Saturday, July 26, 2008

சோழர் கால நாணயங்கள்

இப்பல்லாம் மீடியா படுத்தற பாடு சகிக்கலை.


நேற்று பங்களூருவில் தொடர் குண்டு வெடிப்புன்னு கலக்கினதை சொல்லலை.
இன்றைய தினமலர் பத்திரிகை செய்தியை பருங்க:
http://tinyurl.com/5bnqsd

சோழர் கால நாணயங்கள் சீர்காழி அருகே கண்டுபிடிப்பு

ஜூலை 26,2008,00:00 IST

சீர்காழி : சீர்காழி அருகே சோழர் காலத்து சிவன் கோவில் திருப்பணியின் போது பழங்கால நாணயம் மற்றும் மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. சீர்காழி அருகே உள்ள அரிகரன்கூடல் கிராமத்தில் பழங்கால சிவன் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த கோவில் தற்போது திருப்பணிக்காக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கோவிலின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக அப்பகுதி மக்கள் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காப்பாட்சியர் முத்துசாமியை வரவழைத்தனர்.


அவர் ஆய்வு செய்தபோது கோவிலில் இருந்த பழைய திருநீற்று மாடத்தில் இரண்டு டேனிஷ் கால செம்பு நாணயங்கள், விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த ஒரு நாணயம், உருது எழுத்து பொறித்த நாணயம் உட்பட நான்கு நாணயங்களும் ஒரு வெள்ளி மோதிரமும் கிடைத்தது. மேலும், 12ம் நூற்றாண்டை ஆண்ட சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதும் தெரியவந்தது.


கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால நாணயங்களும், மோதிரமும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தலைப்பு என்னவோ சோழர்கால நாணயங்கள். உள்ளே படிச்சா ஆச்சரியம்!
//டேனிஷ் கால செம்பு நாணயங்கள், விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த ஒரு நாணயம், உருது எழுத்து பொறித்த நாணயம்//

சோழர்கள் தீர்க்க தரிசிகளா இருந்து இருக்கணும். ம்ஹும் அது கூட போதாது. டைம் மெஷின் வெச்சு இருந்து இருக்கணும். பின்னே? விக்டோரியா படமும் உருதுவும் எப்படி வந்ததோ?

5 comments:

gils said...

//சோழர் கால நாணயங்கள் //
oru comma missingunu nenakren...sozhar kaala, naanayangal :D avanga timela kedaicha micha country coinsnu kuda irunthirukalmla :D

Geetha Sambasivam said...

ada, media eppadi velai seyyuthunu puriyuthullaa?? appuram enna?? pesamal paper vangarathai niruthunga! :P padichal ippadithan thonum!

Geetha Sambasivam said...

ada, media eppadi velai seyyuthunu puriyuthullaa?? appuram enna?? pesamal paper vangarathai niruthunga! :P padichal ippadithan thonum!

கோவை விஜய் said...

//தலைப்பு என்னவோ சோழர்கால நாணயங்கள். உள்ளே படிச்சா ஆச்சரியம்!
//டேனிஷ் கால செம்பு நாணயங்கள், விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த ஒரு நாணயம், உருது எழுத்து பொறித்த நாணயம்//

சோழர்கள் தீர்க்க தரிசிகளா இருந்து இருக்கணும். ம்ஹும் அது கூட போதாது. டைம் மெஷின் வெச்சு இருந்து இருக்கணும். பின்னே? விக்டோரியா படமும் உருதுவும் எப்படி வந்ததோ?//

வரலாற்று செய்திகளை இப்படி தருகிறார்களே!

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ambi said...

@திவாண்ணா, கீதா மேடம் சரியா சொல்லி இருக்காங்க,

பேசாம நீங்களும் பேப்பர் வாங்கறத நிறுத்திட்டு, அவங்கள மாதிரியே ஓசி பேப்பர் படிக்க ஆரம்பிங்க. :p