இதுவரை பிறந்த நாள், திருமண வாழ்த்துக்கள் பதிவுகள் மட்டுமே தெரிவித்த என் கைகள் இன்று ஒரு இரங்கல் செய்தியை பதிவிட தள்ளப்பட்டு விட்டது.
ஆம்! தமிழில் தனக்கென்று ஒரு தனி நடை, நவீன இலக்கியத்தின் முதல் வித்து, கடினமான அறிவியல் விஷயங்களை பாமரனுக்கும் புரிய வைக்கும் அவரது எளிய நடை, பிக்க்ஷன் வகை கதைகள் என பல பரிமாணங்களை காட்டிய சுஜாதா இன்று நம்மிடையே இல்லை! என்ற செய்தியை கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இன்னமும் தனது எழுத்தில் இளமையை காட்டிய அவருக்கு வயது எழுபதுக்கு மேல் என நான் ரொம்ப நாள் நம்ப வில்லை. இதோ கற்றதும் பெற்றதும் என அவர் எழுதிய ஒரு குறிப்பு இங்கே!
அவர் மறைந்தாலும், அவரது படைப்புக்கள் என்றும் வாசகர் மத்தியில் நீங்கா இடம் பெறும் எனபதில் சந்தேகம் இல்லை.
பிளாக் யூனியன் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.