Wednesday, August 26, 2009

போர்க்கொடி தூக்கியாச்சு!சும்மா விடுவோமா?

எனக்கு சில கேள்விகள் இருக்கு.. சின்ன பொண்ணு தானே அதான் எவ்ளோ யோசிச்சும் விடை தெரியலை.. உங்களுக்கு தெரியும்னா சொல்லுங்களேன் கொஞ்சம்?//

இன்னும் எத்தனை வயசுக்குச் சின்னப்பொண்ணுனு சொல்லிக்கிறதுனு எல்லாரும் துப்போ துப்புனு துப்பறாங்களே! :P


1. கந்தசாமி படம் நல்லாருக்கு / பிடிச்சுருக்குனு சொன்னவங்க யாராவது இருக்காங்களா உங்களுக்கு தெரிஞ்சு?

அதெல்லாம் நாங்க பார்க்க மாட்டோம்.

2. இது வரை ஒபாமா அவர் சொன்னதுல என்னவெல்லாம் செஞ்சு இருக்காரு?

அங்கே தானே இன்னும் இருக்கீங்க? இந்தியா வந்தாச்சா? ஒபாமாவையே கேட்டிருக்கலாமில்லை? :P

3.வயசாகியும் இளம் ஹீரோனு விஜயகாந்த்துக்கு நினைப்புனு சொல்லும் அழகிரி ஏன் தலைக்கு ஒரு முடி விடாம டை அடிச்சுருக்காரு?

ஹிஹிஹி, நான் வரலை இந்த ஆட்டைக்கு. அப்புறம் ஆட்டோ வருமே!

4. கீதா பாட்டிக்கு எவ்ளோ வயசு? (அவங்களை தவிர வேறு யாரேனும் சொல்லலாம்..)

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன தைரியம்? வலை உலகத்தின் ஈடு இணையற்ற தலைவியைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்க? என்ன ரொம்ப ஆட்டம் அதிகமாப் போயிட்டு இருக்கு போல?? :P :P:P

5. இந்தியாவில் ஸ்வைன் ஃப்ளூ எவ்ளோ தீவிரமா இருக்கு? இல்ல இது வெறும் மீடியா ஹைப்பா?

இதுக்குக் கொஞ்சம் சீரியஸாவே பதில். அங்கங்கே வர சீசனல் ஜுரத்தைக் கூட ஸ்வைன் ஃப்ளூனு சொல்லிக்கிறாங்க.

6. நம்ம கேயாழ்வார் அதாங்க பதிவர் கே.ஆர்.எஸ் எப்படி இத்தனை வலைப்பூக்களையும் வைத்து சமாளிக்கிறார்??? :O

ஹிஹிஹி, நாமளும் வச்சிருக்கோமில்லை?? நல்லவேளை உங்களுக்கு அந்த இடமெல்லாம் தெரியாது, பிழைச்சேன்! :))))))))

இந்த கேள்விகளில் எதற்கும் விட தெரியாமலோ தெரிந்தும் சொல்லாமல் இருந்தாலோ, உங்கள் தலை சுக்கு ஆயிரமாக வெடிக்கும்னு எல்லாம் ஒண்ணுமில்லை.. என்னவோ இதுக்காவது இந்த யூனியன் முழிக்குதானு டெஸ்ட் பண்ணறேன்..

யூனியன் எல்லாம் முழிச்சுட்டுத் தான் இருக்கு, இந்தப் போர்க்கொடி வந்து ஒண்ணும் எழுப்பவேண்டியதில்லை. எல்லாம் டிடி அக்கா பார்த்துக்கறாங்க!

31 comments:

இராம்/Raam said...

:))

Dinesh C said...

LOL :)

Porkodi (பொற்கொடி) said...

paatttttiiiii nenachen pazhutha anubasaliyana neenga thaan varuvinga nu.. idhai ellam enod apostlaye commenta potrukalam illa? vayasaga aga moolai slowa velai seiradhu ungluku ;-)

கீதா சாம்பசிவம் said...

@ராம்,
நன்னிங்கோ!

தினேஷ் சி, ஹிஹிஹி, போர்க்கொடி இப்போத் தான் மறுபடி போர்க்கொடி தூக்கி இருக்காங்க, இன்னும் இருக்கு, பாருங்க! :P:P :))))))

கீதா சாம்பசிவம் said...

@போர்க்கொடி, நீங்க தான் தூங்கிட்டு மெதுவா இரண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கீங்க, யூனியனைச் சொன்னா?? தலைவி பதவி வகிச்சுட்டுச் சும்மாவா இருப்பேன்?? உங்களுக்குத் தனிப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் கடிதம் அனுப்பப் போறேனே! :P:P:P:P

கீதா சாம்பசிவம் said...

பை தி பை, நம்ம பதிலுக்குத் தான் பின்னூட்டறாங்க பாருங்க, (மக்கள்ஸ், காப்பாத்துங்க என்னை! கை விட்டுடாதீங்க!)

G3 said...

//கந்தசாமி படம் நல்லாருக்கு / பிடிச்சுருக்குனு சொன்னவங்க யாராவது இருக்காங்களா உங்களுக்கு தெரிஞ்சு?//

நண்பர் ஒருவர் ட்விட்டர்ல போட்டிருந்த கமெண்ட்டு :)

//மக்கள்ஸ்... கந்தசாமி பாத்தாச். படம் நல்லா இருக்கு. இன்னும் நல்லா இருந்திருக்கும், வடிவேலுவ போடாம இருந்திருந்தா.//

:))))))))))))))))))

gils said...

:))) porks...emi matteru..imbutu kostin!!! etaatha thoorathula irukomngra thilla??..antha oorlalaam auto serivce ilayo :D :D

கீதா சாம்பசிவம் said...

G3 தாங்கீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

கீதா சாம்பசிவம் said...

ஹிஹிஹி, கில்ஸ்? ஜில்ஸ்?? ஏதோ ஒண்ணு, கொடியோட போஸ்டுனு நினைச்சுட்டுப் பின்னூட்டம் கொடுத்ததுக்கு நன்னிங்கோ!

@போர்க்கொடி, நல்லா வேணும். வேணுங்கட்டைக்கு வேணும்
வெங்கலங்கட்டைக்கு வேணும்! :P:P:P:P:P:P:P:P

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)))))))))

dubukudisciple said...

//கந்தசாமி படம் நல்லாருக்கு / பிடிச்சுருக்குனு சொன்னவங்க யாராவது இருக்காங்களா உங்களுக்கு தெரிஞ்சு?
//
கந்தசாமி படம் நல்ல இருக்குன்னு அதோட டைரக்டர் சொல்லி இருக்கார் மாமி...

dubukudisciple said...

//இது வரை ஒபாமா அவர் சொன்னதுல என்னவெல்லாம் செஞ்சு இருக்காரு?//

இது வரை எந்த அரசியல்வாதி அவர் சொன்னத செஞ்சி இருக்காரு லேசா விடுங்க.

dubukudisciple said...

வயசாகியும் இளம் ஹீரோனு விஜயகாந்த்துக்கு நினைப்புனு சொல்லும் அழகிரி ஏன் தலைக்கு ஒரு முடி விடாம டை அடிச்சுருக்காரு?//

இது எல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா...

dubukudisciple said...

கீதா பாட்டிக்கு எவ்ளோ வயசு? (அவங்களை தவிர வேறு யாரேனும் சொல்லலாம்..)//
இத கீதா பாட்டி எங்கக்கிட்டே கேக்கற அளவுக்கு அவங்களுக்கு மறதி வர வயசு...

dubukudisciple said...

இந்தியாவில் ஸ்வைன் ஃப்ளூ எவ்ளோ தீவிரமா இருக்கு? இல்ல இது வெறும் மீடியா ஹைப்பா?//

இது ஹெல்த் மினிஸ்டர் கிட்டே கேக்க வேண்டிய கேள்வி...

dubukudisciple said...

நம்ம கேயாழ்வார் அதாங்க பதிவர் கே.ஆர்.எஸ் எப்படி இத்தனை வலைப்பூக்களையும் வைத்து சமாளிக்கிறார்??? //

கண்ணபிரான் நிறைய பெண்களையே சமளிச்சவர் பதிவ சமளிக்கர்தா கஷ்டம்...

dubukudisciple said...

மாமி உங்க எல்லா கேள்விகளுக்கும் என்னால் முடிந்த வரை பதில் சொல்லியாச்சு...

கீதா சாம்பசிவம் said...

//இத கீதா பாட்டி எங்கக்கிட்டே கேக்கற அளவுக்கு அவங்களுக்கு மறதி வர வயசு...//

டிடி அக்கா, இப்படியா சேம்சைட் கோல் போடுவீங்க?? நறநறநறநற

போகுது, போர்க்கொடியோட பதிவிலே பின்னூட்டம் போடாமல் என்னோட பதிவிலே போட்டதுக்காக உங்களைப் பெருந்தன்மையோட மன்னிச்சு விட்டுடறேன். :))))))))

கீதா சாம்பசிவம் said...

மை பிரண்டை, நன்னிங்கோ!!! :D

Porkodi (பொற்கொடி) said...

@Raam, Dinesh C: ennanga, verumna sirichutu pona eppudi?

@gils: berikka naatula pechu sudhandhiram undule.. enna vena pesuven :P

@akkathangachi: enna neengalum oru madhriya sirichutu poringa?? :-/

@DD: yakka... paatti ungalaye akkangranga adha gavnikama maami sami nu solitu irukinga.. haiyo haiyo..

@Geetha paats: aiyo paatiii, ungluku marandhu pocha? naan thaan nirandhara thalaivali vaarisu epovo agitene? inime neenga verum dummy thaan. ozhungu nadavadikai naan thaan edukanum unga mela, tom ku vazhthu adhu idhu nu union a misuse panirukinga!

appuram naan kelvi kettu 10 minsla neenga reply post potta idhuku thaan comment panuvanga ellarum.. ana adhuku artham ungluku comment podradha illa.. kelvi ketta thane badhile? so enaku thaan indha maruvadhai..! neenga first pal settai potutu vanga ponga.. pokkai vayoda grrrr nu solli solli edavadhu agida pogudhu :P

ambi said...

@கொடி, கும்மி இன்னிக்கு இங்கயா? ரைட்டு நடக்கட்டும். :)

மத்த கேள்விக்கு எல்லாம் பதில் ஒரு பொருட்டு இல்லை.

கீதா மேடத்தின் வயசுக்கு மட்டும் அவங்களை நேர்ல பாத்த ஒரே சாட்சியான நான் இங்க ஆஜர் ஆகிக்கறேன். ஏன்னா வரலாறு ரொம்ப முக்யம். :)))

1)இருவது வருஷத்துக்கு முன்னாடி குஜராத்துல இருந்தேன்னு பதிவு போட்டாங்க.

2)முப்பது வருஷத்துக்கு முன்னாடி ராஜஸ்தான் போனேன்னும் பதிவு போட்டாங்க.

3)உப்பு சத்யாகிரகம், சிப்பாய் கலகம் நடந்த போது நேர்ல பாத்ததை தான் இங்க எழுதறேன்னு சொன்னங்க.

கூட்டி கழிச்சு பாரு கொடி, கணக்கு சரியா வரும். :)))

ஒரு வேளை அந்த நிகழ்வுகள் நடக்கும் போது நான் பொறக்கவே இல்லைன்னு அவங்க மறுத்தா, அப்ப எல்லா பதிவுகளும் இணையத்துல இருந்து ஜி3 பண்ணி தான் போடறாஙக்ன்னு நாம முடிவு செய்ய வேண்டி இருக்கும். :)))

கீதா சாம்பசிவம் said...

@போர்க்கொடி,
Geetha paats: aiyo paatiii, ungluku marandhu pocha? naan thaan nirandhara thalaivali vaarisu epovo agitene?//

போர்க்கொடி, அது ஏதோ சும்மாச் சும்மா நீங்க சின்னப் பொண்ணுனு சொல்லிக்கிறதாலே, அழப் போறீங்களேனு லாலிபாப் மாதிரி கொடுத்து வச்சிருக்காங்க, எனக்கு ரகசிய செய்தி வந்தாச்சே! :P:P:P


//appuram naan kelvi kettu 10 minsla neenga reply post potta idhuku thaan comment panuvanga ellarum.. ana adhuku artham ungluku comment podradha illa.. //

கு.வீ.மீ.ம.ஒ. அப்படிங்கறீங்க, ஓகே போனாப் போகுது! :)))))))))))))

கீதா சாம்பசிவம் said...

//ஒரு வேளை அந்த நிகழ்வுகள் நடக்கும் போது நான் பொறக்கவே இல்லைன்னு அவங்க மறுத்தா, அப்ப எல்லா பதிவுகளும் இணையத்துல இருந்து ஜி3 பண்ணி தான் போடறாஙக்ன்னு நாம முடிவு செய்ய வேண்டி இருக்கும். :)))//

என்ன அம்பி, தங்கச்சிக்கா வந்துட்டாங்கனு ரொம்பத் துள்ளல் ஜாஸ்தியா இருக்கு போல! பார்த்து! :P:P:P

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

:)
அது எப்படி கீதாம்மா அழகிரி கூடவும் சண்டை போட முடியுது, அம்பி கூடவும் சண்டை போட முடியுது, பொற்கொடி கூடவும் சண்டை போட முடியது?
வாட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் யுவர் எனர்ஜி? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//dubukudisciple said...
நம்ம கேயாழ்வார் அதாங்க பதிவர் கே.ஆர்.எஸ் எப்படி இத்தனை வலைப்பூக்களையும் வைத்து சமாளிக்கிறார்??? //

//கண்ணபிரான் நிறைய பெண்களையே சமளிச்சவர் பதிவ சமளிக்கர்தா கஷ்டம்...//

அடப் பாவிங்களா!
விட்டா அந்தப் பொண்ணுங்களுக்கு எல்லாம் நான் தான் தலையில வலைப் பூ வச்சி விட்டேன்-ன்னு கூட கதை கட்டுவீங்க போல இருக்கே! :)

யக்கா, நீங்களுமா எதிர்க்கட்சி? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//3)உப்பு சத்யாகிரகம், சிப்பாய் கலகம் நடந்த போது நேர்ல பாத்ததை தான் இங்க எழுதறேன்னு சொன்னங்க//

அட,
அது உப்பு சத்தியாவோட கிரகம்-ங்க! நம்ம உப்பு மண்டி சத்தியாவோட வீடு! அதைத் தான் கீதாம்மா இப்படி டகால்ட்டி பண்ணாங்க! நீங்க இன்னியும் அத நம்பிக்கிட்டு இருக்கீய! நீங்க நெம்ப நல்லவரு அம்பி! :)

கீதா சாம்பசிவம் said...

@கேஆரெஸ்,
வாட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் யுவர் எனர்ஜி? :)//

அதெல்லாம் உங்களை மாதிரிக் கிழங்கட்டைங்களுக்கு வராது! என்னை மாதிரிச் சின்னப்பொண்ணுங்களுக்கு மட்டுமே வரும்! :P


//அட,
அது உப்பு சத்தியாவோட கிரகம்-ங்க! நம்ம உப்பு மண்டி சத்தியாவோட வீடு! அதைத் தான் கீதாம்மா இப்படி டகால்ட்டி பண்ணாங்க! நீங்க இன்னியும் அத நம்பிக்கிட்டு இருக்கீய! நீங்க நெம்ப நல்லவரு அம்பி! :)//

அட கெரகமே, இது கூடப் புரியலையா?? சத்தியாவோட கெரகம் அது! கிருஹம் (இல்லம் இல்லை!) :P

கீதா சாம்பசிவம் said...

நான் தனி ஒருத்தியா உங்க இத்தனை பேரைச் சமாளிக்கிறேன்னா சும்மாவாஆஆஆஆஆ???????????????

SUMAZLA/சுமஜ்லா said...

யப்பா, உங்க லிஸ்ட் விட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் பெரிசா இருக்கே!