Tuesday, August 14, 2007

பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?

பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?


நாம் எத்தனையோ கோவில்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறோம். என்றாலும் கூட நமது ராசிக்கு ஏற்ற ஸ்தலம் எது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப வழிபட்டு வருவோமானால் நம் வாழ்வு இன்னும் சிறப்பாக அமையும்.

எந்த ராசிக்கு எந்த ஸ்தலம் உகந்ததாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது என்று தானே தயங்குகிறீர்கள்! கவலை வேண்டாம் அதற்குத் தானே நாங்கள் இருக்கிறோம்.

இதோ ஒவ்வொரு ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய ஸ்தலங்களின் விபரம் பின்வருமாறு:

ராசி - ஸ்தலம்

மேஷம் - ராமேஸ்வரம் ராமநாதர்
ரிஷபம் - மேல் திருப்பதி வெஙகடேச பெருமாள்
மிதுனம் - திருவெண்காட்டில் புதன் சன்னதி
கடகம் - சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாம சுந்தரி சன்னதி எதிரே உள்ள நவலிங்கம்
சிம்மம் - நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் உள்ள மங்களாம்பிகை
கன்னி - திருக்கழுக்குன்றம் மலை மேல் வேதகிரீஸ்வரர்
துலாம் - திருத்தணி முருகன்
விருச்சிகம் - காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை பவுர்ணமியில் வழிபடுதல்
தனுசு - ராமநாதபுரம் அருகில் தேவிபட்டணத்தில் கடலில் உள்ள நவக்கிரகம்(நவபாஷாணம்)
மகரம் - காசியில் உள்ள விஸ்வநாதர்
கும்பம் - கும்பகோணத்தில் கும்பேஸ்வரர்
மீனம் - மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள சொக்கநாதர் மற்றும் மீனாட்சி.


courtesy: Tamil yahoo.

7 comments:

Sumathi. said...

ஹாய் வேதா,

அதுக்குள்ள படிச்சிட்டீங்களா? அது சரி, தூரத்துல இருக்கிற திருப்பதி க்கு போறீங்க, ஆனா பக்கத்துல இருக்கற காஞ்சிக்கு போக முடியலையா?
அது மட்டும் இல்ல, அது என்னோட ஊராக்கும்...
ஒரு நாள் ட்ரைப் பண்ணுங்க வேதா..

மடல்காரன்_MadalKaran said...

நல்ல பதிவு நானும் இத என் பதிவுல போட்டுட்டேன். மன்னிக்கனும் சுட்டதுக்கு..
K.Balu

மடல்காரன்_MadalKaran said...

நல்ல பதிவு நானும் இத என் பதிவுல போட்டுட்டேன். மன்னிக்கனும் சுட்டதுக்கு..
K.Balu

G3 said...

யக்கா.. பதிவு மட்டும் போட்டா போதுமா?? நான் காசிக்கு போறதுக்கு டிக்கெட்டும் அனுப்புங்க :))

Geetha Sambasivam said...

ஸ்ரீவாஞ்சியம் மட்டும் இன்னும் போக முடியலை. ஒரு விமானப் பயணச்சீட்டு 2 பேருக்கு உடனே அனுப்பவும். அது சரி, நேரே ஸ்ரீவாஞ்சியத்தில் இறங்க முடியாதே! வாடகைக் காருக்கும் (ஏ.சி.யோடத் தான்) ஏற்பாடு செய்யவும். செலவு யூனியன் ஆட்கள் பகிர்ந்து கொள்ளவும். இது தலைவியின் ஆனை! ச்சிச்சீ, ஆணை! :P

Geetha Sambasivam said...

ட்டி, என்ன கொடுமை இது? என்னோட பதிவுகள் மட்டும் எப்படி இங்கே தெரிய மாட்டேங்குது? யார் செய்த சதிவேலை இது? சீக்கிரம் ஏதாவது செய்யுங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ambi said...

உருப்படியான தகவல். நன்றி சுமதியக்கா. கிட்டதட்ட ஒரு வருடம் எல்லா பவுர்ணமிகளிலும் காமாக்ஷி அம்மனை தங்க ரததில் தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது.

@வேதா, ஒரு தடவை பவுர்ணமி போய் பாருங்க, அப்புறம் தெரியும் அதோட பலன். :p

//என்னோட பதிவுகள் மட்டும் எப்படி இங்கே தெரிய மாட்டேங்குது?//

@geetha paati, கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஹாஹா ஹாஹா :))))