Thursday, August 2, 2007
சொல்லியே அடிப்பேன்!
எல்லாம் சரி, இதெல்லாம் அடிக்கடி போறவங்களுக்கு, என்னை மாதிரியான கல்லுக் குடல்காரங்க என்ன செய்யறதுன்னு இதோ டிடி அக்கா(ஹிஹிஹி, எனக்கும் நீங்க அக்காதான்), கேட்டு மெயிலியிருக்காங்க. அதுக்கு என்ன வழி தெரியுமா? ரொம்பவே சிம்பிள்தான். எல்லாம் வீட்டிலே இருக்கிற பொருள் தான். தண்ணீரைக் குடிக்கிறதுக்குக் கொதிக்க வைக்கிறீங்களோ இல்லையோ தெரியலை. இப்போ என்ன செய்யுங்க, 4 பங்கு தண்ணீரை ஒரு பங்கா வர வரைக்கும் கொதிக்க விடுங்க. அதை நல்லாக் குளிரவைக்கணும். அதனாலே காலம்பரவே நல்லாக் கொதிக்க வச்சு ஆறவச்சு வச்சுக்குங்க. அந்தத் தண்ணீரை மிச்சம் இருக்கும் சாதத்தில் ஊத்தி மூடி வச்சுடவும். கூடவே சின்ன வெங்காயமும் தோல் உரித்து நறுக்கிப் போட்டு விடவும். ஒரு இரவு பூராவும் வச்சிருக்கும் இந்த சாதத்தில் உள்ளத் தெளிந்த நீராகாரத்தை எடுத்துக் கொண்டுக் கல் உப்பு, நினைவிருக்கட்டும், கல் உப்புத் தான் போடணும், போட்டு 2 டம்ளர் எடுத்துக் குடிக்கணும் வெறும் வயிற்றிலே. காபி, டீ எல்லாம் அப்புறமா ஒரு மணி நேரமாவது கழித்துத் தான். முக்கியமா அம்பி நோட் திஸ் பாயின்ட், காபி காலை எழுந்ததுமே குடிக்கக் கூடாது. எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல்னாலும் பறந்து போயிடும். அந்த வெங்காயத்தை என்ன செய்யறதுங்கறவங்களுக்கு, ஹிஹிஹி, ஆப்பீஸிலெ பக்கத்தில் உட்காரப் போகிறவங்களுக்கு ஆட்சேபணை இல்லைனால் நல்லா மென்று தின்னுடலாம், சாதத்தோட சேர்த்து. ப்ரெக் ஃபாஸ்டாத் தான்! :)))))))))
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//முக்கியமா அம்பி நோட் திஸ் பாயின்ட், காபி காலை எழுந்ததுமே குடிக்கக் கூடாது. //
i drink only maltova. no coffee at all. Grrrrrrrrr.
enna geetha madam..
kadaiseela neengalum enna akka akiteenga..
engum sivamayam appadingrapala naan ellarukum akkamayama??
adu seri naan eppa keten ungala??
edo ennala nalla vishayangal ellarukum therinja seri thaan
ஹிஹிஹி, நீங்க சொல்லணுமா டிடி அக்க்க்க்க்காஆஆஆ? எனக்கே தெரிஞ்சு போச்சே, அது சரி, ரொம்பக் கோபமா இருக்கீங்களோ? பார்த்தால் அப்படித் தெரியலையே?
@ஆப்பு, இன்னும் எத்தனை நாளைக்கு ஃபீடிங் பாட்டில்? சீக்கிரம் நிறுத்துங்க, அப்புறம் உங்க பெண்ணோ, பையனோ வந்து கேலி செய்யப் போறாங்க! :P
Post a Comment