இளம் நொங்கு அல்லது இனிமையான நீரையுடைய இளனீர் குடித்து முடித்தவுடன் ஒரு விவரிக்க முடியாத புத்துணர்ச்சி வருமே? அனுபவித்து இருக்கிறீர்களா? அதே போல், பழகுவதற்க்கு இனிமையானவரும், தம் சொற்களால் பிறர் மனம் சற்றும் வாடாதபடி வார்த்தைகளை வெகு ஜாக்ரதையாக பேசுபவரும், தன்னடக்கத்தை அனுமனிடமிருந்து பெற்றவரும், ஆச்சார்ய ஹ்ருதயத்தில் குரு உபாசனை செய்பவரும், லலிதையின் ரூபத்தை செளந்தர்ய லஹரி வாயிலாக மிக எளிமையாக நமக்கு அளிப்பவரும், சிதம்பர ரகஸ்யத்தில் பின்னூட்டத்தில் கலக்குபவரும், எதிர்கட்சியிலிருந்து தப்பித்து நமது கட்சிக்கு வந்து பலம் சேர்பவரும், மதுரையம்பதி என்ற தமது சொந்த பிளாகில் கூட மொக்கை போட தெரியாத அப்பாவியுமான மெளலி அண்ணாவுக்கு நாளை ஆகஸ்ட் 2ம் நாள் பிறந்த நாள் வருகிறபடியால் வாழ்த்த இந்த அடியேனுக்கு வயதில்லை, வணங்குகிறோம்.

(அண்ணாவுக்காக, முட்டை இல்லாத கேக்)
பி.கு: இவங்க வீட்டு ரசம் ரொம்ப நல்லா இருக்கும், அன்பர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். :))