Monday, November 3, 2008

தி.ரா.ச சார் வீட்டு கல்யாணம்


வாழ்க்கையில் சிலர் வீட்டு கல்யாணங்களை மிஸ் பண்ணவே கூடாது. ஒரு வேளை மிஸ் பண்ணி விட்டால் அப்புறம் ஒரே பீலிங்க்ஸா இருக்கும். எனவே ஒரு மாதத்துக்கு முன்னமே பிளான் பண்ணி தீவாளியோடு சேர்த்து லீவு போட்டு தி.ரா.ச சார் வீட்டு கல்யாணத்துக்கு ரிஷப்ஷனிலிருந்து, முகூர்த்தம் வரை கலந்து கொள்ள முடிந்தது.

ரிசப்ஷனுக்கு தங்கமணி, ஜுனியர், அவன் தம்பி அங்கதன் சகிதமாக மண்டபத்தில் வந்து இறங்கியதும் வாசலிலேயே பளீரிடும் வெண் சட்டை, டை சகிதம் தி.ராச.சார் உமா மேடம் சகிதமாக எங்களை வரவேற்றார். எனக்கு அப்பவே கண்ணை கட்டி விட்டது. உள்ளே நுழைந்தால் நாதஸ்வர கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து காமிராக்கள் பளிச்சிட மணமக்கள் மேடைக்கு வர சர்க்யூட் டிவி உதவியால் மேடையில் நடைபெறுவதை எந்த மூலையிலிருந்தும் பார்க்க முடிந்தது.

மொய்க்கு முந்து! பந்திக்கு பிந்து!(கீதா மேடம் நோட் தி பாயின்ட்!) என்ற கொள்கைப்படி வாங்கி வந்திருந்த கிப்ட்களுடன், அமெரிக்காவில் இருக்கும் எஸ்கேஎம்மின் மொய் கவருடன் வரிசையில் காத்திருந்தோம். கிப்ட் என்ன?னு தி.ராச. சார் பிரித்து பார்த்து பின்னூட்டம் இடுவார்.

தம்பியுடையான் ஏற்கனவே சாருக்கு உதவியாக வருபவர்களை வரவேற்பதிலும், கிப்ட்களை அடுக்கி வைப்பதிலும் முனைந்து விட்டான். மிக சரியாக மேடைக்கு ஏறும்போது தங்கஸ், புடவை பார்டர் வீடியோவில் சரியா தெரியாது! அதான்! என ஜுனியரை என் கையில் திணித்து விட்டது தற்செயலான விஷயம் என ஏமாந்து விட்டேன். அதுவரை என் மீது ஒரு நல்ல அபிப்ராயம் வைத்திருந்த பல காயத்ரி, வைஷ்ணவிகளின் அம்மாக்கள் முகத்தை திருப்பி கொண்டதும் தான் தங்கமணியின் நமட்டு சிரிப்பில் ஒளிந்திருந்த வில்லத்தனம் எனக்கு லேட்டாக புரிந்தது. பின் மனதை தேற்றிக்கொண்டு பந்திக்கு போய் பஃபே முறையில் ஒரு பெங்காலி ஸ்வீட்(பெயர் என்ன?), கட்லட், சாம்பார் சாதம், ரசம் சாதம்,(சில ஐட்டங்கள் மறந்து விட்டது) எல்லாம் அமுக்கி விட்டு நான் வந்திருந்த வாடகை காரில் ஏறிக் கொண்டேன்.

மறு நாள் முகூர்த்ததுக்கு காலை எட்டு மணிக்கே நான் மட்டும் வந்து சேர்ந்தேன். தம்பி அங்கேயே தங்கி விட்டான். காசி யாத்ரைக்கு கிளம்பிய மாப்பிள்ளை ஆழ்வார்பேட்டை சிக்னல் தாண்டி லஸ் கார்னர் வரை போய்விடும் அபாயம் இருந்ததால் சார் பெரிய மனது பண்ணி அழைக்க திரும்பி வந்து ஊஞ்சலில் அமர்ந்தார். தானே இயற்றிய ஒரு பாடலை, மைக் பிடித்து தன் சொந்த குரலில் இனிமையாக சார் பாட ஆரம்பிக்க ஊஞ்சல் களை கட்டியது. ராகம் என்ன ஆபேரியா?

மாப்பிள்ளை கட்டி இருந்த அதே ஸ்டெயில், ரகத்தில் தி.ராச சாரும் பட்டு வேஷ்டி கட்டி இருந்தது மற்றும் உமா மேடமும் கிளி பச்சை அரக்கு பார்டரில் பாந்தமான ஒன்பது கஜத்தில் இருந்தது மண்டபத்தில் பொண்ணு மாப்ளை யாரு? என்ற சந்தேக அலை பரவியதை தவிர்க்க முடியலை.

இடைப்பட்ட கமர்ஷியர் ப்ரேக்கில் நான் காலை டிபனுக்கு நழுவி விட்டேன். மெதுவான இட்லி, முறுகலான தோசை, நெய் மணக்கும் பொங்கல், தொட்டுக்க தேங்காய் மற்றும் தக்காளி சட்னி, பருப்பு சாம்பார் மற்றும் அசோகா அல்வா ( நான் அதை கேசரின்னு நினைச்சு கொசுறு எல்லாம் கேட்டு தொலைத்தேன்) என லைட்டா ஒரு டிபனை (இதுவாடா லைட்டு?) சாப்பிட்டு விட்டு பில்டர் காப்பியையும் சாப்பிட்டு விட்டு தெம்பாக வந்தமர்ந்தேன்.

இதற்கிடையில் முந்தின நாளே அம்பத்தூர்ல இருந்து மொபெட், பேருந்து, எலக்ட்ரிக் டிரேயின் என சகலவிதமான வாகனங்களிலும் ஆரோகணித்து கல்யாணத்துக்கு கிளம்பிய கீதா மேடம், ஒரு வழியா அடுத்த நாள் காலை மண்டபத்தில், நேரே டிபன் நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். எனக்கு சாம்பு மாமாவின் பாவமான முகம் ஏற்கனவே நினைவில் இருந்ததால் டக்குனு அடையாளம் கண்டு கொண்டு ஷேம நலன் விசாரித்தேன். பக்கத்தில் கர்ர்ர் புர்ர்ர்ர்னு சவுண்டு வரவே அது நிச்சயமாக சம்பு மாமாவை அடக்கியாளும் கீதா மேடமாக தான் இருக்கும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

பின் மூத்த பதிவரான மேடத்தை தக்க ஆசனத்தில் அமர்த்தி பேசிக் கொண்டு இருந்தோம். ஒரு காலத்தில் பதிவர் என அறியப்பட்டவரும், கீதா மேடத்தின் பினாமியுமான திருமதி வேதா, தன் ரங்கமணி பின் தொடர வந்து சேர்ந்தார். அதுக்கப்புறம் ஒரே வம்பு! வம்பு வம்பு தான். தனக்கு லட்சகணக்கான பின்னூட்டங்கள் மெயில் வந்து குவிவதாகவும் பப்ளிஷ் பண்ண நேரமே கிடைப்பதில்லை!னு மேடம் விட்ட அலப்பரை இருக்கே!


முகூர்த்தம் முடிந்ததும், ஏற்கனவே சாம்பு மாமா சமைத்து வைத்திருப்பதால் நாங்க கிளம்பறோம்! என அவசரம் அவசரமாக மேடம் கிளம்பி விட்டார். கிளம்பும் போதும் கையில் கிப்ட் பாக்ஸ் வைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பீன்ஸ் உசிலி (அன்று பீன்ஸ் கிலோ என்பது ரூபாய் சென்னையில்), கத்ரிகாய் சாம்பார், அவியல், கடலை பருப்பு பாயசம் (இரவு வயத்தை கலக்கி விட்டது), தக்காளி ரசம், அப்பளம், வடை என முகூர்த்த சாப்பாடு அமர்களமாய் இருந்தது. சிறிது நேரம் திராச சாருடன் பேசிவிட்டு மறக்காமல் தாம்பூல பை, பக்ஷணம் (லட்டு, ஐந்து சுத்து முறுக்கு, அதிரசம்) எல்லாம் நானும், மெளலி அண்ணாவும் வாங்கி கொண்டோம்.

சில துளிகள்:


திருமண மண்டபம் முழுக்க நம்மாழ்வார், பெரியாழ்வார், மணவாளமாமுனிகள்னு ஒரே வைஷ்ணவ பெரியவர்களின் திருபடங்கள். ஒரு போட்டோவில் பெயர் இல்லை, ஒரு வேளை கேஆரேஸ்ஸ் அண்ணாவா இருக்குமோ?னு உத்து உத்து பாத்தேன். :)


கொண்டை போட்டு பூ முடித்து ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஒரு மாமி, அம்பி உன் ஜாதகம் கிடைக்குமா?னு கேட்டார்கள். மேடையில் ஜுனியர் சகிதம் போட்டோவுக்கு போஸ் குடுத்து விட்டு நான் இறங்கிய பின் ஜாதகம் குடுக்க அந்த மாமியை தேடினேன். எஸ்கேப் ஆயிட்டாங்க போலிருக்கு. திராசா சார், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.

கேட்டரிங்க் கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்தின் பெயர் அம்பி கேட்டரர்ஸ் என்பது தற்செயலான ஒற்றுமையே.

33 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடப் பாவி அம்பி,
SKM கவரைக் கவர்ந்தாயோ?
KRS கவரைத் தவிர்ந்தாயோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பார்டர் மறையாதிருக்க உன்னை மறைத்த தங்கையின் கொற்றம், பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம் கொடி கட்டிப் பறக்க வாழ்த்துகிறேன்! :)

ambi said...

SKM ஒரு மாதம் முன்னரே அட்வான்ஸ் புக்கிங்க் பண்ணிட்டாங்க. :)

உங்க மெயிலை நான் கல்யாணத்துக்கு அப்புறமா தான் பார்த்தேன். :)

மெளலி (மதுரையம்பதி) said...

அம்பி, பதிவுல அப்படியே திருநெல்வேலி ஸ்பெஷல் சூப்பரா வந்திருக்கு :))

ஆமாம், அம்பி கேட்டரிங் சாப்பாடு நல்லாத்தான் இருந்தது.

கர்ர்ர்ர்ர்-புர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேட்டுத்தான் யார் கீதாம்மான்னு நானே புரிந்து கொண்டேன். :))

உ.பி.ச திருமண போட்டோ முன்பே பார்த்திருந்ததால் ஈசியாக தெரிந்தது :)

திவாண்ணா said...

//அவன் தம்பி அங்கதன் சகிதமாக//

யாருப்பா இது?

//என ஜுனியரை என் கையில் திணித்து விட்டது தற்செயலான விஷயம் என ஏமாந்து விட்டேன்//
அப்பாவியே!
அக்கா உசாராதா இருக்காங்க!

//கேட்டரிங்க் கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனத்தின் பெயர் அம்பி கேட்டரர்ஸ் என்பது தற்செயலான ஒற்றுமையே.//

எனக்குத்தெரியாம அம்பீஸ் கபே ஆரம்பிச்சாச்சுன்னு தெரியுது!

தி. ரா. ச.(T.R.C.) said...

கிப்ட் என்ன?னு தி.ராச. சார் பிரித்து பார்த்து பின்னூட்டம் இடுவார்.
ஏதோ கத்தி கபடால்லாம் இருந்தது அப்பவே நினைச்சேன் யாரோ ஒரு தொழில் நிபுணர் கல்யாணத்திற்கு வந்திருந்தார் என்று.

தி. ரா. ச.(T.R.C.) said...

பந்திக்கு போய் பஃபே முறையில் ஒரு பெங்காலி ஸ்வீட்(பெயர் என்ன?),

பந்திக்கு போயா? நீ வந்ததிலிருந்து கிளம்பும் வரை பந்தியில்தானே இருந்தே
அந்த ஸ்வீட்டு பேரா உனக்கும் தெரியாத ஸ்வீட்டா சரி இருந்தாலும் அது "ராஜ்போக்""

வல்லிசிம்ஹன் said...

வேணும்னே நான் ஊரில இல்லாத போது எல்லோரும் ஆழ்வார்பேட்டைக்க்கும் வந்துட்டு, எங்க வீட்டு வழியாகவும் போயிட்டு, எங்க வீடு எப்படி,சௌகரியமா இருக்கானு விசாரிக்காமல் கல்யாணத்தைப் பத்தி மட்டும் எழுதினது ,ஹ்ம்ம்ம்ம்:)

வல்லிசிம்ஹன் said...

கல்யாணம் ஆண்டவன் அஸ்ரமம்னு போட்டூ இருந்தது. அதனால் அங்க ஆழ்வார் படம் மாட்டாமல் அங்கதன் படம் மாட்டுவார்கள:)
ஆமாம் யாரு ஜூனியர்,யாரு அங்கதன் சொல்லலியே அம்பி.


தி.ர.ச சார் எனக்குக் கல்யாண பட்சணம் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

கல்யாணம் ஆண்டவன் அஸ்ரமம்னு போட்டூ இருந்தது. அதனால் அங்க ஆழ்வார் படம் மாட்டாமல் அங்கதன் படம் மாட்டுவார்கள:)
ஆமாம் யாரு ஜூனியர்,யாரு அங்கதன் சொல்லலியே அம்பி.


தி.ர.ச சார் எனக்குக் கல்யாண பட்சணம் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

படங்கள் ரொம்ப நல்லா அம்பீகரமாயிருந்ததுன்னும் இங்க சொல்லிக்க விரும்பறேன்:)

தி. ரா. ச.(T.R.C.) said...

வேணும்னே நான் ஊரில இல்லாத போது எல்லோரும் ஆழ்வார்பேட்டைக்க்கும் வந்துட்டு, எங்க வீட்டு வழியாகவும் போயிட்டு, எங்க வீடு எப்படி,சௌகரியமா இருக்கானு விசாரிக்காமல் கல்யாணத்தைப் பத்தி மட்டும் எழுதினது ,ஹ்ம்ம்ம்ம்

வேணும்னே நான் பொண்ணுக்கு கலயாணம்ன்னு சொன்ன அப்பறமும் திட்டமிட்டு ஊருக்குப் போயிட்டு அதுவும் எங்க வீட்டு வழியாவே ஏர்போர்ட் போயிட்டு கல்யாணம் எப்படி நடந்ததுகூட கேட்காமல் ஹ்ம்ம்ம்ம்ம். சரி எவ்வளவு நாள் ஆனாலும் இங்கேதானே வரணும் அப்ப பாத்துகிறேன்.

Geetha Sambasivam said...

//மொய்க்கு முந்து! பந்திக்கு பிந்து!(கீதா மேடம் நோட் தி பாயின்ட்!)//
அம்பி, நீங்க திராச சார் பெண்ணுக்கு நான் வாங்கிட்டு வந்த கிஃப்டைக் கொடுக்கச் சொல்லி என்னை நச்சரிச்சதை நான் சபையிலே சொல்ல வேண்டாம்னு பார்த்தேன், சொல்லும்படி வச்சுட்டீங்களே! :P:P:P:P
திராச சார், நோட் தி பாயிண்டு!! :P:P:P:
//என்ற கொள்கைப்படி வாங்கி வந்திருந்த கிப்ட்களுடன்,//

அம்பி, கத்தி, கபடா போன்ற சாமான்கள் தான் கொடுத்தாரா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Geetha Sambasivam said...

அப்புறம் அசோகாவைக் கேசரினு நினைச்சு அங்கேயே தங்கிட்டதைச் சொல்லவே இல்லையே அம்பி?? அதுவும் திராச சாரோட ஆஃபீஸ்காரங்களைக் கூட்டிட்டு வர சாக்கிலே லபக் லபக் னு அள்ளிக்கிட்டதை நான் கவனிச்சும் பெருந்தன்மையா உங்க கிட்டே கேட்கவே இல்லையே!

நான் அது கேசரி இல்லை, அசோகானு சொல்லியும், திரும்ப உ.பி.ச.வைத் தொந்தரவு பண்ணிக் கூப்பிட்டீங்களே, திரும்பவும் டிஃபன் சாப்பிடலாம்னு, அதை விட்டுட்டீங்களே, கணேசா, நீயாவாது சொல்லக் கூடாது?? :P:P:P:P

நான் ஜாடை காட்டியதால் உ.பி.ச. உங்களோட டிஃபனுக்கு வரலை, எங்களைப் பிரிக்க நினைச்சால் நடக்காது! :)))))))))))))

Geetha Sambasivam said...

//அவன் தம்பி அங்கதன் சகிதமாக//

நான் கேட்டப்போ சுக்ரீவன்னு சொன்ன நினைப்பு,

பாவம் கணேசன், முன்னாலேயே வந்து சமைச்சு வச்சு! குழந்தையை இந்தப் பாடா படுத்தறது? :P:P:P:P:P

Geetha Sambasivam said...

//ஆழ்வார்பேட்டைக்க்கும் வந்துட்டு, எங்க வீட்டு வழியாகவும் போயிட்டு, எங்க வீடு எப்படி,சௌகரியமா இருக்கானு விசாரிக்காமல் கல்யாணத்தைப் பத்தி மட்டும் எழுதினது ,ஹ்ம்ம்ம்ம்:)//

அட, வல்லி, உங்க வீடு அங்கே தான் இருக்குனு அது பத்திப் பேசினோமே?? நீங்க இல்லை, அதனால் வரமுடியலைனு எனக்கும் வருத்தமாவே இருந்தது. பார்க்கலாம், நீங்க இந்தியா வந்ததுமாவது வர முடியுதானு!

Porkodi (பொற்கொடி) said...

ஆஆஆ.. நான் வராம என் ஜாய் பண்ணிட்டீங்களே எல்லருமா!!! :((( என்னை மிஸ் பண்ணவே இல்லியா நீங்க யாருமே? இப்படி மறந்துட்டீங்களே இந்த தங்கையை!!!

தி.ரா.ச அங்கிள் மட்டும் தான் என்னை நினைவு வெச்சு ஃபோட்டோ எல்லாம் அனுப்பறார். அதனால நான் என்னிக்காவது பதிவு போட்டேன்னா அவருக்கு தான் புளியோதரை, கேசரி எல்லாமே. புரியுதா அம்பி?

ரொம்ப நல்ல பதிவு அம்பி, ஃபோட்டோ பாக்கும் போது நான் நினைச்ச நிறைய விஷயத்தை எழுதி இருக்கீங்க (அங்கிளும் மாப்பிள்ளை ரேஞ்சுக்கு வேட்டி அங்கவஸ்திரம் ;) )

கல்யாண பொண்ணு என் பேட்ச் மேட் தான், வாழ்த்த முடியாது, எல்லாம் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை ப்ரார்த்திப்பேன்.

ILA (a) இளா said...

//இடைப்பட்ட கமர்ஷியர் ப்ரேக்கில் நான் காலை டிபனுக்கு நழுவி விட்டேன். மெதுவான இட்லி, முறுகலான தோசை, நெய் மணக்கும் பொங்கல், தொட்டுக்க தேங்காய் மற்றும் தக்காளி சட்னி, பருப்பு சாம்பார் மற்றும் அசோகா அல்வா ( நான் அதை கேசரின்னு நினைச்சு கொசுறு எல்லாம் கேட்டு தொலைத்தேன்) என லைட்டா ஒரு டிபனை (இதுவாடா லைட்டு?) சாப்பிட்டு விட்டு பில்டர் காப்பியையும் சாப்பிட்டு விட்டு தெம்பாக வந்தமர்ந்தேன்.//
grrrrrrrrrrrrrrrrrr

Geetha Sambasivam said...

//அசோகா அல்வா ( நான் அதை கேசரின்னு நினைச்சு கொசுறு எல்லாம் கேட்டு தொலைத்தேன்) என லைட்டா ஒரு டிபனை (இதுவாடா லைட்டு?) சாப்பிட்டு விட்டு பில்டர் காப்பியையும் சாப்பிட்டு விட்டு தெம்பாக //

ஹிஹிஹிஹிஹிஹி, விவசாயி, அம்பிக்குக் கேசரிக் கலரிலே இருக்கிறதெல்லாம் கேசரிதான்னு நினைப்பு, கொசுறா கேட்டார் அங்கே?? பரிமாறுகிறவங்களுக்குத் திரும்பத் திரும்ப அசோகாவைப் புதுசாப் பண்ணிக் கை வலி கண்டுடுச்சுனா பார்த்துக்குங்க! பங்களூர் போறச்சே ரயிலுக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வச்சுக்கிட்டிருக்காரே?? அதை சொல்லலை இங்கே!

ambi said...

ஆமா ம-பதி அண்ணா, திருமண சாப்பாடு நல்லா இருந்தது.

@திவாண்ணா, என் உடன்பிறப்பை தான் சொன்னேன். இன்டஸ்ட்ரி போற போக்க பாத்தா அம்பீஸ் கபே தான் ஆரம்பிக்கனும் போல இருக்கு. :))

@TRC சார், அது தவிர மேலும் ரெண்டு பேக் இருந்ததே, அதை பிரிச்சு பாக்கலையா?

உங்க மாப்ளைக்கு உபயோகமா இருக்குமேன்னு ஒரு நல்லெண்ணம் தான். :))

ambi said...

@trc sir, அந்த ஸ்வீட் பேரு ராஜ்போக்கா? ஒரு வாய் தான் சாப்டேன், தங்க்ஸ் பிடுங்கிட்டாங்க.

@வல்லி மேடம், கீதா மேடம் கூட சொன்னாங்க இசபெல்லா ஆஸ்பிட்டல் எதிர்புறம்னு. அடுத்த தடவை வந்துடறேன்.

அங்கதன் என் தம்பி, ஜுனியர் நான் பெத்த லட்டு. :)

அது என்ன அம்பீகரமா? புதசெவி. :))

@geetha madam, பசியோட இருந்த வேதாளத்தை பேசிட்டு இருக்கலாம்!னு அமுக்கி புடிச்சு வெச்சு நீங்க போட்ட மொக்கையை எண்ணி எண்ணி சிரிப்பு சிரிப்பா வருது. :)

ambi said...

@kodi, வாம்மா மின்னல் கொடி, சார் போட்டோ அனுப்பிட்டாரா? வெரி குட்.

ஆமா! அவரு பட்டு வேஷ்டி என்ன, சரிகை அங்கவஸ்த்ரம் என்னனு ஒரே கலக்கல்ஸ் ஆஃப் ஆழ்வார்பேட்டை தான்.

நீ இருந்திருந்தா நல்லா கலாய்ச்சு இருப்ப அவரை.

@வாங்க இளா, இதெல்லாம் அங்க கிடைக்கலையா? :(

btw, முறுகலான வடை லிஸ்டுல விட்டு போச்சு. :p

Geetha Sambasivam said...

//btw, முறுகலான வடை லிஸ்டுல விட்டு போச்சு. :p//

அதானே, அம்பி கழுத்திலே தொங்கின மாலை அதுவா??? இப்போ இல்லை புரியுது?? :P

Porkodi (பொற்கொடி) said...

ப்ளாக்கருக்கு புண்ணியமா போச்சு, இல்லனா கீதா பாட்டி மாதிரி வயசானவங்களுக்கு இப்படி நல்லா பொழுது போகுமா? :) you rock geetha paati!

அம்பி, தங்ஸ் ஏன் ஒரு வாயோட ராஜ்போக்கை பிடுங்கிட்டாங்க? அது 10ஆவது ராஜ்போக் என்பதாலா இல்லை கீதா பாட்டி மாதிரி சக்கரை ஏதும் ஜாஸ்தியாகிடுத்தா? ;)

"நான் பெத்த லட்டு" - சீதா மன்னி, யாரொ எதுக்கோ க்ரெடிட் எடுத்துக்கறாங்க, கவனிங்க கொஞ்சம்.. அப்பாடா வந்த வேலை முடிஞ்சுது..

திவாண்ணா said...

சொர்ணவல்லி அக்கா, நல்லாவே வேலை பாக்கிறீங்க!
;-)))))))))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

@போர்கொடி திவா உனக்கும் தம்பியா? இந்த கதை நல்லாவே இருக்கு.இனிமே உன்னை நான் கூட சியாடல் அக்கான்னே கூப்பிடறேன். சரியா?ஆனா அம்பியோடே குழந்தைக்கும் தங்கை யார் சொல்லு?

திவாண்ணா said...

திராசார்,
என் உறவினர்கள், மனைவியை தவிர எல்லா பெண்களும் எனக்கு அக்காதான். (அவங்க அதுக்கு அடிக்க வராதவரை!)

ambi said...

@கொடி, அடிச்சு ஆடறன்னு நல்லா தெரியுது. :))

ஆமா திவாண்ணா, ஒரு காலத்துல கொடி கமண்டு போட வரா!ன்னு தெரிஞ்சாலே சும்மா கீதா பாட்டிக்கு அதிரும்.

//ஆனா அம்பியோடே குழந்தைக்கும் தங்கை யார் சொல்லு?
//

@trc sir, வேற யாரு கீதா பாட்டி தான். :p

Geetha Sambasivam said...

தங்கச்சிக்கா,என்ன போனால் போகட்டும்னு விட்டால் தைரியம் ஜாஸ்தியாயிடுச்சு போலிருக்கு! இருங்க ரங்ஸுக்கு மெயிலறேன். அப்புறம் இருக்கு! படிக்கச் சொல்லுவார். அப்புறம் நோ இணையம்! அது!!!!!!!!!!!!!!

Geetha Sambasivam said...

அம்பி, என்ன போர்க்கொடி வந்துட்டாங்கனு தைரியமோ?? ரொம்பவே ஆடறீங்க??? :P:P:P:P

Sowmya said...

hello Ambi..

unga profile la key board thattra velai" - nu parthathum, neraya audio post irukum nu nenachu vantha...neenga key board thattara velaiya pannitu irukeenga nu therinchathu.

By the by, thirunelveli ambi thaane neenga..!

திவாண்ணா said...

//
By the by, thirunelveli ambi thaane neenga..! //
இதென்னப்பா மைசூர் பாக் மாதிரி திருநெல்வேலி அம்பி! ஆமாங்க சௌம்யா அவர் திருநெல்வேலி கேசரிதான். அட கேசரி - சிங்கம்பா!

Sowmya said...

hello diva,

Neega than aambiku representative aa..

Ungalukku sontha oor chennai ooo !