Thursday, February 28, 2008

சுஜாதா

இதுவரை பிறந்த நாள், திருமண வாழ்த்துக்கள் பதிவுகள் மட்டுமே தெரிவித்த என் கைகள் இன்று ஒரு இரங்கல் செய்தியை பதிவிட தள்ளப்பட்டு விட்டது.
ஆம்! தமிழில் தனக்கென்று ஒரு தனி நடை, நவீன இலக்கியத்தின் முதல் வித்து, கடினமான அறிவியல் விஷயங்களை பாமரனுக்கும் புரிய வைக்கும் அவரது எளிய நடை, பிக்க்ஷன் வகை கதைகள் என பல பரிமாணங்களை காட்டிய சுஜாதா இன்று நம்மிடையே இல்லை! என்ற செய்தியை கூட என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இன்னமும் தனது எழுத்தில் இளமையை காட்டிய அவருக்கு வயது எழுபதுக்கு மேல் என நான் ரொம்ப நாள் நம்ப வில்லை. இதோ கற்றதும் பெற்றதும் என அவர் எழுதிய ஒரு குறிப்பு இங்கே!

அவர் மறைந்தாலும், அவரது படைப்புக்கள் என்றும் வாசகர் மத்தியில் நீங்கா இடம் பெறும் எனபதில் சந்தேகம் இல்லை.

பிளாக் யூனியன் அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.

6 comments:

Sumathi. said...

ஆமாம், அம்பி, எனக்கு கூட கொஞ்சம் வருத்தம் தான். நான் கூட படிக்கற காலதிலேயே அவருடைய கதைகளை பாட புத்தகத்தில் ஒளித்து வைத்துலாம் படிச்சுருக்கேன்.என்ன பண்றது, இந்த மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாததாச்சே.அவர் மறைஞ்சாலும் அவர் ஞாபகம் எப்போதும் கதைகள் மூலமாக இருந்துண்டே இருக்கும்.

Dreamzz said...

kashtamaana vishayam thaan.... enna panna :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அறிவியல், ஆன்மீகம், ஜனரஞ்சகம், தமிழ் இலக்கியம், சினிமா, இசை என்று பல துறைகளிலும் தடம் பதித்த ஒரு பல்துறை வித்தகர் சுஜாதா அவர்கள்! ஒவ்வொரு துறையிலும் பழம் பாட்டு பாடாமல், இளமை ரத்தம் பாய்ச்சும் திறன் அறிந்தவர்.

அவரின் நினைவைப் போற்றுவோம்!

Swamy Srinivasan aka Kittu Mama said...

my all time favorite writer...kashtamaathaan irukku

ரசிகன் said...

//அவர் மறைந்தாலும், அவரது படைப்புக்கள் என்றும் வாசகர் மத்தியில் நீங்கா இடம் பெறும் எனபதில் சந்தேகம் இல்லை.//

மறுமொழிகிறேன்..:)

Tamil Home Recipes said...

Mihavum varutthappatten.