Thursday, July 31, 2008

மதுரை மைந்தனுக்கு நாளை பிறந்த நாள்

மதுரை என்றவுடன் மணக்கும் மல்லிகை நினைவுக்கு வந்தது போய் இப்பவெல்லாம் மதுரையம்பதி என்ற மெளலி அண்ணா தான் நினைவுக்கு வருகிறார்.

இளம் நொங்கு அல்லது இனிமையான நீரையுடைய இளனீர் குடித்து முடித்தவுடன் ஒரு விவரிக்க முடியாத புத்துணர்ச்சி வருமே? அனுபவித்து இருக்கிறீர்களா? அதே போல், பழகுவதற்க்கு இனிமையானவரும், தம் சொற்களால் பிறர் மனம் சற்றும் வாடாதபடி வார்த்தைகளை வெகு ஜாக்ரதையாக பேசுபவரும், தன்னடக்கத்தை அனுமனிடமிருந்து பெற்றவரும், ஆச்சார்ய ஹ்ருதயத்தில் குரு உபாசனை செய்பவரும், லலிதையின் ரூபத்தை செளந்தர்ய லஹரி வாயிலாக மிக எளிமையாக நமக்கு அளிப்பவரும், சிதம்பர ரகஸ்யத்தில் பின்னூட்டத்தில் கலக்குபவரும், எதிர்கட்சியிலிருந்து தப்பித்து நமது கட்சிக்கு வந்து பலம் சேர்பவரும், மதுரையம்பதி என்ற தமது சொந்த பிளாகில் கூட மொக்கை போட தெரியாத அப்பாவியுமான மெளலி அண்ணாவுக்கு நாளை ஆகஸ்ட் 2ம் நாள் பிறந்த நாள் வருகிறபடியால் வாழ்த்த இந்த அடியேனுக்கு வயதில்லை, வணங்குகிறோம்.


(அண்ணாவுக்காக, முட்டை இல்லாத கேக்)

பி.கு: இவங்க வீட்டு ரசம் ரொம்ப நல்லா இருக்கும், அன்பர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். :))

13 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவினை அம்பி தாங்க,
கீதாம்மா கிர்வாள் ஏந்த,
திவாசார் கேன்டில் ஏத்த
கணேசன் கவரி பற்ற,

கெளசிகம் ராகம் பாட,
பெங்களூர் ஷைலஜா பொன்
கரங்களால் கொடுக்க வாங்கி,
கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"
தம்பி கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"!

:)))

Geetha Sambasivam said...

//சிதம்பர ரகஸ்யத்தில் பின்னூட்டத்தில் கலக்குபவரும், எதிர்கட்சியிலிருந்து தப்பித்து நமது கட்சிக்கு வந்து பலம் சேர்பவரும்//

என்னத்தைக் கலக்குறாரு போங்க, ஒரே கலக்கு கலக்கி ரசம், குழம்பு, சாம்பார், பாயாசம் எல்லாத்தையும் ஒரே கரண்டியைப் போட்டுக் கலக்கறாரோனு நினைக்கிறேன்! :P :P :P

இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும், ஆசிகளும் மெளலி! :)))))))

Geetha Sambasivam said...

//கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"
தம்பி கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"!//

அட, அப்போக் கூட உங்க பேரை இரண்டு தரம் சொல்லிக்கிறீங்க???? :P :P :P :)))))))))))))))

இலவசக்கொத்தனார் said...

ட்ரீட் குடுக்கப் பயந்துதான் சென்னை வரலையா? நல்லா இருங்க சாமி!!

இருந்தாலும் நானும் வாழ்த்து சொல்லிக்கறேம்பா!!

Geetha Sambasivam said...

அட, இ.கொ. சென்னை??? சொல்லவே இல்லையே??? இங்கே வரலாமே???? ஒரு மெயில் கொடுத்துட்டு!

திவாண்ணா said...

அட்வான்ஸ் ஆசீர்வாதம் மௌலி!
(இல்லீங்க இது ஒரு கிருத்துவர் பேர் பட்டப்பேர் இல்லை)

தி. ரா. ச.(T.R.C.) said...

பல்லாண்டு பலகோடி நூறாயிரம் வாழ்க மௌளி.

Sumathi. said...

ஹாய் மெளலி சார்,

அட நாளைக்கு வாழ்த்தலூம்னு நினைச்சேன், சரி அதனாலென்ன அட்வான்ஸா இன்னிக்கும் நாளைக்கும் வாழ்த்திட்டா போச்சு.

இனிய பிறந்தா நாள் வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பதிவினை அம்பி தாங்க,
கீதாம்மா கிர்வாள் ஏந்த,
திவாசார் கேன்டில் ஏத்த
கணேசன் கவரி பற்ற,

கெளசிகம் ராகம் பாட,
பெங்களூர் ஷைலஜா பொன்
கரங்களால் கொடுக்க வாங்கி,
கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"
தம்பி கேஆரெஸ் புனைந்தான் "மௌலி"!//

ஆஹா! மௌலி பேர்ல லாலியா?:)
அருமை ரவி!

//இளம் நொங்கு அல்லது இனிமையான நீரையுடைய இளனீர் குடித்து முடித்தவுடன் ஒரு விவரிக்க முடியாத புத்துணர்ச்சி வருமே? அனுபவித்து இருக்கிறீர்களா? அதே போல், பழகுவதற்க்கு இனிமையானவரும், தம் சொற்களால் பிறர் மனம் சற்றும் வாடாதபடி வார்த்தைகளை வெகு ஜாக்ரதையாக பேசுபவரும், தன்னடக்கத்தை அனுமனிடமிருந்து பெற்றவரும்,,//

நிஜம் அம்பி....சரியா சொல்லிட்டீங்க!


//
பி.கு: இவங்க வீட்டு ரசம் ரொம்ப நல்லா இருக்கும், அன்பர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். :))//

இப்போவே போறேன் வீடு பக்கம்தான்:):)


அரங்கன் அருளோடு அம்பிகை மீனாட்சியின் கருணையோடு அளவில்லா
பல செல்வம், புகழ் எல்லாம் பெற்று பல்லாண்டு வாழ உங்க (செ)வெல்ல அக்கா வாழ்த்துகிறேன்,மௌலி!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

அம்பி-தம்பியின் சிறப்பான எழுத்துக்கள்ள என்னை ஏதோ ரொம்பவும் அதிகமாக புகழ்ந்திருக்காங்க...அவர்களது அந்த அன்புக்கு சிறப்பு நன்றி.

வம்பராமாயண புகழ் கே.ஆர்.எஸுக்கும், இ.கொ வுக்கும் எனது நன்றிகள்.

பெரியவர்கள், திரச, திவா, கீதாம்மா, ஷைல்ஸக்கா, சுமதியக்கா ஆகியோரது ஆசிகள் என்னை கண்டிப்பாக நல்வழிப்படுத்தும். அதற்கும் எனது நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

Dear Mouli,

we wish you a very happy birthday. bagavaan ella saukkiyanggaLaiyum

kodukkaNum.
anbudan
vallimma.