
மொய் வசூலிக்க புது கருவி அறிமுகம்:
திருமணத்திற்குச் சென்றுவிட்டு மணமக்களை வாழ்த்தும்போது, பரிசுப் பொருளை மறந்துவிட்டது நினைவுக்கு வருகிறதா? அல்லது மொய்ப்பணம் எடுத்து வர மறந்துவிட்டதா? இவர்களுக்கு உதவுவதற்காக புது இயந்திரம் வந்துள்ளது. கிரெடிட் கார்டை செருகி, எவ்வளவு தொகை மொய் செலுத்த வேண்டும் என்று பொத்தானை அமுக்கினால் போதும். மறுநாள் மணமக்கள் வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும்.

திருமண தினத்துக்கு முன்யே, இந்தக் கருவிக்கு முன்பதிவு செய்துவிட வேண்டும். எந்த வங்கியில் பணம் செலுத்தப் படவேண்டும், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைத் தெரிவித்தால், அதற்கேற்ப, இயந்திரம் ப்ரோகிராம் செய்யப் படும். திருமண தினத்தன்று, மண்டபத்தில் இந்தக் கருவியைப் பொருத்திவிட வேண்டும்.
திருமணப்பரிசு அல்லது மொய்ப்பணம் செலுத்த விரும்புவோர் தங்களின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி இந்த இயந்திரத்தில் விரும்பும் தொகையைப் பரிசாக அளிக்கலாம். அதற்குரிய ரசீது, பிரிண்ட் அவுட்டாக இயந்திரத்தில் இருந்து தரப்படும்.
அதுமட்டுமின்றி, இந்த இயந்திரத்தில் இணைக்கப் பட்டுள்ள பெட்டியில், கவரில் பணம் போட்டு, அதைப் போட்டுவிட்டுச் செல்லலாம். இவ்வாறு பரிசாக அளிக்கப் பட்ட மொத்தத் தொகையும், திருமண தினத்துக்கு மறுநாள், மணமக்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டுவிடும்.
நன்றி: தினமலர் பக்கம் 4 காலம் ஒன்று.
டிஸ்கி: நாமெல்லாம் மொய் கொடுக்காமலேயே தப்பிச்சுடுவோமில்ல?? நல்லவேளையா கிரெடிட் கார்டும் கிடையாது, டெபிட் கார்டும் இல்லை, பிழைச்சேன்! :P :P
11 comments:
என் கல்யாணம் முடிஞ்சு, புள்ளையும் பொறந்து, அதுக்கு பெயரும் வெச்சாச்சு. :))
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. :p
//என் கல்யாணம் முடிஞ்சு, புள்ளையும் பொறந்து, அதுக்கு பெயரும் வெச்சாச்சு. :))//
@அம்பி, மொய்க்குக் காரணமா இல்லை??? :P ஆயிரம் காரணங்கள் இருந்தும், ஏன் இந்த சமாளிப்பு????? :P
சூப்பர்.. தகவலை தந்ததுக்கு நன்றி. அம்பி நீங்க குழந்தையின் ஆயுஷ் ஹோமத்துக்கு யூஸ் பண்ணலாமே?.
//சூப்பர்.. தகவலை தந்ததுக்கு நன்றி. அம்பி நீங்க குழந்தையின் ஆயுஷ் ஹோமத்துக்கு யூஸ் பண்ணலாமே?.
//
இது!!!!!!!!!! அம்பி நோட் தி பாயிண்ட்!!! :P :P :P
\டிஸ்கி: நாமெல்லாம் மொய் கொடுக்காமலேயே தப்பிச்சுடுவோமில்ல?? நல்லவேளையா கிரெடிட் கார்டும் கிடையாது, டெபிட் கார்டும் இல்லை, பிழைச்சேன்! :P :P\\
ம்ம்ம்...எப்படி எல்லாம் எஸ்கேப்பு ஆகுறிங்க!! ;)
ஹிஹிஹி, கோபிநாத், இன்னும் கல்யாணம் ஆகலை இல்லை, முன்னாடியே சொல்லிடுங்க! இந்த மெஷினை வாங்கி நீங்க வச்சதும், நான் எஸ்கேப் ஆயிடறேன்! :P :P :P
//இதற்காக கருவியைச் சொந்தமாக வாங்கத் தேவையில்லை, வாடகைக்குக் கிடைக்கிறது. ஆறாயிரம் ரூபாய் (அம்மாடியோவ்) கட்டணமாகச் செலுத்தி இயந்திரத்தை எடுத்துச் செல்லலாம்.//
வாடகை முடிந்து கருவியை கொண்டு போகும்போது வாடகைக்காக மொய்ப் பணத்தையும் கையோடு கொண்டு போயிருவாங்க போலயிருக்கே:))
Why we should we bother about this . we will plan in such a manner that we will reach india or chennai after comfirming the event is over.
ampi thatukku vaziyaa poonthu vanthaa,namapathaan kolaththukku atile poonthu vanthutuvomle
கோவை Icici வங்கியில் பணம் deposit செய்வதற்கு ஒரு இயந்திரம் வைதுள்ளார்கள். அதை தூக்கி சாப்பிட்டுவிட்டது இந்த செய்தி.
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்
தகவலை தந்ததுக்கு நன்றி
Post a Comment