தயிர் நல்லதா?
உணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லதா? பால் பருகுவது நல்லது. ஆனால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். என்ன காரணம்?
தயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மார்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜ“ரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும். தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம். தயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. "தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்" என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.
குளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும். இந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், உடல் வீக்கம், பெரும்பாடு போன்ற கொடிய நோய்கள் தோன்றும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் தயிர்(Curd) சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
டாக்டர் பி.எல்.டி.கிரிஜா.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ada kodumaiye! ennala thayir ellam sapidama irukka mudiadhu :-(((
தயிர் சூடு என்பது தெரியும்... இந்த மோர் மேட்டரு... தயிர்ல தண்ணி ஊத்தி மோர் ஆக்குறது இரவில் ... அதுக்கும் கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்.. தெரிந்தவர்கள்..
மோர் அல்சர் நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல் நீரிழிவு நோயாளிகளும் நிறையச் சாப்பிடலாம். உடல் எடையும் குறையும், புலி note this point, weight will loose! ஒரு கப் மோர்ன்னா குறைந்த பட்சம் 5 கப்பாவது நீர் சேர்த்துப் பருக வேண்டும், அது சரி, இதெல்லாம் கூடப் போடலாமா? அப்படின்னா நம்ம கிட்டே நிறைய ஷ்டாக் இருக்கே! :)))))))
ஆஹா, உபயோகமான குறிப்புகள். ஆனா என்னால தயிர் எல்லாம் சாபிடாம இருக்க முடியாது. :)
//ஒரு கப் மோர்ன்னா குறைந்த பட்சம் 5 கப்பாவது நீர் சேர்த்துப் பருக வேண்டும், //
@geetha paati, அதுக்கு மொத்தமா 5 கப்பு நீரையே குடிக்கலாம்.
//இதெல்லாம் கூடப் போடலாமா? அப்படின்னா நம்ம கிட்டே நிறைய ஷ்டாக் இருக்கே//
ஓகே! ஷ்டார்ட் யுவர் மொக்கைஸ்
@ஆப்பு அம்பி,
எப்போப் பார்த்தாலும் ஓ.சி. சாப்பாடு சாப்பிடறவங்களுக்கு இது எல்லாம் எங்கே புரியும்? :P
sumathi supera thaan iruku...
enaku thayir illena no sapadu.. avalavu thaan.. so neer moreavathu undu
ஆஹா! அப்ப்படியா? நல்ல பதிவு..
Post a Comment