Monday, November 26, 2007

குருவுக்கு "மிஞ்சிய" சிஷ்யர்கள்!!!!!!!!

நேத்து ஏதோ ஒரு பத்திரிகையில் படிச்ச ஜோக் இது:
ஒருவன்: அதோ, போறான் பாரு, அவன் தான் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்!!!!!
மற்றவன்: அவ்வளவு கெட்டிக்காரனா அவன்?
முதல்வன்: இல்லை, இல்லை, அந்த குருவோட எல்லா சிஷ்யங்களும் ஓடிப் போயிட்டாங்க, "மிஞ்சினது" இவன் ஒருத்தன் தான்!!!!"

இதை படிச்சதும் என்னோட நிலைமை தான் நினைவுக்கு வந்தது. ஆரம்பம் முதலே "அம்பி"சிஷ்யன் கிடையாது. எதிரணியிலே உளவு பார்க்க நியமிச்ச ஒரு ஆள்னு ப்ரூவ் ஆயிருக்கு பலமுறை. என்றாலும் கல்யாணத்துக்கப்புறம் அம்பி சமையல் மட்டுமில்லாமல், இப்போ பாத்திரம் வேறே தேய்க்க வேண்டி இருக்குனு ஒரே அலுப்பு, கடுப்பு! (ஹிஹிஹி, நல்லவேளை, அம்பத்தூர் வரலை, மொய் மிச்சம் ஆச்சு!!!) கைப்புள்ளயோ, என்றால் அதியமான் நெடுமானஞ்சியாக இருந்தவர், இப்போ "தங்கமணிக்கஞ்சி"யாக மாறி, அதிரசப் பாகு சரியா வருமா? இட்லிக்கு உளுந்து போதுமானு கவலையிலே இருக்கார். கார்த்திக், முதல்முதல் எனக்காகப் போஸ்டர் எல்லாம் அடிச்சவர், அசின் விஷயத்திலே அம்பியோட ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டதைக் கூட மறந்து மன்னிச்சு, நானும் ஒரு தொண்டனாக ஏற்றுக் கொண்டவர், இப்போ என்ன ஆச்சுனு தெரியலை! ஆளே இருக்கிற இடம் தெரியலை!!

மணிப்ரகாஷ் அம்பி மாதிரித்தான், கல்யாணம் ஆனதும், (க்ர்ர்ர்ர்ர், சொல்லவே இல்லை, போட்ட மெயிலுக்கும் பதில் இல்லை) தங்கமணிக்கஞ்சியாக மாறி இப்போ என்னோட வலைப்பக்கம் வரதே இல்லை. எப்போவாவது, யூனியன் மூலமா ஏதோ மெசேஜ் கொடுத்துட்டு அமுக்கமா இருந்துடறார். மணிப்பயல், நாம தமிழ் சொல்லிக் கொடுத்தோமேனு, நன்றி உணர்வோட இருந்தாலும், அப்போ அப்போ அவரோட பங்கு உணர்ச்சி வெள்ளமாய்ப் பீறிட்டு வந்துடுது. பத்தாதுக்கு, இப்போ புதுசா ஒரு பெண்பார்க்கும் படலம் வேறே!!!!!! சரி, அபி அப்பாவாவது மிஞ்சுவார்னு பார்த்தால், அவர் என்னமோ இப்போத் தான் கமல் புதுசா படங்களிலே லாஜிக் இல்லாமல் எடுக்கறாப்பலயும், அதை இவர்தான் முதன் முதல் கண்டு பிடிச்சாப்பலேயும், எழுத்துப் பிழையோட எழுதிட்டு இருக்கார். சாட்டிங்கிலே கூட தப்புத் தப்பாத் தான் எழுதுவேன்னு ஒரே அடம்!!!! இப்போக் கொஞ்ச நாளாத் தலை மறைவு!!!!

சரி, ரசிகனாவது ஏதாவது வந்து ஒப்பேத்துவார்னு பார்த்தால், "டீச்சர், டீச்சர்"னு சொல்லியே தப்பா எழுதி மானத்தை வாங்கிட்டு இருக்கார். அதை என்னோட பதிவிலே மட்டும் சொன்னாப் பரவாயில்லை. போகிற இடத்தில் எல்லாம் சொல்லிட்டு இருக்கார். சரி, நம்ம சகோதரிகளாவது தேறுவாங்கனு பார்த்தால், இந்த எஸ்கேஎம், எல்லார் கூடயும் பேசிட்டு இருக்கார், ஆள் என்னனு கூடக் கேட்கிறதில்லை, அதான் போகட்டும், உமாகோபு இருக்காங்களே, முதல்முதல் நம்மையும் ஒரு தலைவியா மதிச்சுச் சொன்னாங்களேன்னு பார்த்து அவங்களை உ.பிச.வா நியமிக்கலாம்னு ஏற்பாடு செய்தால் ஆள் எங்கே இருக்காங்கன்னே தெரியலை. இந்தப் போர்க்கொடி, என்னோட வலைப்பக்கத்திலே கமெண்ட்ஸ் எழுதறதுக்காகவே ப்ளாக் ஆரம்பிச்சவங்கள்ளே ஒருத்தி, என்னமோ பெரிசா அலட்டல், கடையிலே வாங்கி மணையிலே வச்சு தான் தான் செய்ஞ்சதாய் ஒரே பீத்தல் வேறே. மைஃப்ரண்டு, எப்போ வருவாங்கனு சொல்லவே முடியாது. ஜி3, ஜி3 பண்ணறதுக்கே ஒழுங்கா உதவ மாட்டேங்கறாங்க!!!! இந்த சுமதி, "மின்னலாமே, மின்னல்" நான் இருக்கும்போதே டிடியைத் "தலைவி"னு கூப்பிட்டுட்டு, க்ர்ர்ர்ர்ர்ர்..... இருங்க உங்களுக்கு இருக்கு!!!! அப்பாடா!!!!!!! கடைசியிலே மிஞ்சினது வேதா தான். ஹிஹிஹி, குருவுக்கு "மிஞ்சின" சிஷ்யை வேதா ஒருத்தி தான். அம்பி, படம் எல்லாம் நானே தான் போட்டுக்கறேன். உங்களை மாதிரி தங்கமணி உதவியை நாடறீங்களே டெக்னிகலுக்கு, பதிவு எழுதத் தம்பி உதவியை நாடறீங்களே, அப்படி இல்லை, நானே தான் போட்டுக்கறேன்.

8 comments:

கீதா சாம்பசிவம் said...

word verification தேவையா? பதிவு பெற்ற மெம்பர்கள் மட்டும் தானே போட முடியும்? அப்புறமும் எதுக்கு? :((((((

நாகை சிவா said...

தவிர்க்க முடியாத மொக்கைனு சொல்லிட்டிங்க.. வேற பண்ணுறது விடுங்க..

அம்புட்டு பெயர சொன்னீங்க.. உங்க குரு அதாவது என் பெயரை சொல்லவே இல்லையே...

அபி அப்பாவை பற்றி கமெண்ட் சூப்பர்... எல்லாம் ஆஃப் மைண்ட்ல வந்த ஞானம் :)

கீதா சாம்பசிவம் said...

hihihi, புலி, உங்க பேரை எழுதினேன், அப்புறம் எங்கே வந்து உறுமப் போறீங்களோனு விட்டுட்டேன், ஏன்னா, நீங்க இன்னும் வந்து, போயிட்டு இருக்கீங்களே, அப்புறம் இன்னும் கல்யாணம் வேறே ஆகலை, பொண்ணு தான் பார்த்தால் பிடிக்கலைனு சொல்றீங்க!!!!!! வராதவங்களை மட்டுமே குறிப்பிட்டேன், அப்படிப் பார்த்தால் இன்னும் நிறையப் பேரை விட்டுட்டேனே!!!! அதனால் தப்பா நினைச்சுக்காதீங்க!!!!!! :)))))))

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, புலி, ஜிமெயிலில் என்னைப் பார்த்ததுமே ஓடி வந்து வரவேற்கிற உங்களை நான் மறப்பேனா?????

G3 said...

குருவின் தலைவி முன்னாடி பேசினா மரியாதையா இருக்காதேன்னு கமெண்ட் போடாம விட்டா என்னைய இப்படி தப்பா சொக்ல்லிட்டீங்களே :((

dubukudisciple said...

geetha paati avargale...
blog union form pannalamnu decide panni adukana efforts naan eduthathunala sumathi enna thalaivinu solranga.. idula ungaluku enna varuthamnu theriyala...
neenga thalavina vera yarume thalaiviya iruka koodatha?? neenga manila alavula thalaiviya irunga.. naan mathiya alavula thalaiviya iruken :)))

வேதா said...

என்னைய வச்சு காமெடி பண்ணிட்டீங்க :):)

Sumathi. said...

Hai Thanga Thaanai Thaniperum Thalavi,

vaazka vaazka, sari adu enna ungalku pootiyaa yaarum vara kudaadhaa?

aamaa yen innum matra blog aalungalai ellaam kannu theriyalaiyaa? illa avangalai paathu bayamaa?

adi sari adu enna guruvukku minjiya sheishya? neenga enna thalaiviyaa ila ila thaniperum thaliviyaa? illa guruvaa?

edaavadhu oru padiviya vitudanaum theriyumaa? orey aalu 2 padiviku aasa padalaamaa?

aamaa indha minalukeu kuuda anja maatenga nu enaku theriyaadhaa? adulavera enaa krrrrrr nu laam ?

enamo theriyala indha thalaviku onnum sariyaa yaarum padai alaka maateyngaraanga pola iruku aduthaan thalaivi ippadi kekaraanga pla iruku.

makalaey inimey thalaiviku sariyaa padi maasaa maasam kuduthtudungappa? (idukulaam naan porupu illai he he he he)