Monday, June 16, 2008

'பந்த்'தால் பாதிக்கப்பட்ட பயணிகள், மந்திரிக்கு பாடம்

சில சமயம் ஒரு செய்தியை படிக்கும் போது "நல்லா வேணும்" ன்னு நினைப்போம்।
இது அவ்வளவு நல்லதில்லேனாலும்.... செய்தியை படிங்க!
--


'பந்த்'தால் பாதிக்கப்பட்ட பயணிகள், மந்திரிக்கு பாடம் : ரயிலில் ஆறு மணி நேரம் சிறை வைப்பு

ஜூன் 07,2008,00:00 IST

கிஷன் கஞ்ச் (பீகார்) : இடதுசாரி கட்சிகள் நடத்திய "பந்த்' காரணமாக பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள், மேற்கு வங்க அமைச்சரை ரயிலுக்குள் ஆறு மணி நேரம் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகள் நேற்று முன்தினம் "பந்த்'நடத்தின. பஸ், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. அதில் பயணம் செய்தவர்கள் அவதிக்குள்ளாயினர்.


கோல்கட்டாவிலிருந்து டார்ஜிலிங் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியில் நிறுத்தப்பட்டது. அந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் மேற்கு வங்க மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அசோக் பட்டாச்சார்யா பயணம் செய்தார். நீண்ட நேரமாக ரயில் நின்று கொண்டிருந்ததால், பயணிகள் வெறுப்படைந்தனர்.


சிலிகுரி மாவட்ட அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் அசோக், உடனடியாக கிஷன்கஞ்ச் பகுதிக்கு காரையும், போலீசாரையும் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதையடுத்து, அமைச்சரை அழைத்துச் செல்ல காரும், பாதுகாப்பு போலீசாரும் வந்தனர்.


ரயிலை விட்டு கீழே இறங்கிய அமைச்சர், வேகமாக காரை நோக்கி சென்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள், அமைச்சரை அடையாளம் கண்டு கொண்டனர். உடனடியாக அவரை முற்றுகையிட்டு, "உங்கள் கட்சி தானே "பந்த்' நடத்துகிறது. இதனால் நாங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் நடு வழியில் நிற்கிறோம். நீங்கள் மட்டும் இங்கே இருந்து போக நினைப்பது சரியல்ல. எங்களுடன் சேர்ந்து, நீங்களும், உங்கள் கட்சி நடத்தும் "பந்த்'தின் கொடுமையை அனுபவியுங்கள்' என, ஆவேசத்துடன் கூறினர்.


போலீசார் வற்புறுத்தியும் பலன் ஏற்படவில்லை. வேறு வழி இல்லாமல், மீண்டும் ரயிலுக்குள் ஏறி அமர்ந்தார், அமைச்சர். ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரயிலுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். நீண்ட நேரத்திற்கு பின், ரயில் செல்வதற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அமைச்சரும் ரயிலில் தன் பயணத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதற்கிடையே, அமைச்சருடன் தகராறு செய்ததாக, திலீப் சிங் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின், ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி, போலீசார் கூறுகையில், "அமைச்சர் பயணம் செய்த ரயிலில் தான், திலீப் சிங்கும் பயணம் செய்தார். அமைச்சரை தகாத வார்த்தைகளில் திட்டினார். அவருடன் இருந்த பத்திரிகையாளரையும் தாக்கினார். இதனால் தான், அவரை கைது செய்தோம்' என்றனர்.

8 comments:

Sumathi. said...

நல்லதுக்கே காலமில்லை சாமி.
இந்த மாதிரி எல்லாரும் இருந்துட்டா இந்த "பந்த்" லாம் ஒன்னுமே இல்லாம் போயிடும்.

Geetha Sambasivam said...

நாடு முழுதும் இம்மாதிரியான தண்டனைகளை அமைச்சர்களுக்குத் தர மக்கள் முன்வரவேண்டும்.

அகரம் அமுதா said...

அன்பனென் பேரமுதா ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே
இன்னுமிரு பத்தெட்டை எட்டவில்லை -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் சொல்கின்றேன் வந்து!

உம்! கலக்குங்க! இந்த மாரியான் ஆசாமிகளுக்கு இதுவும்வேணும் இன்னமும் வேணும்! சூப்பர்ப்! நேரம்கிடைத்தால்என் வலைக்கு வந்து செல்லுங்க! நன்றி

ambi said...

:-))))

gils said...

sooper news..ithey mathiri elarum usharita gummu

gils said...

sooper news..ithey mathiri elarum usharita gummu

கோவை விஜய் said...

தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..

Vijay
pugaippezhai.blogspot.com

Madurai citizen said...

இதுவும்வேணும் இன்னமும் வேணும்!
நேரம்கிடைத்தால்என் வலைக்கு வந்து செல்லுங்க!