Friday, October 31, 2008
கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தாச்சு!
நாம எல்லாம் ஒரு இடத்துக்குப் போறதுனு ஆரம்பிச்சா சும்மாவா! ஒரு வாரம் முன்னேயே அறிவிப்பு எல்லாம் கொடுத்து, ஆலோசனைகள் நடத்தி, மெய்க்காப்பாளர்களைத் தயார் செய்து, எவ்வளவு இருக்கு! நம்ம உ.பி.ச. வேறே பார்த்து ரொம்ப நாட்கள் ஆயிடுச்சு, நானும் வருவேன்னு சொல்லி இருந்தாங்க. அம்பிதான் ஒரு வாரம் முன்னேயே வந்து சேர்ந்தாச்சு. ஆனால் இன்னும் அம்பத்தூருக்கு வர வழி தெரியலையாம். தொலைபேசியில் பேசிட்டு, வரேன்னு சொன்னதோடு சரி. நல்லவேளையாப் பருத்திக் கொட்டை மட்டும் வாங்கலை, வந்ததும் வாங்கிக்கலாம்னு வச்சிருக்கேன்.
அம்பி மூன்று நாட்களும் சத்திரத்தில் டேரா போடப் போவதையும் தெரிந்து கொண்டேன். நம்பகமான தகவல்கள் கிடைச்சது. மெளலியும் வரப் போகின்றார் என்பதும் தெரிய வந்தது. டிக்கெட் கிடைச்சதும், தொலைபேசறேன்னு சொன்ன மெளலி, கல்யாணத்தில் என்னைப் பார்த்தபின்னரும் வாயே திறக்கலை. :P நாங்க வழக்கம்போல் அமளி, துமளி இல்லாமல் இம்முறை கிளம்பி, என்ன ஆச்சரியம்?? வீட்டை விட்டுக் கிளம்பும்போது உடனேயே வண்டி ஸ்டார்ட் ஆக, அதிர்ச்சியில் நான் வண்டியில் ஏறத் தோணாமல் முழிக்க, ஏறுனு அவர் அதட்ட, ஏறி உட்கார்ந்ததும், வண்டி நின்றது. எனக்கும் போன மூச்சுத் திரும்பி வந்தது. மறுபடியும் பெட்ரோல் டாங்கை உலுக்கிவிட்டு வண்டியைக் கிளப்ப அரை மனசா வண்டி கிளம்ப நானும் ஏறி உட்கார்ந்து கொண்டேன், கொஞ்சம் பயத்தோடேயே. பழைய வண்டிக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. ஏறி உட்கார்ந்தால் கிளம்ப மறுக்கும். பிடிவாதமாய் அதிலேயே போகணும்னு நான் இருக்க, என்னைக் கேட்காமல் அதை விற்றுவிட்டார். அந்த வண்டி இந்தப் புது வண்டி கிட்டே நல்லாப் போட்டுக் கொடுத்திருக்கு போல! அது இருக்கும் வரைக்கும் இது ஒழுங்காத் தான் இருந்தது. இப்போ இதுவும் கத்துக்கிட்டது.
திரு திராச அவர்கள் பத்திரிகை அனுப்பி விட்டுத் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார். ஆகவே நேற்று மாலை வரவேற்புக்குச் செல்லவேண்டும் என நினைத்துப் பின்னர் அப்போக் கிளம்ப முடியாமல் இன்று காலை திருமண நிகழ்ச்சிக்குச் சென்றோம். நாங்கள் சென்ற சமயம் ஊஞ்சலில் பெண்ணும், மாப்பிள்ளையும் ஆட, எல்லாரும் பாடிக் கொண்டிருந்தனர். போய்ச் சிறிது நேரத்துக்கு எல்லாம் திரு திராச அவர்களே பாட ஆரம்பித்தார். அவர் பாட, மற்றவர்கள் பாட என ஊஞ்சல் ஆரம்பித்தது. நாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்து அம்பியையோ, கணேசனையோ பார்க்கலாம் என்று நினைத்தால் அவங்க யாருமே கண்ணில் படலை. டைனிங் ஹாலில் இருந்திருக்காங்கனு அப்புறமாத் தெரிஞ்சது. அம்பிக்கு அது வழக்கம் தானேன்னு நினைச்சுட்டு நாங்க போய் டிபன் சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு நான் கீழே போக நின்னுட்டு இருந்தப்போ இந்த டாம் ஒரு மூணு தரம் இப்படியும், அப்படியும் ஏதோ வேலை இருக்கிறாப்போல் போயிட்டுப் போயிட்டு வர, என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,., என்ன ஒரு சோகம்!
கடைசியில் என்னோட ம.பா.வைப் பார்த்துட்டு எங்கேயோ பார்த்த முகமா இருக்கேனு டாமின் மூளையில் பல்ப் எரிய, அப்புறமா என்னைக் கண்டு ஓடிவர, கணேசனோ உடனேயே என்னைக் கண்டு கொள்ள, டாமைப் பார்த்துப் பல்லைக் கடித்தேன். அப்புறம் நாங்க கீழே போனதும் டாமும், அவர் தம்பியும் வந்து உட்கார்ந்து கொண்டனர். மெளலி இதோ வந்தாச்சு, பஸ்ஸில் இருந்து இறங்கியாச்சு, என்று நேர்முக வர்ணனையைக் கொடுத்தார் கணேசன். அதுக்கு முன்னாலேயே உ.பி.ச. அவங்க கணவரோட வந்தாங்க. பாவம், என்னைத் தொடர்பு கொள்ளறேன்னு சொல்லி இருந்தாங்க. நாம நம்ம வழக்கம்போல் செல்லை வீட்டிலேயே பத்திரப்படுத்தி வச்சுட்டுப் போனதாலே அவங்களாலே தொடர்பு கொள்ள முடியலை என்றாலும் வந்துட்டாங்க. அப்புறமாய் மெளலியும் வந்தார். வந்ததும் மதுரைக்காரர் ஒருத்தரைத் தேடிப் பிடிச்சுக் கண்டு பிடிச்சு அவரோடயே பேசிட்டு இருந்துட்டு, எங்க பக்கம் வந்ததும், கணேசன், அம்பி இவங்களோட மட்டும் பேசிட்டு இருந்தார். சரிதான், கன்னடக்காரங்க இப்படித் தான் தமிழ் துரோகியா இருப்பாங்க போல என்று நினைத்துக் கொண்டிருக்க அங்கே மேடையில் தாலி கட்டித் திருமணம் முடிஞ்சுட்டது. ஆசிகளை வழங்கிட்டு நாங்களும் கிளம்பிட்டோம்.
செளபாக்கியவதி பிருந்தாவுக்கும், சிரஞ்சீவி பாலசந்திரனுக்கும் இனிய திருமண வாழ்த்துகள். மகிழ்ச்சியான மணவாழ்வுக்கும் வாழ்த்துகின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
he hee, no tamil typing, detail comment reply apromaa psot panren. :)
@ambi,நல்லா இருக்கு சவாலே, சமாளி!! :P:P:P:P:P:P:P:P
//psot //
என்ன மொழி இது??? :P
Geethamma, innum chaapadu panthiyil-aa irukaanga? :)
he he no tamil typing, detail comment reply apromaa psot panren :)
Hello mouli anna
why neenga madurai kaara geethamma pakkathula utkaara marutheenga? avingalum marutha thaane?
pu.tha.se.vi please :))
kalyanathukku poyittu vantha oru foto podanum post-la!
hmmm....ithukku thaan ambi pola nalla pasanga post podanum-nu cholrathu :)
//திரு திராச அவர்களே பாட ஆரம்பித்தார். அவர் பாட, மற்றவர்கள் பாட என ஊஞ்சல் ஆரம்பித்தது//
can somebody send me this clip plzz?
//ஆசிகளை வழங்கிட்டு நாங்களும் கிளம்பிட்டோம்//
only aasi? vera ethuvum illiyaa? :))
பிருந்தா+பாலசந்திரனுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
திராசவின் அன்பான திருத்தணிகை முருகன் அருளால் பீடு நீடு வாழ்க!
http://muruganarul.blogspot.com/2008/10/2.html
ஒரு உள்ளேனய்யா மட்டும் போட்டுக்கறேன்.
பிருந்தா+பாலசந்திரனுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்/
நானும் வாழ்த்துகிறேன்.
கீ அக்கா நோ பால் பாயசம்?
//Geethamma, innum chaapadu panthiyil-aa irukaanga? :)//
எங்கே, கேஆரெஸ், என்ன மெனுன்னே தெரியலை, திராச கிட்டே முன்னேயே கேட்டேன், சொல்லவே இல்லை! :P
//why neenga madurai kaara geethamma pakkathula utkaara marutheenga? avingalum marutha thaane?
pu.tha.se.vi please :))//
அட, அது தெரியலையே உங்களுக்கு??? கல்யாணம் ஆனதும் நான் தஞ்சாவூர்க்காரியாயிட்டேன் இல்லை? அதான், மெளலி மதுரைக்காரங்களோடதான் பேசுவேனு ஒரே அடம், போங்க! :P :P
அதுக்காகவே ஒருத்தரை மதுரையிலே இருந்து வரவழைச்சிருந்தார்னா பார்த்துக்குங்க! :)))))
//only aasi? vera ethuvum illiyaa? :))//
இங்கே எழுதினா அப்புறம் அம்பியும் டிமாண்ட் பண்ணினா?? அதான் சொல்லலை, அம்பியும் இதோ வரேன், வந்துட்டேன், வந்துடப் போறேன்னு பயமுறுத்திட்டுக் கடைசியில் வழக்கம்போல் வரவே இல்லை. நானும் நல்லவேளையா ஒண்ணும் செய்து வைக்கலை! அம்பியாவது, வரதாவதுனு எனக்கே புரிஞ்சு போச்சே!!! நறநறநறநறநறநறநறநற
என்ன மெளலி, ஒண்ணுமே சொல்லலை??? இதுக்குக் கூடவா restrictions?? :P
@Thivaa, enna payasamnu ambiyaiyo, mouliyaiyo, Ganesanaiyo kelunga, nan enge sappitten?? :P :P
அதான் கேட்டேன், ஏன் சாப்பிடலைன்னு. வீட்டிலேயே பால் பாயசம் வெச்சு சாப்பிட்டுட்டு போயிருப்பீங்க.
:P
Thanks for coming and aassikal TRC
மௌளி அவருடைய சித்தப்பாவுடன் பேசிக்கொண்டு இருந்தார். அதுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ரா... அடராமா! அம்பியோடவும் தம்பியோடவும் நல்லா வட்ட மேஜை போட்டு தூள் கச்சேரி பண்ணீங்களே மறந்து போச்சா?. பாட்டு எப்படி, சாப்பாடு எப்படி என்று சொல்லவேயில்லயே.போகும்போது கவனிச்சு அனுபிச்சாங்களா.உன்னுமே சொல்லவில்லயே. எனக்கு Fஈடு பேக் வேண்டாமா?
// மௌளி அவருடைய சித்தப்பாவுடன் பேசிக்கொண்டு இருந்தார். அதுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ரா...//
:-)))
// அடராமா! அம்பியோடவும் தம்பியோடவும் நல்லா வட்ட மேஜை போட்டு தூள் கச்சேரி பண்ணீங்களே மறந்து போச்சா?.//
பூனை வெளியே வருது!
:-))
// பாட்டு எப்படி, சாப்பாடு எப்படி என்று சொல்லவேயில்லயே.போகும்போது கவனிச்சு அனுபிச்சாங்களா.உன்னுமே சொல்லவில்லயே. எனக்கு Fஈடு பேக் வேண்டாமா?//
feedனாதானே ஃபீட்பேக்?
//மௌளி அவருடைய சித்தப்பாவுடன் பேசிக்கொண்டு இருந்தார். அதுக்கும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ரா... //
கிர்ர்ர்ர்ர்ர் இல்லன்னாத்தான் அதிசயப்படணும் :)
பேசின பிறகு வந்து யாரிடம் பேசினேன்னும் சொன்னேன்...ஆனா அதெல்லாம் வசதியா மறந்துட்டா நான் என்ன பண்ண?. :) அதான் நானும் ஈசியா உள்ளேனய்யா மட்டும் போட்டுட்டு விட்டுட்டேன்... :))
வெறுமனே அம்பி-தம்பியுடன் மட்டும் வட்ட மேஜை நடந்திருந்தா பரவாயில்லை. நடுவில் சிவாஷ்டோத்திர சந்தேஹ நிவர்த்தியும், உ.பி.சவுடன் ஒரு மகளிர் மாநாடும் கூட நடந்தது, அது உங்க கண்களில் படல்லை, நீங்க தாரை வார்க்கறதில் பிஸியா இருந்தீங்க. :-))
//நடுவில் சிவாஷ்டோத்திர சந்தேஹ நிவர்த்தியும், உ.பி.சவுடன் ஒரு மகளிர் மாநாடும் கூட //
@மெளலி,
அட, இதெல்லாம் கூடக் கவனிச்சாச்சா?? சரிதான், உ.பி.ச.வோட நான் என்ன வேணா பேசுவேன். எங்களுக்குள் எத்தனையோ இருக்கும், அதான் அவங்களை எனக்குப் பதிலா விட்டுட்டுப் போனேன்,நீங்க எல்லாம் என்ன பேசறீங்கனு கவனிச்சுச் சொல்ல முக்கியமா! :P:P:P
திராச சார், அதான் மெனு முன்னாலேயே கேட்டேன். நீங்க சொல்லலை, அதைவிட நல்ல மெனு உள்ள இடத்துக்குச் சாப்பிடப் போனேன்! :))))))
@திவா, என்னத்தை feedறது போங்க! மெளலி ஒண்ணும் அவரைச் சித்தப்பானு சொல்லலை. தெரிஞ்சவர்னு தான் சொன்னார் என் கிட்டே. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது மெளலிக்கு மட்டும்.
@திராச சார்,
உங்க பாட்டைப் பத்தி நான் என்ன சொல்றது?? எனக்கு எங்கே ஞானம் எல்லாம்?? அஞ்ஞானம் தான்! அதான் சுப்புடு சார் கிட்டேயே சர்டிபிகேட் வாங்கி இருப்பீங்களே??? நல்லாப் பாடுவீங்கனு மட்டும் புரிஞ்சது.
//தெரிஞ்சவர்னு தான் சொன்னார் என் கிட்டே. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது மெளலிக்கு மட்டும்.//
தெரிஞ்சவர்ன்னும் நான் உங்க கிட்ட சொல்லலை. நீங்க யார் அது அப்படின்னு கேட்டீங்க, அதுக்கு அவர் ஒரு ஆடிட்டர் அப்படின்னு சொல்லி அவர் பெயர், ஊர் எல்லாம் சொன்னேன்.அம்புட்டுத்தான் :)
வம்பு நல்லா இருக்கு, தொடரட்டும்!
யார்ன்னு கேட்டா ஆடிட்டர் ஊர் பேர் எல்லாம் சொல்லலாம் சித்தப்பான்னு சொல்லக்கூடாதா? நல்லா இருக்குப்பா!
//, அது உங்க கண்களில் படல்லை, நீங்க தாரை வார்க்கறதில் பிஸியா இருந்தீங்க//
அப்ப திரச மட்டும்தான் கடமையை ஒழுங்கா செஞ்சாரா? மாநாடு நடத்த போனீங்களா இல்லை ஆசீர்வாதம் பண்ண போனீங்களா? :-))))))))))))))))
//தெரிஞ்சவர்ன்னும் நான் உங்க கிட்ட சொல்லலை. நீங்க யார் அது அப்படின்னு கேட்டீங்க, அதுக்கு அவர் ஒரு ஆடிட்டர் அப்படின்னு சொல்லி அவர் பெயர், ஊர் எல்லாம் சொன்னேன்.அம்புட்டுத்தான் :)//
சரிதான், அறிமுகம் இப்படித் தான் பண்ணணுமோ?? நல்லவேளை, உங்க தங்கமணியை அழைச்சுட்டு வரலை நீங்க?? கேட்டால்,த.ம.னு சொல்லாமல் இது ஒரு பெண் அப்படினு மட்டும் பதில் வந்திருக்கும், நானும் உங்க வீட்டுக்குத் தொல்லை பேசி, மெளலி யாரோ ஒரு பெண்ணோட இங்கே வந்திருக்காரேனு போட்டுக் கொடுத்திருக்கலாம், சான்ஸ் கிடைக்காமல் போயிடுச்சே?? :P:P:P:P:P
//அப்ப திரச மட்டும்தான் கடமையை ஒழுங்கா செஞ்சாரா? //
ஆமாம். நல்ல மண்டபத்தை அரேஞ்ச் பண்ணினதில் இருந்து நல்ல விதமாக தன் கடமையை செய்தார். :)
//மாநாடு நடத்த போனீங்களா இல்லை ஆசீர்வாதம் பண்ண போனீங்களா? //
கீதாம்மா, உங்களை உங்க தம்பி, உங்க தலைமைல நடந்த மாநாடு பற்றி கிறார். பதில் சொல்லுங்க.. :))
//சரிதான், அறிமுகம் இப்படித் தான் பண்ணணுமோ?? //
சித்தப்பா வந்திருந்த ஜோர், மற்றும் திராச அவர்களுக்கு தெரிந்த முறை ஆகியவற்றை வைத்து அப்படிச் சொன்னேன். இதுக்கு இப்படியெல்லாம் ஒரு வினா வருமுன்னு தெரியாம போச்சு, இல்லைன்னா அவரை உங்க கிட்ட கூட்டி வந்து நேரடியா இண்டிரட்யூஸ் பண்ணி வச்சுருப்பேன் :))
உ.பி.ச.வோட நான் என்ன வேணா பேசுவேன். எங்களுக்குள் எத்தனையோ இருக்கும்,
மௌளி அது ஜெயலலிதா சசிகலா உறவு மாதிரி நீங்க ஒன்னும் கண்டுகப்பிடாது.
நல்லவேளை நீங்க கிளம்பிட்டீங்க. வேதாளத்துக்கு நல்ல சாப்பாடு கிடைத்தது.
//கீதாம்மா, உங்களை உங்க தம்பி, உங்க தலைமைல நடந்த மாநாடு பற்றி கிறார். பதில் சொல்லுங்க.. :))//
இது என்ன மெளலி, பற்றி கிறார்?? என்ன அர்த்தம்னேன்?? :P:P:P
//மௌளி அது ஜெயலலிதா சசிகலா உறவு மாதிரி நீங்க ஒன்னும் கண்டுகப்பிடாது.//
அதே! அதே! திராச சார், கரெக்டா சொல்லிட்டிங்க! :))))) மெளலி புரிஞ்சதா????
இப்பல்லாம் கலயாணங்கள்லே ரகளை ஒண்ணும் இல்லாம சப் சப்புன்னு ஆயிடுத்து. அவங்க அவங்க வந்தோமா, மொய் எழுதினோமா, சாப்டோமா போனோமான்னு ஆயிட்டாங்க.
இந்த பதிவு அந்த குறை எல்லாம் தீத்துடும் போல இருக்கு. தரலி என்சாயிங்க். ம்ம்ம் நடக்கட்டும்!
:-)))))))0
கீ அக்கா என்னன்னா உங்க மௌலி ங்கிறாங்க. மௌலி என்னடான்ன்னா கீ அக்கா உங்க தம்பி என்கிறார். ம்ம்ம்ம்... எல்லாருக்கும் வேண்டாதவனா போயிட்டேன் போல இருக்கு. இவங்க "சண்டைல" நடுல நான் மாட்டிகிட்டு இருக்கேன். :-)))))))))))))))))))
////மௌளி அது ஜெயலலிதா சசிகலா உறவு மாதிரி நீங்க ஒன்னும் கண்டுகப்பிடாது.//
அதே! அதே! திராச சார், கரெக்டா சொல்லிட்டிங்க! :))))) மெளலி புரிஞ்சதா????//
நல்லா புரிஞ்சுது... அந்த உறவை-கும்பலை கொள்ளைக்கூட்டம் அப்படின்னு சொல்லுவோம் எங்க ஊர் பக்கத்துல... :)).
//கீ அக்கா என்னன்னா உங்க மௌலி ங்கிறாங்க. மௌலி என்னடான்ன்னா கீ அக்கா உங்க தம்பி என்கிறார். ம்ம்ம்ம்... எல்லாருக்கும் வேண்டாதவனா போயிட்டேன் போல இருக்கு. இவங்க "சண்டைல" நடுல நான் மாட்டிகிட்டு இருக்கேன்//
திவாண்ணா, நீங்க தானே சொன்னீங்க இப்போல்லாம் கல்யாணத்தில ரகளை இல்லைன்னு....உங்களை வச்சே அதை அரங்கேற்றிட்டோமுல்ல :))
சாதாரணமா ஒண்ணுவிட்ட, மாமியாரின், மருமகளின், தம்பியின், அண்ணாவின், அப்படி இப்படின்னெல்லாம் உறவுமுறைகளை கண்டுபிடிக்கும் தலைவியா உறவுமுறைகளை கிண்டல் பண்ணுகிறார்?..ஆச்சர்யமா இருக்கே?
அட, நான் எந்த உறவை எப்போ கிண்டல் பண்ணினேன்?? அதெல்லாம் ஒண்ணும் இல்லையே?? எல்லாரையும் உறவு கொண்டாடிட்டுத் தானே இருக்கேன்?? புரியலைன்னா போங்க! :P:P:P:P
Post a Comment