Friday, March 26, 2010
டாமுக்கு எழுபது வயது!
டாமுக்குஅம்மாஞ்சிஎழுபது வயசாச்சாமே?? அப்படியா?? அப்போ ஜெரிக்கு??? ஜெரி சின்னது தானே? எண்ணங்கள்ஆனால் அதுதான் நல்ல சுறுசுறுப்பு. வேகம். தூங்கிட்டு இருக்கும் டாமை எப்படி நைசா எழுப்பி விட்டுட்டுப் போய் ஒளிஞ்சுக்கும். அது ஒண்ணே போதுமே! என்ன இருந்தாலும் ஜெரியைப் பார்த்தால் தான் டாமுக்கு அடுத்துச் செய்ய வேண்டியது என்னனே தோண ஆரம்பிக்கும். டாமுக்கா ஒண்ணுமே தெரியாது. ஜெரி கிட்டே மாட்டிண்டு முழிக்கும்போதும், வீட்டு எஜமானி கிட்டே மாட்டிண்டு அசடு வழியும்போதும் டாமின் முகத்தைப் பார்க்கணுமே! அசடு வழியும். ஆனாலும் ஜெரிக்கு என்னமோ டாமிடம் பாசமும் அதிகம் தான். விட்டுக் கொடுக்காது. இல்லையா? டாம், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பீமரத சாந்தி பண்ணிக்குங்க! வந்து வாழ்த்தி வணங்கறோம். ஓகேயா? எங்கேப்பா யூனியன் ஆளுங்க எல்லாம்?? வரிசையா வந்து டாமை வாழ்த்துங்க. அநியாயத்துக்குத் தூங்குது யூனியன். :P:P:P
Wednesday, March 3, 2010
பஸ்ஸா காரா?
பஸ்ஸா காரா?
பஸ் நல்லதா கெட்டதா?
சமீப காலமா இது பெரிய சர்ச்சை ஆகிகொண்டிருக்கு! சமீப காலம்??? ஓ, பஸ் வந்தே ஒரு வாரம்தான் ஆகிறது. இது சமீப காலம்ன்னு தோணுவதற்கு அவ்வளோ சீக்கிரம் வளர்ந்துவிட்டது.
திடீர்ன்னு ஒரு நாள் ஜிமெய்ல் திறக்கும்போது பஸ் ன்னு புதுசா வந்திருக்கு. செயலாக்கலாமா ன்னு செய்தி வந்தது. அதிலே நிச்சயமா learn more ஆப்ஷன் இருந்தது. அப்புறமா என்னோட இன்னொரு மெய்ல் ஐ திறக்கிறப்ப வேண்டாம்ன்னும் சொன்னேன்; அது செயலாகலை. ஏன் இதை சொல்கிறேன்னா சிலர் கூகுள் தனக்கு ஒரு தேர்வை தரலைன்னு எழுதுகிறதுதான்.
பல வருஷங்களுக்கு முன்பே கூகுள் கருவிப்பட்டையை (டூல் பாரை) நிறுவம் போது வழக்கம் போல நிறுவலாமான்னு அனுமதி கேக்கறப்ப இது வழக்கமான "யாடா யாடா" இல்லை; கவனமா படிச்சுட்டு நிறுவுங்கன்னு சொன்னது. உள்ளே தானியங்கியா எதை மக்கள் தேடுறாங்கன்னு விவரம் சேமிக்கப்படும். ஆனா உங்க பெர்சனல் தகவல் ஏதும் சேகரிக்கப்படாது ன்னு தெளிவாகவே சொல்லியது. இப்படி அப்பட்டமா தன்னைப்பத்தி சொல்லிக்கொண்டது முதல் கூகுளை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.
பஸ் ஐ திறந்தப்ப உன் அஞ்சல் பட்டியல்லே இருக்கிற இன்னின்னார் பஸ்லே ஏற்கெனெவே இருக்காங்க. அவங்களை தொடரலாமான்னு கேட்டுது. இருந்த 2-3 பேரை சரின்னு தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் நேரம் கொடுத்து இதைப்பத்தி ஆராய்ஞ்சப்ப இது என்ன விஷயம்ன்னு புரிஞ்சது.
பிரைவேட்டா அரட்டை அடிக்கத்தான் gசாட், gடாக் எல்லாமிருக்கே? அப்ப இது எங்கே ஃபிட் ஆகும்ன்னு பாத்தப்ப பொதுவான செய்திகளை சும்மா ஒரு போர்டிலே எழுதி வைக்கிற மாதிரி இதுன்னு புரிஞ்சு போச்சு. அதிலே யார் படிப்பாங்க மாட்டாங்கன்னு கவலை இல்லை, இல்லையா?
சிலர் நான் எழுதறது மத்தவங்க படிச்சுடறாங்களேன்னு புகார் பண்ணறது தமாஷா இருக்கு! அப்படி படிக்கத்தானே எழுதறோம்? ஏம்பா நீ மத்தவங்க எழுதறதை படிக்க முடியும் என்கிறப்ப அவங்களும் உன்னுதை படிக்க முடியும்ன்னு புரியலையா? தனியா யாருக்கும் ஏதும் சொல்லனும்ன்னா gமெய்ல் இருக்கு, சாட் இருக்கு, இருநூத்து இருபத்தெட்டரை வழி இருக்கு....
பஸ்லே போட்டுட்டு புகார் பண்ணுவானேன்?
ஆக மொத்தம் பஸ்ஸை கொஞ்சம் நிதானமா ஆராய்ஞ்சு பாத்தவங்க அது எதுக்கு பயன்படுமோ அது தேவையானா பயன்படுத்தலாம். நான் என்ன வாங்கினாலும் அதோட ஒரு பேப்பர் இருந்தா சும்மா அதை முழுக்க படிச்சுடுவேன். ஏதாவது எலக்ட்ரானிக் பொருள் வாங்கினா கையேட்டை (மேனுவலை) படிச்சுடுவேன். எதையும் பயன்படுத்தும் முன்னே அது எனக்கு புரியனும். புரியலைன்னா பயன்படுத்த மாட்டேன்.
ஆனா இப்படி இருந்தாதான் பஸ்ஸோட நுணுக்கம் புரியும்ன்னு இல்லையே! கொஞ்சம் நிதானத்தோட அணுகி இருந்தா ஒரு பிரச்சினையும் இல்லை.
இப்ப பாத்தா நிறைய எதிர்வினை இருக்கு. எல்லாரும் நான் போறேன் ன்னு குதிக்கறாங்க. எதுக்கு? பயம்தான். இது என்னன்னு சரியா புரியாத பயம்.
சில விஷயங்களை புரிஞ்சுண்டு அப்புறம் செய்கிறதை செய்யுங்க.
பஸ் ஓபன் போர்ட். எழுதறதை யாரும் பாக்கலாம். பொன் மொழிகள் எல்லோருக்கும் சொல்லக்கூடிய செய்திகள், விவரங்கள் எல்லாம் இதிலே வரலாம். நான் வீட்டுக்கு இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டேன் ன்னு கூட ஒத்தர் செய்தி போட்டார்!
பஸ்லே கொஞ்சம் தனிமை வேணும்ன்னா அதுக்கும் வசதி இருக்கு. நாம் சில நபர்களுக்கு மட்டுமே சில விஷயங்களை சொல்ல விரும்பறோம். அந்த சிலர் ஒத்தருக்கு ஒத்தர் நல்லா தெரிஞ்சவங்க. க்லூ க்லக்ஸ் க்லான் மாதிரின்னு வெச்சுக்குங்களேன்! முதல்லே ஒரு குழுவை gமெய்ல்லே உருவாக்குங்க. இஷ்டமான பேரை - என் முக்கிய எதிரிகள் மாதிரி- என்ன வேணா கொடுங்க. உருவாக்கிய பிறகு பஸ்ஸுக்கு வாங்க. ஒரு செய்தியை தட்டுங்க. கீழே பப்ளிஷ் டு வெப் ன்னு இருக்கும். பக்கத்திலே இருக்கிற அம்பு குறி மேலே சொடுக்கினா இன்னும் தேர்வு தெரியும். பிரைவேட் ன்னு இன்னும் ஒரு தேர்வு. இதை சொடுக்கினா உங்க மெய்ல் கணக்கிலே இருக்கிற குழுக்கள் பேர் தெரியும். (இதை எழுதறப்ப பாத்தா புதுசா குழு உருவாக்கற வசதிக்கு லிங்க் இந்த இடத்தில் பஸ்லேயே இருக்கு.) குழுவை தேர்ந்தெடுத்து சொடுக்கினா வேலை முடிஞ்சது. அந்த குழுவிலே இருக்கிறவங்களுக்கு மட்டுமே இந்த செய்தி தெரியும்.
சுருக்கமா சொன்னா பஸ் பப்ளிக் காரியர். யார் வேணுமானா ஏறுவாங்க இறங்குவாங்க. கார் பிரைவேட். நாம் அனுமதிச்சாத்தான் யாரும் ஏறமுடியும்.
வாழ்க்கையிலே ஏதானாலும் கொஞ்சம் நிதானம் தேவை. அப்பதான் கண்ட படி மாட்டிக்காம இருப்போம். ம்ம்ம்ம்ம் கல்யாணம் ஆகு முன்னே இதை சொல்லக்கூடாதா என்கிறீங்க? விதி வலியது! :-))

Subscribe to:
Posts (Atom)