில் விரும்பும் தொகையைப் பரிசாக அளிக்கலாம். அதற்குரிய ரசீது, பிரிண்ட் அவுட்டாக இயந்திரத்தில் இருந்து தரப்படும்.

அதுமட்டுமின்றி, இந்த இயந்திரத்தில் இணைக்கப் பட்டுள்ள பெட்டியில், கவரில் பணம் போட்டு, அதைப் போட்டுவிட்டுச் செல்லலாம். இவ்வாறு பரிசாக அளிக்கப் பட்ட மொத்தத் தொகையும், திருமண தினத்துக்கு மறுநாள், மணமக்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டுவிடும்.


நன்றி: தினமலர் பக்கம் 4 காலம் ஒன்று.

டிஸ்கி: நாமெல்லாம் மொய் கொடுக்காமலேயே தப்பிச்சுடுவோமில்ல?? நல்லவேளையா கிரெடிட் கார்டும் கிடையாது, டெபிட் கார்டும் இல்லை, பிழைச்சேன்! :P :P