Tuesday, December 4, 2007

என் பயங்கரமான கனவில் வந்த அம்பி-கீதாம்மா!

சுதாக்கா...திடிர்னு போன வாரம், ஜிடாக்கில் சாட்டிக் கொண்டே, Blog Unionக்கு அழைப்பு அனுப்பி வச்சிட்டாங்களா?
கையும் ஓடல, காலும் ஓடல! கண்ணு மட்டும் ஆஸ் யூஷ்யல், நல்லாவே ஓடிச்சி, நியூயார்க் பேருந்துல இருக்குற அழகின் திருவுருவங்கள் மீது!

சரி், நம்ம யக்கா பாசமா அனுப்பிச்ச வச்ச அழைப்பாச்சேன்னு பார்த்தா, அது சும்மானா வெறும் அழைப்பு இல்ல!
வெத்தலை, பாக்கு, பூ, பழம், மொக்கை, அது கூட, $501.00ன்னு அனுப்பி வச்சாக்கா...மறுக்கத் தான் முடியுமா? - பொசுக்குனு சேந்துட்டேன்...

சரி...இங்க வலைப்பூவில் என்னவெல்லாம் பின்னறாங்கன்னு ஒரு எட்டு போயி பாத்தா தானே, நாமளும் பின்ன முடியும்! வலைக் குடும்பத்துக்கும் பேரக் காப்பாத்தற மாதிரி, கெளரவதையா இருக்கும்-னு ஒரு நோட்டம் வுட்டேன்!
நம்ம G3யக்கா, வேதாக்கா, சுமதிக்கா, புலி, திராச-ன்னு எல்லாருமே பல நல்ல விசயங்களைச் சொல்லி இருக்காக!

ஆனாப் பாருங்க, யாரோ கீதாம்மா-ன்னு ஒருத்தரு!
நம்ம நண்பரு அம்பிய, தோச்சி தொங்க போடறதுல மட்டும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தினியா இருந்திருக்காங்க! :-)
அப்ப விக்ரம் கூடவே வரும் வேதாள் யாருன்னு எல்லாம் கேக்கக் கூடாது:-)
சரி அப்படியே, தம்பி Dreamzz என்னா சொல்லியிருக்காரு-ன்னு படிக்கக்குள்ளார எனக்குத் தூக்கம் வந்திரிச்சி!

கடைசியா Dreamzzஐப் படிச்சதனால, அன்னிக்கி ராத்திரி பூரா ஒரே Dreamsss!
கனவு, நல்ல கனவா-கெட்ட கனவா-ன்னு நீங்களே பாத்துச் சொல்லுங்க!


அம்பியும், கீதாம்மாவும் சேந்து ஒத்துமையா நடனம் ஆடுறாங்க! OMG! - என்னால நம்பவே முடியலை! அதி பயங்கரக் கனவு-ன்னு இது தானோ?


ஆனாக் கொஞ்ச நேரத்துலயே...அடுத்து இப்படி...

கொஞ்ச நேரத்துல, அம்பி சிரிச்சிக்கிட்டே கழுத்து அ...றாரு! :-)

அய்யோ! தூரத்து இடி(வெடி) முழக்கமா இருக்கே!

புயலுக்குப் பின் அமைதி மாதிரி தெரியுதா? யார் கை ஓங்கி இருக்கு, படத்துல?இந்த மாதிரி காட்சிக்கு எல்லாம், தொடரும்-னு போடறதா? முற்றும்-னு போடறதா? :-)

இப்போ புரியுது, அம்பி ஏன் கீதாம்மா மேல பெட்டிஷன் தட்டி வுட்டாருன்னு! அதுவும் கவுண்டர் கிட்ட தலைவிய நரகத்து அண்டால காய்ச்சச் சொல்லி! ஆனா அங்கேயும் கவுண்டர் கேப்பிலேயே காண்டெஸா ஓட்டி, கீதாம்மா எஸ்கேப் ஆனது தனிக்கதை!

22 comments:

மதுரையம்பதி said...

வருக கே.ஆர்.எஸ்...நானே சுதாக்காவுக்கு ஒரு நன்றி அறிவிப்பு பண்ணனும்ன்னு நினைத்தேன். நீங்க பின்னால வந்து முன்னால நிக்குறீங்க... ஹிஹிஹி

// கவுண்டர் கேப்பிலேயே காண்டெஸா ஓட்டி, கீதாம்மா எஸ்கேப் ஆனது தனிக்கதை//

எத்தனை, எத்தனை கதைகள். ஒண்ணு ஒண்ணா எடுத்துவிடுங்க ரவி. நல்ல நகைச்சுவைக்கு காத்திருக்கிறோம்.

G3 said...

ஆஹா.. வந்ததுமே மிஸ்டர் வம்பி.. சாரி.. அம்பிய வம்பு பண்ண ஆரம்பிச்சாச்சா?? தொடரட்டும் உங்கள் வம்புகள் :))))

dubukudisciple said...

வாங்க கே.ஆர்.எஸ். எப்படி வந்ததுமே கலாயத்தல் ஆரம்பிசிடீங்க.. சூப்பர்.. தொடரும்னே போடுங்க.. எங்க எல்லாரோட ஆதரவும் உண்டு..

dubukudisciple said...

மதுரையம்பதி...
என்ன என் உங்கள அழைககலைனு கேட்டு ஒரு பதிவு மட்டும் தான் போடீங்க... சரி பதிவு வேண்டாம் ஒரு நன்றி மடல் கூட அனுப்பலைன்னு ஒரு வருத்தம் தாங்க..

ambi said...

ஆரம்பமே இப்படி கலக்கலா இருக்கே! இது தொடரட்டும். :)

அண்ணா! காமடி பண்ண நான் தான் இன்னிக்கு மாட்டினேனா? நடக்கட்டும், நடக்கட்டும். :)

ஆமா! ஆமா! இது உண்மையிலேயே எனக்கும் பயங்கர கனவு தான். :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆமா...
படத்துல யாரு அம்பி, யாரு கீதாம்மா-ன்னு சொன்னேனா? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
வருக கே.ஆர்.எஸ்...நானே சுதாக்காவுக்கு ஒரு நன்றி அறிவிப்பு பண்ணனும்ன்னு நினைத்தேன். நீங்க பின்னால வந்து முன்னால நிக்குறீங்க... ஹிஹிஹி//

பின்னால போனா,
நான் முன்னால வாரேன்! :-)

//எத்தனை, எத்தனை கதைகள். ஒண்ணு ஒண்ணா எடுத்துவிடுங்க ரவி. நல்ல நகைச்சுவைக்கு காத்திருக்கிறோம்//

கண்டிப்பா தல! என் கடன் கலாய்த்துக் கொண்டு கிடப்பதே! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G3 said...
ஆஹா.. வந்ததுமே மிஸ்டர் வம்பி.. சாரி.. அம்பிய வம்பு பண்ண ஆரம்பிச்சாச்சா?? தொடரட்டும் உங்கள் வம்புகள் :))))//

ஆமாங்க G3யக்கோவ்!
வம்பு பண்ணுற வம்பிய வம்பிழுக்காம சாந்தமே உருவான கீதாம்மாவையா வம்பிழுப்பது...? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//dubukudisciple said...
வாங்க கே.ஆர்.எஸ்.//

வந்துட்டேன் யக்கோவ்!

//எப்படி வந்ததுமே கலாயத்தல் ஆரம்பிசிடீங்க.. சூப்பர்.. தொடரும்னே போடுங்க..//

தொடரும்! தொடரும்! :-))
தொடை நடுங்கும் அளவுக்குத் தொடரும் :-)

//சரி பதிவு வேண்டாம் ஒரு நன்றி மடல் கூட அனுப்பலைன்னு ஒரு வருத்தம் தாங்க..//

ஆகா..
மெளலி, வருத்தப்படாத வாலிபி அக்காவை வருத்தப்பட வைக்கலாமா!
எந்நன்றி கொன்றார்க்கும் பின்னூட்டம் உண்டாம்...இல்லையில்லை
டிடி நன்றி கொன்றவர்க்கு!
- அப்படின்னு சென்னைத் தெருவள்ளுவர் கொரளைப் படிக்கலையா நீங்க? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ambi said...
அண்ணா! காமடி பண்ண நான் தான் இன்னிக்கு மாட்டினேனா? நடக்கட்டும், நடக்கட்டும். :)//

என்ன அம்பி சொல்லுறீங்க?
ஒங்கள வச்சி காமெடி கீமெடி பண்ணுறேனா? :-(

ஒங்களுக்கு ஆதரவான பதிவு தானே இது! :-)
நீங்க சொன்னீங்களேன்னு தலைவியை நரகத்து அண்டாவில் குந்த வைச்சதை எல்லாம் படிக்கலையா நீங்க?

இந்தாங்க!
http://vavaasangam.blogspot.com/2007/08/2_08.html

dubukudisciple said...

ஆமா...
படத்துல யாரு அம்பி, யாரு கீதாம்மா-ன்னு சொன்னேனா? :-)//
சொல்லலியே அது அடுத்த பதிவுல சொல்லுங்க..

dubukudisciple said...

ஆகா..
மெளலி, வருத்தப்படாத வாலிபி அக்காவை வருத்தப்பட வைக்கலாமா!
எந்நன்றி கொன்றார்க்கும் பின்னூட்டம் உண்டாம்...இல்லையில்லை
டிடி நன்றி கொன்றவர்க்கு!
- அப்படின்னு சென்னைத் தெருவள்ளுவர் கொரளைப் படிக்கலையா நீங்க? :-)///

என்னங்க அடுத்து மெல்ல கிடைத்த அவல் நானா?? நடக்கட்டும் நடக்கட்டும்..

நாகை சிவா said...

அசத்தலா உள்ள வந்து இருக்கீங்க KRS.

வருக வருக!

வேதா said...

வாங்க கே.ஆர்.எஸ் :)

/சும்மானா வெறும் அழைப்பு இல்ல!
வெத்தலை, பாக்கு, பூ, பழம், மொக்கை, அது கூட, $501.00ன்னு அனுப்பி வச்சாக்கா...மறுக்கத் தான் முடியுமா? - /
யக்கா சுதாக்கா எனக்கு இன்னும் பணம் வந்தே சேரலையே ;D

ambi said...

@KRS, அடடா நீங்க எழுதிய அந்த பதிவை இப்போ தான் படிச்சேன். இப்ப நல்லா புரியுது. :)

@DD, அந்த அம்பி கழுத்தை அறுக்கற படத்தை பார்த்தால் புரியுமே யாரு அம்பி? யாரு மொக்கை தலைவினு? :p

dubukudisciple said...

யக்கா சுதாக்கா எனக்கு இன்னும் பணம் வந்தே சேரலையே //
innoru avala..

மதுரையம்பதி said...

//என்ன என் உங்கள அழைககலைனு கேட்டு ஒரு பதிவு மட்டும் தான் போடீங்க... சரி பதிவு வேண்டாம் ஒரு நன்றி மடல் கூட அனுப்பலைன்னு ஒரு வருத்தம் தாங்க..//

யக்கா மன்னிச்சுக்கோங்க...நான் இன்னும் ஒரு பதிவு கூட போடல்ல இந்த பிளாக்-ல.

Dreamzz said...

ROFL! welcome anna!

கீதா சாம்பசிவம் said...

ஆஹா, கே.ஆர்.எஸ். இப்படியும் ஒரு சதிவலையில் மாட்டினீங்களா?
டிடி அக்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஆஅவ்வ்வ்வ்வ்வ், இது உங்களுக்கே நல்லா இருக்கா?

@அம்பி, உங்க வண்டவாளம் அங்கே தண்டவாளத்திலே ஏறிட்டதே?

@கே.ஆர்.எஸ். நல்வரவு, வரும்போதே எல்லாரையும் ஒரே கலக்குக் கலக்கிட்டீங்க! :)))))))))))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாகை சிவா said...
அசத்தலா உள்ள வந்து இருக்கீங்க KRS.
வருக வருக!//

@ புலி
நன்றி நன்றி

//வேதா said...
வாங்க கே.ஆர்.எஸ் :)//

நன்றி வேதா! சீக்கிரம் $501 வாங்கிடுங்க! டாலரின் மதிப்பு கொறைஞ்சிக்கிட்டே போகுது! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Dreamzz said...
ROFL! welcome anna!//

தினேஷ் தம்பி! Dank u Dank u!

//கீதா சாம்பசிவம் said...
ஆஹா, கே.ஆர்.எஸ். இப்படியும் ஒரு சதிவலையில் மாட்டினீங்களா?//

அப்பாடா பதிவின் கதாநாயகி(?) வந்தாச்ச்ச்ச்ச்சா? :-)

//@கே.ஆர்.எஸ். நல்வரவு, வரும்போதே எல்லாரையும் ஒரே கலக்குக் கலக்கிட்டீங்க! :)))))))))))))//

நன்றி கீதாம்மா...
என்னிக்குமே கலக்குறது நீங்க தான! :-)

கீதா சாம்பசிவம் said...

டிடி அக்காஆஆஆவ், டாலர் மதிப்புக் குறைஞ்சிட்டதாலே எனக்கு ஒரு 10,000$ செக் அனுப்பிடுங்க. போதும், அதுக்கு மேலே கேட்கலை! நான் எத்தனை நாளா இருக்கேன், கண்ணனுக்கு 501/- அப்படின்னா, முழுக்க முழுக்க "மொக்கை" போடும் எனக்கு 10,000 பத்தாது!!! :))))))))