Wednesday, November 12, 2008

மாணவ சமுதாயம் எங்கே போகின்றது???

சற்று முன் தொலைக்காட்சிகளில் செய்தி ஒன்றைப் பார்த்ததும் மனம் மிகுந்த வேதனை அடைந்தது. சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களில் இரு குழுவினருக்குள் நடந்த சண்டையின் நேர்முக ஒளிபரப்பைப் பார்த்ததும் மனம் அதிர்ந்து போனது. ஒரு வாரமாக இரு குழுவினருக்குள்ளே ஏதோ போஸ்டர் ஒட்டுவதில் தகராறு இருந்து வந்திருக்கின்றது. அது எதனால், என்ன போஸ்டர் என்பது நாளைக்குச் செய்தித் தாள் பார்த்தால் தான் தெரியும். ஆனால் ஒரு வாரமாய்க் கனிந்து கொண்டிருந்த நெருப்பு இன்று பிடித்து எரிய ஆரம்பித்துக் கடைசியில் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் இரு மாணவர்களை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கியதில் அந்த மாணவர்களின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது என நம்புகின்றேன். வருங்காலத்தில் மக்களுக்குச் சட்டத்தையும், ஒழுங்கையும், நேர்மையையும் போதிக்க வேண்டிய ஒரு முக்கியமான, உன்னதமான இடத்தில் இருக்கப் போகின்றவர்கள் இன்று அல்ப விஷயத்துக்காக இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டால், பின் சாமானிய மக்கள் இவர்களை நம்பித் தங்கள் வழக்கை எவ்வாறு ஒப்படைப்பார்கள்?? மாணவ சமுதாயம் எங்கே போகின்றது? இவர்களா வளமான இந்தியாவை உருவாக்கப் போகின்றார்கள்? இவங்க கையில் இந்தியா எப்படி இருக்கும்?? இதை ப்ளாக் யூனியனில் போடுவதன் காரணம் இளைஞர்களும், இளைஞிகளும் இங்கே அதிகம் இருப்பதால். அவங்களுக்கும் செய்தியின் தீவிரம் புரியணும்னு.

6 comments:

திவாண்ணா said...

இது ரொம்பவே கவலை தரும் விஷயம்தான். பல நாட்களாகவே லா காலேஜ் நோ லா காலேஜ் ஆகிவிட்டது. நாட்டிலே இருக்கிற சமூக விரோதிகள் எல்லாமே இங்கதான் இருக்காங்களோன்னு தோணும். அப்படி ஒரு நன்நடத்தை!

"எப்படியோ" பாஸ் பண்ணி கட்டை பஞ்சாயத்துக்கு போறவங்கதான் முக்காலே மூணு வீசம்.

இவங்க வக்கீலாகி செய்யற அழும்பை பாருங்க! ஸ்கூல் பசங்க கூட தோத்துடுவாங்க. எதுக்குடா ஸ்ட்ரைக் செய்யலாம்ன்னு காத்துக்கிட்டே இருப்பாங்க. உப்பு பொறாத விஷயத்துக்கு கூட ஸ்ட்ரைக் செய்யறதிலே அரசியல்வாதிகளை கூட இவங்க தோக்கடிச்சுடுவாங்க. :-(

ஆபீசர், டாக்டர் ஆடிட்டர் எல்லார் மேலே கூட மக்கள் கேஸ் போடுவாங்க. ஆனா ஒரு வக்கீல் மேலே கூட கேஸ் வரதில்லையே ஏன்? கோர்ட்லே இவ்வாளவு கேஸ் தேங்குதுன்னா அதுக்கு முக்கிய காரணம் இந்த வாய்தா வாங்கிற வக்கீல்கள்தான். ம்ம் அவங்க வந்த வழி அப்படி - லா காலேஜ்.

கடவுள்தான் நாட்டை காப்பாத்தணும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரு விழாவுக்காக சில மாணவர்கள் அச்சிட்ட போஸ்டர்களில் "டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்ற பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இரு சமுதாய மாணவர்களுக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது//

//போலீஸôர் வேடிக்கை:சட்டக் கல்லூரி நுழைவு வாயில் அருகே மயக்கமடைந்த பாரதி கண்ணனை பிற மாணவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் காயமேற்பட்டு ரத்தம் கொட்டியது.

இந்த சூழ்நிலையில், அந்த மாணவனுக்கு உதவுமாறு அங்கு கூடியிருந்த நிருபர்கள், பத்திரிகை போட்டோகிராபர்கள் போலீஸôரிடம் கேட்டுள்ளனர். ஆனால், சட்டக் கல்லூரி முதல்வர் அனுமதியில்லாமல் உள்ளே செல்ல முடியாது என்று போலீஸôர் உதவ மறுத்துள்ளனர். //

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNM20081112112507&Title=Chennai+Page&lTitle=%F9Nu%FB%5D&Topic=0&ndate=11/13/2008&dName=No+Title&Dist=

ambi said...

ம்ம், நேத்து சன் நியுஸில் பாத்து மனம்/உடல் பதறி போனேன். :((

எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணீல் பிறக்கையிலே!

அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை(அப்பாவும் தான்) வளர்பதிலே!

என்ற பாடல் வரி தான் நினைவுக்கு வந்தது. :(



//இதை ப்ளாக் யூனியனில் போடுவதன் காரணம் இளைஞர்களும், இளைஞிகளும் இங்கே அதிகம் இருப்பதால். //

கேப்புல கெடா வெட்டும் உங்கள் சாமர்த்தியத்தை எண்ணி எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. :)))

Geetha Sambasivam said...

//கேப்புல கெடா வெட்டும் உங்கள் சாமர்த்தியத்தை எண்ணி எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. :)))//

யெஸ்ஸு, நாங்க எல்லாம் இளைஞர்கள் இல்லையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Geetha Sambasivam said...

@திவா,
@கேஆரெஸ்,

நான் இதை முடிக்கலை, அதுக்குள்ளே இணையம் போயிடுச்சு, இனிமேலே இதைப் பத்தி எழுதறதிலே அர்த்தமே இல்லை. நிறையப் பேர் எழுதி, பேசி எல்லாம் முடிஞ்சாச்சு, திவா சொல்றாப்போல் கடவுள் தான் காப்பாத்தணும்!

Geetha Sambasivam said...

பப்ளிஷே ஆகி இருக்காதுனு நினைச்சால் பப்ளிஷ் ஆகி இருக்கு, ஆச்சரியம் தான்! :))))))