ஓசிச் சாப்பாடே சாப்பிட்டுப் பழக்கம் ஆன "ஆப்பு அம்பி" போன்றவர்களுக்கான டிப்ஸ் கொஞ்சம் கொடுக்கலாம்னு வந்தேன். முதலில் ஜீரண சக்தி அதிகரிக்கத் தேவையான மருந்துகள் சில, எல்லாம் வீட்டில் இருப்பது தான்:
சீரகம், 50கி,
மிளகு 50 கி
உப்பு தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு மிதமான சூட்டில் வெறும் இரும்பு வாணலியில் மூன்றையும் வறுத்துக் கொண்டு அத்தோடு கைப்பிடி அளவு கறிவேப்பிலையையும் போட்டுப் பிரட்டிக் கொண்டு, ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்தப் பொடியையும் போட்டுக் கொண்டு (தேவைக்கு ஏற்ப) ஒரு வாய் சாப்பிட்டு விட்டு, இளம் சூடான சுக்கு வெந்நீரைக் குடித்தால் போதும். எப்படிப் பட்ட அஜீரணமும் ஓடியே போகும்!
மாமனார் வீட்டு விருந்து ஓவர் டோஸாகிப் பசியே எடுக்கலையா? கவலையே வேண்டாம், சமீபத்தில் கல்யாணமான கேகேயும், அம்பியும்! பிஞ்சு இஞ்சியைத் தோல் சீவிக் கொண்டு, நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு சிறிது சீரகமும், புளியும், வைத்து உப்புச் சேர்த்து அரைத்துச் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடவும். பசி, எங்கே, எங்கேன்னு ஓடி வந்து மாமியாரைத் திணற அடிக்கும்.
எல்லாம் சரி, நல்லாச் சாப்பிட்டாச்சு, ஆனால் இந்த வயிறு சொன்னதைக் கேட்குதா? வாய் வேண்டுமென்றால் வயிறு கேட்பதில்லையே? அஜீரணத்தால் வயிற்றுப் போக்கு வந்துடும் சிலருக்கு. மாமியார் சமையல் காரம் எல்லாம் காரணம் இல்லை. வெளுத்துக் கட்டியதால் வந்த வினை! அதுக்கு என்ன செய்யறது? காலையில் வெறும் வயிற்றில் கறுப்புத் தேநீரில், தேனும், எலுமிச்சம்பழமும் கலந்து குடிக்கவும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கறுப்புத் தேநீர் இம்மாதிரிக் குடிக்கவும். பசி எடுத்தால் ஆரோரூட் மாவுக் கஞ்சி போட்டு மோர் விட்டு நீர்க்கக் குடிக்கவும். டயரியா ஓடியே போய் மாமியாரை மட்டுமில்லாமல் தங்கமணியையும் புதுசு, புதுசா சமைக்கச் சொல்லிப் பயமுறுத்தலாம்.
மனைவியோடு, அதுவும் புது மனைவியோடு வெளியே போகும்போது பீட்ஸா, பர்கர், சமோசா, சாட், பேல்பூரி, பானிபூரி, தஹிபூரி, சோளாபூரி, சனா மசாலா என்றெல்லாம் சாப்பிடத் தான் தோணும். அதுவும் புது மனைவி அருமையாக ரங்குவிடம் கேட்கும்போது தங்குவிற்கு வாங்கிக் கொடுக்காமல் இருக்க முடியாது ரங்குவால். ரங்குவும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவதிப் படும். தங்கு நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்ளும், இல்லையா? அப்போ என்ன செய்யறது?
மாதுளைத் தோல், கிராம்பு எடுத்துக் கொண்டு 4 அல்லது 5 தம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அது ஒரு தம்ளராக வற்றும் வரை கொதிக்க விடவும். பின் இளம் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கவும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை அருந்தி விட்டு, எல்லாவற்றையும் ஒரு கை என்ன, இரண்டு கை பார்க்கலாம். அப்புறமா வரேன், அம்பி, கேகே!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எதுக்கு எல்லாம்? அதான் யூனியன் ஆளுங்க தவிர வேறே யாரும் போட முடியாதில்லை? அப்புறம் என்ன?
maami super tipsu...
naanum try panren
ஹாய் மாமி,
பாவம் அம்பி! இப்படி சொல்லி சொல்லியே அம்பிக்கு ஓசி சாப்பாடே 2 மாசமா இல்லாம போச்சு. அதனால அம்பிக்கு இப்ப நல்ல சமையல் டிப்சு தான் தேவை. யார் குடுத்தாலும் ஒ.கே. என்ன அம்பி சரி தானே.!!!
ஹிஹி, word verification எதுக்கு என்று எழுதி இருந்தேன், அதை சாப்பிட்டுடுச்சு ப்ளாக்கர். அப்புறம்
@டிடி, அதெல்லாம் உங்க வீட்டு வரைக்கும் வச்சுக்குங்க, அம்பிக்கும் கொடுத்தால் அப்புறம் இதுக்கும் ஓ.சி.க்கு வந்துடுவார்!
@வேதா,
@சுமதி, இன்னும் நிறைய இருக்கு, இதான் ஆரம்பம்! :P
ROTFL :) entire post is rocking.
really i enjoyed it. any way thanks for the tips. :p
//இப்ப நல்ல சமையல் டிப்சு தான் தேவை. யார் குடுத்தாலும் ஒ.கே. என்ன அம்பி சரி தானே.!!! //
@sumathi, absolutely true your honour.
@veda, Grrrrrrrrrrrr.
Post a Comment