Thursday, August 16, 2007

அம்பியிடம் பாடம் கேட்ட "கைப்ஸ்"

"பெண்"களூரின் கோரமங்களாவின் ஒரு முக்கியமான உணவு விடுதி. மாலை நேரம். ஒரே கூட்டமாக மக்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் அவசரம். கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது அங்கே திடும் பிரவேசமாக நுழைத்தது யாருன்னு நினைக்கிறீங்க? சாட்சாத் நம்ம "ஆப்பு அம்பி"யே தான். ரொம்ப அவசரமாயும், வேகமாயும் வந்ததோடு இல்லாமல் கொஞ்சம் பயந்தும் போயிருப்பார் போல் தெரியுதே! கூர்ந்து பார்த்தால் சட்டை, பான்டில் அங்கங்கே கசங்கலாயும், கொஞ்சம் கிழிசலும் தெரியுது. மாற்றக் கூட நேரம் இல்லையா என்ன? முகம் வேறே கொஞ்சம் வீங்கித் தலையில் இது என்ன? கொழுக்கட்டை? சீச்சீ, கொழுக்கட்டை இல்லை, யாரோ அடிச்சிருக்காங்க போலிருக்கு, ஹிஹிஹி, மனுஷன் அதான் ஒரே பீதியில் வந்து உட்கார்ந்திருக்கார். அப்போது அங்கே வந்த சர்வர் அம்பி கிட்டே என்ன வேணும்னு கேட்க அம்பி கொஞ்சம் இருங்க, ஒரு நண்பருக்குக் காத்திட்டு இருக்கேன், வரட்டும்னு சொல்றார். கூடவே தானே தனியாகப் புலம்பல் வேறே:

"என்ன தப்புப் பண்ணினேன்? ஒண்ணும் புரியலையே? வழக்கம் போல் கணேசன் வந்து குக்கர் வச்சுட்டுக் காய் நறுக்கினான். நான் புளி கரைத்து விட்டு, சம்பாரா, வத்தக் குழம்பானு ரொம்பப் பணிவாத் தானே கேட்டேன். ஏதாவது தப்புப் பண்ணிட்டேனோ?" மறுபடி பயத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கிறார். அப்போது கிட்டத் தட்ட அம்பியோட கோலத்திலேயே ஒருத்தர் வந்து பக்கத்து மேஜையில் உட்காருகிறார். அவரைப் பார்த்தது அம்பிக்குச் சிரிப்பு வருகிறது. யாரோ தெரியலை, நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருப்பான் போலிருக்குனு மனசிலே நினைத்துக் கொண்டு அந்த ஆளைப் பார்த்து, "என்ன சார்? அடி பலம் போலே இருக்கு?" என்று தனக்கு ஒண்ணுமே நடக்காதது போல் தெனாவட்டாகக்கேட்க அந்த ஆள் (ஒரு வேளை புதுசோ?) "சார், சார், எப்படி சார் கண்டு பிடிச்சீங்க? நீங்க ரொம்ப புத்திசாலியா இருப்பீங்க போலிருக்கே?"னு கேட்கிறார் அம்பிக்குக் கொஞ்சம் "துணுக்"குறுகிறது. ஆனாலும் சமாளிப்பு வேந்தன் இல்லையா? புதுக் கல்யாணமா என்று கேட்க அதற்கு அவர் , "அட, ஆமாம் சார்!" என்று சொல்கிறார். அப்போது பார்த்து அங்கே வந்த டிடி அக்கா அம்பிகிட்டே, "என்ன அம்பி, ஏதோ சத்தம் எல்லாம் கேட்டது வீட்டிலே? என்ன விஷயம்? மாமூலா?" என்று கேட்கவே அம்பி திருடனுக்குத் தேள் கொட்டியது போல் விழிக்கிறார். மனதுக்குள் திட்டிக் கொண்டே வெளியில்,

"யக்கா, டிடி யக்கா, இப்போ என்னைப் பார்க்கக் "கைப்ஸ்" வர நேரம். இப்போ பார்த்து என்னைக் காட்டிக் குடுக்காதீங்க." எனக் கெஞ்சவே இப்போது பக்கத்து மேஜை ஆளுக்குத் தூக்கிப் போடுகிறது. "என்ன, நீங்க தான் அம்பியா? மாமூல் வாங்கிட்டு வந்தீங்களா? அடக் கடவுளே, உங்க கிட்டே பாடம் கேட்கத் தானே நான் வந்து பார்க்கறேன்னு சொல்லி இருந்தேன். உங்க கதியே இப்படியா? இப்போ யார் கிட்டே பாடம் கேட்கறது?" என்று கலங்க ஹோட்டல் வாசலில் சலசலப்பு. என்னனு பார்த்தால் அம்பியோட தங்கமணியும், கைப்ஸோட தங்கமணியும் ஆளுக்கு ஒரு பூரிக்கட்டையோட அவங்க அவங்க ரங்கமணியைத் தேடிட்டு வராங்க. திரும்பிப் பார்த்தால் இவங்க ரெண்டு பேரும் எஸ்கேஏஏஏப்!!!!!!!!!

5 comments:

Sumathi. said...

ஹாய்,

அட ராமா, நம்ம அம்பி தான் ஏதோ 'அப்பாவி'னு பார்த்தா, இந்த 'கைப்ஸ்' கூடவா இவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ அப்பாவியா இருப்பாரு? ம்ஹும், இதெல்லாம் ஒன்னும் தேறாது.....

ambi said...

கீதா பாட்டி, சிங்கத்தை சீண்டாதீங்க. கர்ர்ர்ர்ர்ர். :)

கீதா சாம்பசிவம் said...

சிங்கம் எங்கே இருக்கு? ஒரே அசிங்கமா இல்லை இருக்கு? ஆண் சிங்கம் சுத்த சோம்பேறி, வேட்டைக்குப் போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வருவது பெண் சிங்கம் தான். இது எப்படி இருக்கு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P :P

வேதா said...

/வேட்டைக்குப் போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வருவது பெண் சிங்கம் தான். இது எப்படி இருக்கு? /
ஹிஹி சூப்பரா இருக்கு :)

கீதா சாம்பசிவம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேதா!