சுதாக்கா...திடிர்னு போன வாரம், ஜிடாக்கில் சாட்டிக் கொண்டே, Blog Unionக்கு அழைப்பு அனுப்பி வச்சிட்டாங்களா?
கையும் ஓடல, காலும் ஓடல! கண்ணு மட்டும் ஆஸ் யூஷ்யல், நல்லாவே ஓடிச்சி, நியூயார்க் பேருந்துல இருக்குற அழகின் திருவுருவங்கள் மீது!
சரி், நம்ம யக்கா பாசமா அனுப்பிச்ச வச்ச அழைப்பாச்சேன்னு பார்த்தா, அது சும்மானா வெறும் அழைப்பு இல்ல!
வெத்தலை, பாக்கு, பூ, பழம், மொக்கை, அது கூட, $501.00ன்னு அனுப்பி வச்சாக்கா...மறுக்கத் தான் முடியுமா? - பொசுக்குனு சேந்துட்டேன்...
சரி...இங்க வலைப்பூவில் என்னவெல்லாம் பின்னறாங்கன்னு ஒரு எட்டு போயி பாத்தா தானே, நாமளும் பின்ன முடியும்! வலைக் குடும்பத்துக்கும் பேரக் காப்பாத்தற மாதிரி, கெளரவதையா இருக்கும்-னு ஒரு நோட்டம் வுட்டேன்!
நம்ம G3யக்கா, வேதாக்கா, சுமதிக்கா, புலி, திராச-ன்னு எல்லாருமே பல நல்ல விசயங்களைச் சொல்லி இருக்காக!
ஆனாப் பாருங்க, யாரோ கீதாம்மா-ன்னு ஒருத்தரு!
நம்ம நண்பரு அம்பிய, தோச்சி தொங்க போடறதுல மட்டும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தினியா இருந்திருக்காங்க! :-)
அப்ப விக்ரம் கூடவே வரும் வேதாள் யாருன்னு எல்லாம் கேக்கக் கூடாது:-)
சரி அப்படியே, தம்பி Dreamzz என்னா சொல்லியிருக்காரு-ன்னு படிக்கக்குள்ளார எனக்குத் தூக்கம் வந்திரிச்சி!
கடைசியா Dreamzzஐப் படிச்சதனால, அன்னிக்கி ராத்திரி பூரா ஒரே Dreamsss!
கனவு, நல்ல கனவா-கெட்ட கனவா-ன்னு நீங்களே பாத்துச் சொல்லுங்க!
அம்பியும், கீதாம்மாவும் சேந்து ஒத்துமையா நடனம் ஆடுறாங்க! OMG! - என்னால நம்பவே முடியலை! அதி பயங்கரக் கனவு-ன்னு இது தானோ?

ஆனாக் கொஞ்ச நேரத்துலயே...அடுத்து இப்படி...

கொஞ்ச நேரத்துல, அம்பி சிரிச்சிக்கிட்டே கழுத்து அ...றாரு! :-)

அய்யோ! தூரத்து இடி(வெடி) முழக்கமா இருக்கே!

புயலுக்குப் பின் அமைதி மாதிரி தெரியுதா? யார் கை ஓங்கி இருக்கு, படத்துல?
இந்த மாதிரி காட்சிக்கு எல்லாம், தொடரும்-னு போடறதா? முற்றும்-னு போடறதா? :-)
இப்போ புரியுது, அம்பி ஏன் கீதாம்மா மேல பெட்டிஷன் தட்டி வுட்டாருன்னு! அதுவும் கவுண்டர் கிட்ட தலைவிய நரகத்து அண்டால காய்ச்சச் சொல்லி! ஆனா அங்கேயும் கவுண்டர் கேப்பிலேயே காண்டெஸா ஓட்டி, கீதாம்மா எஸ்கேப் ஆனது தனிக்கதை!