ரொம்ப நாட்கள் கழிந்து ப்ளாக் யூனியனிலே போஸ்ட் போடறேன். நேரம் இல்லாமை மட்டுமில்லாமல், கணினியும் சரியில்லாமல் இருந்ததும் பல நாட்கள் என்னால் எதுவும் தொடர்ந்து செய்ய முடியாமல் போனதுக்கு ஒரு காரணம், என்றாலும், இதையும் மீறி ஒரு 494 போஸ்ட் நேற்றுவரையில் போட்டிருக்கேன். இன்றோடு வலைப்பதிவு ஆரம்பிச்சு 2 வருஷமும் முடிகின்றது. 494 போஸ்ட் என்று பெயரே தவிர, உருப்படியாகப் பத்து போஸ்ட் தேறினால் அதிகம். :( இதற்கு ஆரம்பத்தில் இருந்தே என்னுடைய பதிவுகளை ரொம்பவே முதிர்ச்சியோடு போடாதது ஒரு காரணம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் ஆரம்பத்திலேயே அப்படித் தொடங்க முடியாது என்பதோடு, முதலில் என்னை நான் நிலை நிறுத்திக் கொள்ளவும் வேண்டி இருந்தது. மேலும் படிப்படியாக வந்தால் தான் சரியாகவும் இருக்கும், எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் உடனேயே கொட்டிவிடவும் முடியாது. அப்புறம் காலிப் பானை தான் இருக்கும்.
ஆர்ப்பரிக்கும் அருவி போல் இல்லாமல் என்றும் வற்றாமல் ஓடும் ஜீவநதிதான் மக்களுக்குப் பிரயோசனம் அளிக்கும். அருவி அந்தப் பருவத்தோடு முடிந்து விடும். அப்படி இல்லாமல் தொடர்ந்து வருவது நதி தான். நதியைப் போலவே ஓடத் தான் விருப்பம். ஆரம்பத்தில் நதி ஆரம்பிக்கும் இடத்தைப் பார்த்தால் ஒரு சின்ன ஊற்றாய்க் கூட இருக்காது. அப்படி எங்கே இருந்தோ ஆரம்பிக்கும் நதி, முதலில் மெதுவாய்த் தானே வருகிறது. போகப் போகத் தானே வேகம் எடுக்கிறது? பள்ளி நாட்களிலேயும் முதலில் என்னைப் பார்க்கும் ஆசிரியைகள், ஆசிரியர்கள் படிப்பில் சராசரிக்கும் கீழே என்றே எண்ணிக் கொள்வார்கள். அதிலும் என் கணக்கு ஆசிரியைக்கு இந்தச் சந்தேகம் நிறையவே உண்டு. தொடர்ந்து 9-ம் வகுப்பில் இருந்து பள்ளி இறுதி வரை ஒரே கணக்கு ஆசிரியை, இரண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம். மற்ற மாணவிகளைக் கேட்பார்கள், மற்றப் பாடங்களில் எப்படிப் படிக்கிறாள் என்று? இத்தனைக்கும் கணக்குப் பாடத்தில் கொஞ்சம் கஷ்டப் பட்டுத் தனியாகப் படித்து (பின்னே, அவங்க சொல்லிக் கொடுக்கிறது எனக்குப் புரியவே புரியாது!) 60%க்குக் கொஞ்சம் மேல் வாங்கி விடுவேன், என்றாலும் மெத்தனமாய் இருப்பதைப் பார்த்து விட்டோ என்னமோ, சந்தேகமா இருக்கும் அவங்களுக்கு. அந்த மாதிரியாகவே தான் இதுவும்.
இந்தப் போஸ்டை இங்கே போடக் காரணம், என்னோட "எண்ணங்கள்" வலைப்பதிவில் (ராமாயணத்துக்கும் ஒரு விளம்பரம் கொடுத்தாப்பலேயும் இருக்குமே!) ராமாயணம் எழுதிக் கொண்டிருப்பதால் நடுவில் தடங்கல் வேண்டாம்னு. டிடி அக்காவை நேத்துப் பார்த்தப்போ கேட்டு வச்சுக்கணும்னு நினைச்சுட்டு மறந்துட்டேன். "தனிபெரும் தலைவி"யை ஒண்ணும் சொல்ல முடியாதுங்கறதும் ஒரு காரணம். நியாயமாப் பார்த்தா டிடி அக்கா தனிப் போஸ்ட் போட்டு என்னை வாழ்த்தி இருக்கணும், இந்தச் சரித்திரக் குறிப்பெல்லாம் எடுத்து வச்சுக்கணும்னு தெரியலை அவங்களுக்கு! க்ர்ர்ர்ர்ர், நானே வந்து சொல்லிக்க வேண்டி இருக்கு, பாருங்க! எனக்கு ஆதரவு அளித்துப் பின்னூட்டங்கள் போடும் அனைத்து தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அதிலும் நான் என்ன எழுதினாலும், எப்படி எழுதினாலும், எதை எழுதினாலும் "தலைவி மாதிரி எழுத யார் இருக்காங்க?" என்று சொல்லும் கோபிநாத்துக்கு ஸ்பெஷல் நன்றி. முன்னாலே மணிப்ரகாஷும், கார்த்திக் முத்துராஜனும் சொல்லிட்டு இருந்தாங்க இந்த மாதிரி. கார்த்திக்குக்குக் கல்யாணம் ஏப்ரல் 11-ம் தேதி. வேதாவின் கல்யாணம் மே 16-ம் தேதி. இன்னும் வேறே யார்னு தெரியலை. வாழ்த்துகள் இருவருக்கும்.
குறிப்பாக சகோதரர் "சூப்பர் சுப்ரா" எங்கேயோ இருந்து கொண்டு பார்த்துட்டு இருக்கார்னு தெரியும். அவருக்கு ஒரு தனிப்பட்ட நன்றி.
Tuesday, April 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
DD Akka, word verification தேவையா? முன்னேயே சொன்னேன், கொஞ்சம் யோசிங்க!
ஐ நூறு அடிச்ச பிறகு இந்த பதிவு போட்ருக்கலாம் இல்ல, இதுக்கும் அவசரம் தானா? :p
சரி, போனா போகுது, 494க்கு வாழ்த்துக்கள். :))
ஹிஹி, பதிவுல என்னை பத்தி ஒன்னுமே சொல்லலையே? :D
இந்த word verification எல்லாம் உங்களுக்கு தான் வருது. இதோ நானும் தான் பதிவு போட்டேன், ஒன்னுமே கேக்கலையே! :P
word verification neekiyachu..
///நான் என்ன எழுதினாலும், எப்படி எழுதினாலும், எதை எழுதினாலும் "தலைவி மாதிரி எழுத யார் இருக்காங்க?" என்று சொல்லும் கோபிநாத்துக்கு ஸ்பெஷல் நன்றி. ///
இந்த பதிவ பத்தி ஏன் கோபி இன்னமும் ஒண்ணும் சொல்லல:)
Post a Comment