Tuesday, May 8, 2007

மொக்கைக்கு அழகு மொக்கைதான்!

அம்பி கிட்டே ப்ளாக் போஸ்ட் ஒண்ணும் போடப் போறதில்லைனு காலையிலே தான் சொன்னேன். ஆனால் போட வேண்டியதாப் போயிடுச்சு. சும்மாச் சின்னதா ஒரு செய்தியைச் சொல்லிட்டுப் போயிட்டே இருக்கேன். இந்த ப்ளாக் யூனியனிலே சேர அழைப்பு வந்தப்போ நெருப்பு நரியில் இருந்து அதுக்கு வர முயற்சி செய்தேன். அதிலே என்னோட ப்ளாக் பேரைக் கொடுத்தாலே திரும்பத் திரும்ப ப்ளாக் யூனியனின் அழைப்புப் பக்கமே வந்துட்டு இருந்தது. சரி, நாம ஏதோ தப்பாப் பண்ணிட்டோம்னு சும்மா இருந்தேன். ஆனால் பார்த்தால் எல்லார் ப்ளாகிலேயும் ஒரு தனி லிஸ்டே வந்திருக்கு, அதிலே என்னோட பேர் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. மறுமுறை முயன்றேன். ஹிஹிஹி, நெருப்பு நரி கிட்டேத் தான் முட்டிக்கிட்டேன். இப்போவும் போ உன் வேலையைப் பார்த்துட்டுனு சொல்லிடுச்சு. ஆனால் ப்ளாக் யூனியனுடைய போஸ்ட் எதுவும் திறக்கவும் வரலை.

தற்செயலாக எக்ஸ்ப்ளோரரில் ஒருநாள் ப்ளாக் யூனியன் போஸ்ட் பார்க்க வேதாவோட ப்ளாக் மூலமாப் போனேன். அதுக்கு அப்புறம் தான் ஸ்டைர்க் ஆச்சு, இந்த ப்ளாக் யூனியன் காரங்களுக்கு நெருப்பு நரின்னால் அலர்ஜியோன்னு. மறுபடி திரும்ப முயன்று பார்க்கலாம்னு போனால், ஹிஹிஹி, அந்த அழைப்பையே டெலீட் செய்திருக்கேன். போன இடம் தெரியலை. ட்ரா்ஷும் சுத்தம். டிடியைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தால் அம்பிக்கு மொய்ப்பணத்தில் பரிசுப் பொருள் வாங்கறதிலே (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது அம்பிக்கு மட்டும்) ரொம்பவே பிசி. அப்புறம் யு.எஸ்ஸிலே இருந்து கூப்பிட வேண்டி இருக்கேன்னு ஒரு கத்துக் கத்தினேன் பாருங்க, உடனே வந்துட்டாங்க, திரும்ப அழைப்பு அனுப்பிச்சாங்க. கொழுப்பு, சும்மா இருந்தால் தானே, மறுபடி நெருப்பு நரி மூலம் பார்க்கப் போனால் ஹிஹிஹி, வரவே இல்லை. தலைஎழுத்தை நொந்துட்டு எக்ஸ்ப்ளோரருக்குப் போய், நடுவில் அம்பியையும் திட்டிட்டு, திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டு (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) எல்லாத்தையும் முடிச்சால் மறுபடி பாருங்க, என்னோட பேர் ப்ளாக் யூனியனிலேயே வரக் காணோம். என்னன்னு புரியலையேன்னு மறுபடியும் போனேன். போய்ப் பார்க்கறதுக்குள்ளே அப்பாடி, ஒருவழியா என்னோட ப்ளாக்கிலேயே வந்துடுச்சு.

இப்போ என்னோட ப்ராப்ளம் என்னன்னா சில பதிவுகள் நெருப்பு நரியில் திறக்க முடியறதில்லை. முக்கியமா என்னோட பதிவு நெருப்பு நரியில் மட்டும் தான் வரும். ஆனால் படிக்க முடியாது. படிக்கவோ நான் எழுதியதைத் திருத்தவோ நான் திரும்ப எக்ஸ்ப்ளோரருக்குத் தான் போகணும். இரண்டு ஜன்னலையும் திறந்து வைத்தால் ஒரே காற்றும்,, மழையுமா ஒண்ணுமே செய்ய முடியலை. ஜிமெயில், சுத்தம் எக்ஸ்ப்ளோரரில் ஹாங்க் ஆகிடுது. நெருப்பு நரியில் நல்லா வரும், ஆனால் படிக்கவே முடியாது. இ-கலப்பைனு ஒண்ணு இருக்கிறதே மற்ந்து போயிடுச்சு. எல்லாரும் அது ஒண்ணும் க்ஷ்டமே இல்லை, நீங்க சொல்றது தான் ஆச்சரியமா இருக்குன்னு சொல்றாங்க. இந்த டெஸ்க்டாப்பிலே நான் எப்படி கன்ட்ரோல் பானலைத் திறந்து எனக்கு வேண்டியதை வேண்டியவாறு மாற்றிக் கொள்ள முடியும்? இகலப்பைக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் ரைட்ஸில் என்னடாவென்றால் திறக்கவும் அனுமதி கிடைக்காது, சேமிக்கவும் அனுமதி இல்லை. அப்படியே திறந்தாலோ, சேமித்தாலோ நான் டூல்ஸில் போய் எனக்கு வேண்டிய சிலமாற்றங்களைச் செய்யணும். அது எல்லாம் இங்கே முடியாது.ஏற்கெனவேயே எம்.எஸ்.ஆஃபீஸ் என்னோட பொண்ணு திறக்கும்போது எல்லாம் (நான் நெருப்பு நரி இன்ஸ்டால் செய்ததில் இருந்து) தமிழில் வர ஆரம்பிச்சிருக்கு. அதற்கே நான் எவ்வளவு தர்மசங்கடமான நிலையில் இருப்பேன்னு எனக்குத் தான் தெரியும். save as -ல் போய் அதைச் சேமிக்கச் சொல்லிப் பின் திரும்ப கணினியை ரீஸ்டார்ட் செய்யச் சொல்லி அதுக்குள்ளே என் கணவரின் முறைப்பையும் வாங்கிக் கொண்டு, போதும்டா சாமின்னு இருக்கு! இந்த அழகில் இந்த அம்பிக்கு என்னைப் பார்த்துக் கேலி செய்யத் தோணுதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வரேன், எக்கச்சக்க ஆணிகளுக்கு நடுவில் வந்துட்டுப் போயிருக்கேன். திரும்ப ஒருநாள் வரேன்.

7 comments:

கீதா சாம்பசிவம் said...

hihi inimeel mokkai post ellaam inge podalamnu oru yosanai, enna solringa?

Syam said...

ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுடாங்க :-)

வேதா said...

ஆகா இங்கேயும் அம்பிக்கு ஆப்பா?:)

ambi said...

ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுடாங்க!

Repeatuuuuuuuuu.

இதுக்கு தான் உங்களுக்கு பெர்மிஷனே குடுக்க வேண்டாம்!னு டிடி அக்ககிட்ட சொன்னேன்.

நேத்திக்கு அழுது ஆர்பாட்டம் பண்ணி ஒரு வழியா இன்வைட் வாங்கிடீங்க. :)

நான் தலைல குட்டு குட்டுனு குட்டியதை ஏன் போஸ்டுல போடலை? :p

இந்த மொக்கையேல்லாம் போட தான் எண்ணங்கள் இருக்கே. :p

dubukudisciple said...

GS!!!
neenga idan moola enna solla vareenganu enaku puriyala!!!
konjam ungaloda posta tamizhla engaluku puriyira mathiri ezhuthunga.. ungaluku puriyira mathiri illa.. naan konjam tamila weak...

gils said...

onum pruilada sami

கீதா சாம்பசிவம் said...

dd, ellam neram, thangilishile ezhuthamal nalla tamille post partha ippadithan thonum. ellam sakavasa thosham! vere ennathai solrathu? HEAD LETTER! :P