Sunday, June 15, 2008

ஜூனியர் அம்பியா??? ஜூனியர் தங்கமணியா??? தெரியலை!

இரண்டு நாள் முன்னால் திடீர்னு ஒரு தொலைபேசி அழைப்பு. யாருனு பார்த்தால் நம்ம "டாம்" தான் தொலைபேசியிலே. டாமுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதாயும், அந்தக் குழந்தைக்கு 15-ம்தேதி பெயர் சூட்டுவிழா நடப்பதாயும், அதற்கு நான் வரவேண்டும் என்றும் டாமின் அழைப்பு. திடீர்னு டாம் என்னை மை டியர் ஃபிரண்டுனு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாவே இருந்தது. போகலாமா வேண்டாமானு ஒரு யோசனை!!! அப்புறம் வெள்ளி அன்று போய்விட்டே வரலாம் என ஏகமனதாய் முடிவு செய்தோம். சனிக்கிழமை அன்று டாமுக்குத் தொலைபேசித் தெரிவிக்கலாம் அது வழக்கம் போல் "கொர்ர்ர்ர்ர்ர்ர்" குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருந்ததாய் டாமின் மனைவி தெரிவித்தார். சரி, வரோம்னு சொன்னால் போதும்னு சொல்லிட்டு இன்னிக்குக் காலம்பர கிளம்பினோம்.

அப்படி, இப்படினு காலம்பர 8 மணி ஆயிட்டது கிளம்ப. அதுக்குள்ளே ரயிலா, பஸ்ஸா என்று ஒரு சின்ன வாக்குவாதம் ஆரம்பிக்கும் போல் இருந்தது. ஆகவே முன்யோசனைக்காரர் ஆன, என்னோட ம.பா. பஸ்தான் என்று அடிச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுச்ச் சொல்லிட்டார். பஸ் ஸ்டாண்டுக்குப் போக அவர் எடுத்தது பழைய வண்டியை. அதிலே பெட்ரோல் ஊத்தறாரா, இல்லை ரேஷனில் கெரசின் யார் கிட்டேயாவது வாங்கி ஊத்தறாரானு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். என் முதல் ஆட்சேபணையை எழுப்பினேன். இதிலே உட்கார மாட்டேன்னு.அதெல்லாம் காதிலே வாங்கற ஆளா??? அசைஞ்சு கொடுக்கலையே??? அந்த வண்டியில் தான் போகணும், புது வண்டியை எல்லாம் பஸ்ஸ்டாண்டில் வச்சுட்டுப் போனால் வீணாயிடும்னு கண்டிப்பாய் மறுத்துட்டார். எந்த வண்டியானாலும் இடப்பிரச்னை, எல்லைப் பிரச்னை எல்லாம் வரும். அதுவும் நான் ஏறுவதுனால் வண்டியே கிளம்பவேறு கிளம்பாது. என்னத்தைச் செய்ய முடியும்??? நான் வாங்கிட்டு வந்த வரம் இவ்வளவு தான்னு வண்டியில் ஏறத் தயார் ஆனேன். என்ன ஆச்சரியம்??? வண்டி கிளம்பிடுச்சு. ரொம்ப சந்தோஷமா நல்ல சகுனம் தான்னு நினைச்சுட்டு, வண்டியில் உட்கார்ந்து தெரு முக்குத் திரும்பினால் ஒரு முக்கல், முனகல், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னனு பார்க்கிறதுக்குள்ளே வண்டி நின்னாச்சு.சரிதான் இன்னிக்குப் போனாப்பலதான், அநேகமாய் நாம் போறதுக்குள்ளே அம்பிக்கு, சீச்சீ, டாமுக்குப் பேரனோ, பேத்தியோ பிறந்துடும்னு தலையிலே கையை வைச்சு உட்கார இடம் தேடினேன். அதுக்குள்ளே, நம்மவர்(கமல் படம் இல்லைங்க, என் ம.பா. தான்) பெட்ரோல் டாங்க் திறக்கலைனு சொல்லிட்டு, திறந்து வண்டியைக் கிளப்பி பஸ்ஸ்டாண்ட் வந்து நின்னுட்டு இருந்த பல பஸ்களில் ஒரு ஆராய்ச்சி நடத்திட்டு, (எல்லாமே தி.நகர். சைதாப்பேட்டை பக்கம் போற பஸ்தான்) ஒரு பஸ்ஸைத் தேர்ந்தெடுத்து, இது தான் நம்ம விலைக்குச் சரிப்படும்கிறாப்போல என்னையும் வந்து உட்காருன்னார். சரினு போய் உட்கார்ந்தேன். அவரும் வந்து உட்கார்ந்துட்டு, என்னைக் கொஞ்சம் இடம் விடறயானு கேட்கவே, நான், "ஜன்னல் கம்பியிலே தான் இடம் இருக்கு, அங்கே உட்காரவா?" என்று அன்போடு கேட்கவே, அவர் முறைக்க, நான் முறைக்க, குருக்ஷேத்திரம் ஆரம்பிக்கும் முன் நாகரீகமாய் விலகணும்னு நான் தனியாப் போய் உட்கார்ந்துக்கறேன்னு போய் உட்கார்ந்துட்டேன். அம்மாடி, எவ்வளவு இடம் இருக்கு?? னு மனசிலே ஆச்சரியப்பட்டுக்கிட்டேன்.

டிக்கெட் வாங்கி பஸ் கொஞ்ச தூரம்போறதுக்குள்ளே டிக்கெட் செக்கிங்குக்கு வரவே, நாம தனியா முன்னாலே உட்கார்ந்திருக்கோமே, அவர் எங்கேனு தேடினால், செக்கிங் இன்ஸ்பெக்டரே, உங்க டிக்கெட் அவர் வாங்கிட்டாரும்மானு சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். ஒரு வழியா சைதாப்பேட்டை போய், அங்கே இருந்து மடிப்பாக்கத்தில் டாமின் மாமனார் வீடு போகும் பஸ்ஸிலும் ஏறி உட்கார்ந்தாச்சு. அதுக்குள்ளே மணி 10-20 ஆயிடுச்சு. சரிதான், எல்லாம் முடிஞ்சிருக்கும், நாம சரியா சாப்பாட்டுக்குப் போகப் போறோம்னு நினைச்சேன். அவங்க வீடு இருக்கும் தெருவை ஒரு வழியாக் கண்டு பிடிச்சுப் போக ஆரம்பித்தோம். தெருவைக் கண்டு பிடிக்கிறதுக்குள்ளே இரண்டு பேரிடம் கேட்டால், அவங்களே ஏரியாவுக்குப் புதுசாம், ஒருவழியாக் கண்டு பிடிச்சால் அவங்க சொன்ன லாண்ட்மார்க் இருக்கு, நம்பர் காணோம், முன்னால் போகலாம்னு அவர் சொல்ல, பின்னால் இருக்கும்னு நான் சொல்ல இரண்டு பேரும் இரண்டுபக்கம் போக ஆரம்பிச்சோம். அதுக்குள்ளே அதிசயமா இப்போ செல் கொண்டு போறோமேன்னு டாமுக்குத் தொலைபேசிக் கேட்கலாம்னு செல்லைக் கேட்டால் அவர் கொடுக்க மாட்டேன்னு தகராறு. என்னனு வலுக்கட்டாயமாய் வாங்கிப் பார்த்தால் சார்ஜே இல்லை. இருந்தாலும் ஒரு மாதிரியா நம்பரைப் போட்டால், அங்கே வந்த ஒரு பெண்மணி, குண்டைத் தூக்கிப் போடும் செய்தியைத் தெரிவிக்கின்றார்.

"ஸ்ரீராம் இருக்காரா?" என்று ஜம்பமாய் நான் கேட்க, ஸ்ரீராமா யார் அதுனு அவங்க் கேட்க, நான் திகைக்க, நம்பரைத் திருப்பிப் பார்க்க, எவ்வளவு நேரம் பேசுவேனு அவர் கத்த, நான் திருப்பிக் கத்த, அதுக்குள்ளே, போனில் வந்த அம்பியோட அம்மா??? தெரியலை, எங்க பிள்ளை தான் ஸ்ரீராம்னு சத்தியம் பண்ணிட்டு, தொலைபேசியை அம்பியோட தம்பி, இளவல், கண்கண்ட தெய்வம், குண்டர் படைத் தலைவர், திருவாளர் "கணேசனிடம் கொடுக்க, நான் அம்பியோனு நினைச்சுக் கூவ, நில்லுங்க, அங்கேயே நான் வரேன்னு அவர் சொல்ல, சரினு நாங்க நின்னோம். அதுக்குள்ளே, இரண்டு பேருக்கும் ஒரு கைகலப்பு ஆச்சு. யாரு ஸ்ரீராம்னு அவர் கேட்க, அம்பிதான்னு, நான் சொல்ல, நேத்து நீ அம்பினு கேட்டியே, அப்படியே கேட்டிருக்கலாமேனு அவர் சொல்ல, நேத்திப் பேசினது அம்பியோட, தங்கமணி, அவங்களுக்கு இந்தக் கதை மட்டுமில்லை, இன்னும் தெரியும், இன்னிக்கு அவங்க பேசலைனு நான் சொல்ல, அவர் நீ குழப்பறேனு சொல்ல, உங்களுக்குப் புரியலைனு நான் சொல்ல, அப்போ ஏன் ஸ்ரீராம் யாருனு கேட்கிறாங்கனு அவர் கேட்க, நான் முழிக்க, இரண்டு பேரும் பல்லைக் கடிக்க, அதைப் பார்த்து சந்தோஷத்தோடு கணேசன் வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் என்ன பேசறதுனு முழிக்க, முதல்லே வாங்க, அப்புறமா மிச்சத்தை வச்சுக்கலாம்னு கணேசன் வீட்டுக்குக் கூட்டிப் போனார்.
வீட்டுக்குப் போனதும், அம்பி, தங்கமணி, அம்பியோட அம்மா, அப்பா, மாமனார், மாமியார் எல்லாரும் வரவேற்க, சற்று நேரம் உட்கார்ந்து விட்டு குழந்தையைப் போய்ப் பார்த்தேன். இப்போப் பார்த்தால் தங்கமணி சாயலிலேயே இருக்கிறான் குழந்தை. போகப் போகத் தான் தெரியும் யார் மாதிரினு. அம்பி மாதிரி இருப்பானோ, இல்லை தங்கமணி மாதிரியோ புரியலை, இருந்தாலும் ஜூனியர் அம்பி, ஜாலியாக ஒரு "தலைவி" வந்து இவ்வளவு கஷ்டப் பட்டு நம்மைப் பார்க்க வந்திருக்காங்களேனு கொஞ்சம் கூடக் கவலைப் படாமல் விளையாடிக் கொண்டு இருந்தார். "சூர்யா" என்ற "அனந்த நாராயணனு"க்கு மனமார்ந்த நல்லாசிகளும் வாழ்த்துகளும்.

அப்புறமாய் அங்கே சாப்பாடு சாப்பிட்டுட்டு, வீட்டுக்கு வந்தது ஒரு தனிக் கதை, இன்னொரு நாள் வச்சுக்கலாம், இப்போ அம்பியோட ஜூனியருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுப்போம், அனைவரும். யூனியன் சார்பிலும் அனைவரின் வாழ்த்துகளையும் தெரிவிச்சாச்சு.

25 comments:

மதுரையம்பதி said...

குழந்தைக்கு அன்பும் ஆசிகளும்...

அப்பாடி நீங்களாவது பெயரைச் சொன்னீங்களே....அம்பி பெயர் வச்சப்பறம் கூட மெயில் அனுப்பினாரே தவிர, பெயரைச் சொல்லலை...

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்த மாதிரி அமர்களம் எல்லாம் இல்லாமல் நானும் தங்கமணியும் போய் பார்த்துவிட்டு அமைதியாய் திரும்பி வந்த கதையும் உண்டு.நான் வந்தது அம்பி&கம்பெனிக்கு 10 நிமிடத்திற்கு அப்பறமும் தங்கமணி வந்த விஷயம் 20 நிமிடத்திற்கு அப்பரம்தான் தெரிந்தது. ஆமாம் பூங்காற்றுக்கும் புயலுக்கும் வித்தியாசம் சாரி தொண்டனுக்கும் தலைவிக்கும் வித்தியாசம் வேண்டாமா?

ambi said...

ஹிஹி, எங்க வீட்டுக்கு வரதுக்கு இவ்ளோ அதிதடி நடந்ததா? கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. :p

அதெல்லாம் சரி, உங்க போட்டோ ஒன்னு நான் எடுத்து அனுப்பி வெச்சேனே? அதை ஏன் இங்க போடலை? :))


@மெளலி அண்ணா, சிரமத்துக்கு மன்னிக்கவும்.

ambi said...

@geetha madam, நீங்க வந்தவுடன் உங்க பட்டு புடவையில் உச்சா அடிக்க டிரெயினிங் குடுத்து இருந்தேன். தூக்க கலக்கத்துல மறந்துட்டான் போலிருக்கு. அடுத்த தடவை நிச்சயம். :p

ambi said...

@திராசா sir, ஆமா நீங்க வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை. :))

கீதா சாம்பசிவம் said...

@மதுரையம்பதி, அம்பி எங்கே குழந்தை பெயரை என்னிடமும் சொன்னார்??? நான் குழந்தையையே பார்த்துக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன், அதனால் தான் பெயரைப் போட முடிஞ்சது!!!! :)))))))

கீதா சாம்பசிவம் said...

@திராச, சார், ஹிஹிஹி, நான் வரப்போறேன்னு தெரிஞ்சதும் தான் நீங்க கிளம்பினீங்கனு அம்பி என் கிட்டே சொல்லியாச்சு!!! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,.,.,.,., என்ன தொண்டர் சார் நீங்க, வரவேற்புக்கு இருக்கணும்னு கூட இல்லாமல் கிளம்பிட்டீங்க???? :P

கீதா சாம்பசிவம் said...

@அம்பி, ஹிஹிஹி, இந்த மொக்கை போதுமா??? இன்னும் கொஞ்சம் வேண்டுமா??? :P

கீதா சாம்பசிவம் said...

//@geetha madam, நீங்க வந்தவுடன் உங்க பட்டு புடவையில் உச்சா அடிக்க டிரெயினிங் குடுத்து இருந்தேன். தூக்க கலக்கத்துல மறந்துட்டான் போலிருக்கு. அடுத்த தடவை நிச்சயம்//

@அம்பி, அது பட்டுப் புடவையே இல்லை, குழந்தை தூங்கவும் இல்லை, நல்லாப் பார்த்துப் பேசிட்டு, உங்களைப் பத்திப் புகார் எல்லாம் கொடுத்தானே??? :P

கீதா சாம்பசிவம் said...

//@திராசா sir, ஆமா நீங்க வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை. :))//

தலைவி வரதுக்குத் தான் அமர்க்களப்படும், தொண்டர்கள்னா அடக்கி வாசிக்க வேண்டாம்??? அம்பி, நினைப்பு வச்சுக்குங்க!!!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அம்பிக்கு, சீச்சீ, டாமுக்குப் பேரனோ, பேத்தியோ பிறந்துடும்னு//

ஹேய்...இதச் சொல்லவே இல்ல?
Once again congrats ambi! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கணேசா
கடைசீல நீ தான் மாட்டிக்கிட்டியா? :-)

//இப்போப் பார்த்தால் தங்கமணி சாயலிலேயே இருக்கிறான் குழந்தை. போகப் போகத் தான் தெரியும் யார் மாதிரினு//

அந்தக் கிளி மூக்கைச் சொல்லலையே ஜெர்ரியம்மா! அதை மொதல்ல சொல்லுங்க!

//அம்பி மாதிரி இருப்பானோ//

உஷ்ஷ்ஷ்!
இப்பிடி எல்லாம் பச்ச புள்ளைய பயமுறுத்தக் கூடாது!
அழகா, பாந்தாமா, தாயைப் போல பிள்ளை-ன்னு வாழ்த்துங்க!

அம்பி மாதிரி இருப்பானோன்னு சொன்னாக்கா, ஜெர்ர்ரியம்மாவுக்கு ஆப்புகள் தொடர்ந்து தொடரணும்-னு ஆகி விடுமே! அப்படி ஒரு ஆசையா? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சூர்யா" என்ற "அனந்த நாராயணனு"க்கு மனமார்ந்த நல்லாசிகளும் வாழ்த்துகளும்//

நாராயண! நாராயண!!
சூர்யா குட்டிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அனந்த கோடி ஆனந்தங்கள் பொங்க, அனந்த நிலையத்தான் அருள்வானாக!

ambi said...

//அனந்த கோடி ஆனந்தங்கள் பொங்க, அனந்த நிலையத்தான் அருள்வானாக!
//

KRS அண்ணே! பெயரை கேட்டவுடன் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரி இருக்குமே உங்களுக்கு? :p

கீதா சாம்பசிவம் said...

@கே ஆர் எஸ், டாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்., அம்பிக்கு வாழ்த்துச் சொன்னதுக்கு! :P

//அம்பி மாதிரி இருப்பானோன்னு சொன்னாக்கா, ஜெர்ர்ரியம்மாவுக்கு ஆப்புகள் தொடர்ந்து தொடரணும்-னு ஆகி விடுமே! அப்படி ஒரு ஆசையா? :-))//

அதெல்லாம் ஆப்புகள் எத்தனை வந்தாலும் அஞ்சா நெஞ்சளாகத் தன்னந்தனியே எதிர்த்து நிற்க மாட்டோமா என்ன??? அதனால் "ஆப்புக்கு அஞ்சாள்" என்ற பெயரும் இன்று முதல் நமக்கே உரியது!! :P

கீதா சாம்பசிவம் said...

//KRS அண்ணே! பெயரை கேட்டவுடன் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரி இருக்குமே உங்களுக்கு? :p//

@அம்பி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்., வேறே வழியில்லாமல் ஒத்துப் போகிறேன், இதுக்கு மட்டும், இப்போது மட்டும், இனி எப்போதும் இல்லை என்ற உறுதியுடன்!!!! :P :P

திவா said...

சூர்யாவுக்கு ஆசிகள்.
இந்த பேர் கொண்டவங்க சோடை போக மாட்டாங்க!
போட்டோ ஆல்பம் எல்லாம் பாத்தேன்! நன்றி அம்பி!
கீ பாட்டி, பால் பாயாசம் கிடச்சுதா இல்லியா?

கீதா சாம்பசிவம் said...

//கீ பாட்டி, பால் பாயாசம் கிடச்சுதா இல்லியா?//

உங்களை யூனியனிலே சேர்க்க சிபாரிசு பண்ணினதே தப்பாப் போச்சே??? :P :P
இந்த அம்பியோட சேர்ந்து நீங்களும் கெட்டுப் போகப் போறிங்க, :P :P

இல்லைனா இது விக்கிரமாதித்தன் சிம்மாசனமோ?? :)))))))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அனந்த கோடி ஆனந்தங்கள் பொங்க, அனந்த நிலையத்தான் அருள்வானாக!
//

//KRS அண்ணே! பெயரை கேட்டவுடன் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரி இருக்குமே உங்களுக்கு? :p//

சேச்சே...
அதனினும் இனிய,
அமிழ்தினும் இனிய,
துளசீ தீர்த்தம் பருகியது போல இருந்துச்சி! :-)))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதனால் "ஆப்புக்கு அஞ்சாள்" என்ற பெயரும் இன்று முதல் நமக்கே உரியது!! :P//

அம்பிக்கு அஞ்சாள் போற்றி!
ஆப்புக்கு அடங்காள் போற்றி!
இம்சைக்கு இடராள் போற்றி!
ஈயத் தலைவியே போற்றி!
உள் குத்துக்கு உருளாள் போற்றி!
.....
அச்சோ...எனக்கே தாங்கலை!
இதுக்கு மேல கன்ட்டினியூ பண்ணிக்கிறவங்க கன்ட்டினியூ பண்ணிக்கோங்கப்பா :-)

gils said...

oh...suryava name..enkita chandramouleesvararnu vachirukaratha oruthanga sonnanga... grrrrrrrr
kadisila potrukara pic and ambi resemblence ekkachakkam..super selection

கீதா சாம்பசிவம் said...

//oh...suryava name..enkita chandramouleesvararnu vachirukaratha oruthanga sonnanga... grrrrrrrr
kadisila potrukara pic and ambi resemblence ekkachakkam..super selection
//
ஹிஹிஹி, கில்ஸ், டாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ், நீங்க ஒருத்தராவது அந்தப் படத்தைப் பாராட்டினீங்களே, அந்தப் பெருந்தன்மை என் கண்களைக் குளமாக்கிவிட்டது போங்க! :P

அபி அப்பா said...

அம்பி குழந்தையை பார்த்து வந்தாச்சா! நல்லது நல்லது!!!

குழந்தைக்கு என் ஆசீர்வாதங்கள்,அம்பி தம்பதிக்கு என் வாழ்த்துக்கள்!

கீதாம்மா சென்னை வந்தாச்சா! நான் இப்பவும் நீங்க வடக்கிலே இருப்பதாக நினைத்து கொண்டிருக்கேன்!

வல்லிசிம்ஹன் said...

சூர்ய நாராயணனுக்கு
எங்கள் ஆசீர்வாதங்கள்.

கீதா

இதுக்குத் தான் வெளியூர் வரக்கூடாது,.
பார்டு நல்ல சாப்பாடு விட்டுப் போச்சு.:)
எல்லாமே அட்வென்சராப் [போச்சுப்பா உங்க வாழ்வில!!!!!

மதுரையம்பதி said...

//எல்லாமே அட்வென்சராப் [போச்சுப்பா உங்க வாழ்வில!!!!!//

வல்லியம்மா, ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க ஹிஹிஹி