Friday, August 31, 2007

பாருங்க .. பாருங்க..

நம்ம டிடி அக்கா ரொம்ப களைச்சு போயி வீட்டுக்கு
போனாங்க. கஷ்டப் பட்டு ஒரு கப் டீய போட்டு குடிச்சுட்டு
கொஞ்ச நேரம் அப்படியே சோஃபால கண்ணசந்தாங்க.
அப்ப கனவுல அவங்களும் அவங்க ஃப்ரெண்டும்
பேசிக்கறாங்க.
சுமதி: யக்கா இந்த சனிக் கிழமை நம்ம ஜி3 க்கு
பர்த்டே வாம். தெரியுமா?
டிடி: ஆமாம் சுமதி. அது தான் நானும் யோசிச்சுட்டு
இருக்கேன். என்ன பண்ணலாம்னு.
சுமதி: யக்கா அத வுடுங்க, நாம பண்றது ஒரு பக்கம்
இருக்கட்டும், நம்ம யூனியன் நண்பர்கள் லாம் எப்படி
வாழ்த்தப் போறாங்க னு நினைச்சா ஒரே தமாஷா இருக்கு.
டிடி: இதுல என்ன தாமாஷு சுமதி?
சுமதி: கொஞ்சம் கற்பனை பண்ணலாமா?
நம்ம அம்பிக்கு கேசரியும் புளியோதரையும் தான் பிடிக்கும்.
அதனால அவரு இப்படி தான் வாழ்த்துவாரு. பாருங்க...
டிடி: அட..ஹா ஹா ஹா சரி தான்.
சுமதி: யக்கா எப்படி நம்ம கற்பனை...
இப்ப நம்ம அருணை எடுத்துக்கோங்க.
அவருக்கு பிடிச்சது எண்ணை கத்திரிக்காயும்
ரசமும் தான். So அவரு இப்படி தான்....

டிடி: சுமதி சூப்ப்பர் போ....
அடுத்தது யாரு? பரணியா?
சுமதி: ஆமாம், அவருக்கு எப்பவும் ஜி3 எல்லாத்தயும்
சாப்டுட்டு பில்ல வேற அவருகிட்ட குடுத்துடறா னு
ஒரே வருத்தம். ஆக அவரு இப்படி தான்...
டிடி: ஹா ஹா ஹா ஹா ...இங்கயுமே அவருக்கு
ஒன்னும் இல்லயா?அடப் பாவமே.....நல்ல கூத்து தான் போ...



சுமதி: யக்கா எங்க போயிட்டீங்க, மீதி இருக்கரவங்களை
எல்லாம் பாக்க வேனாமா?
டிடி: பின்ன ம்ம்ம்ம் சொல்லு சொல்லு.. அடுத்தது யாரு?

சுமதி: இப்போ வரப் போறவரு நம்ம கனவு நாயகன்
பேரே ட்ரீம்ஸ் ஆம்..எப்படி அதுவும் அவருக்கு இந்த
பாவனா, அதான் நடிகை பாவனா தான், வந்து வாழ்த்து
சொல்லனுமாம். என்ன ஆசை பாருங்க....

டிடி: ஓஒஹோ அபப்டியா? என்ன வந்தாங்களா?

சுமதி:வரவழைச்சுட்டாரே.. ம்ம்ம்ம் பெரிய்ய ஆளுதான்.




சுமதி: யக்க உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
டிடி: என்ன தெரியாதே.. சொல்லு
சுமதி:இந்த இஞ்சினியர் னு ஒரு டீச்சர், அதான் இந்த மலாய்
கத்து குடுக்கறேன்னு நம்மளையெல்லாம் வறுத்து
எடுப்பாங்களே, அவங்களுக்கு அல்வா குடுக்கனும் னு
ரொம்ம்ம்ப நாளா ஆசையாம். நேரம் பாத்து குடுத்துட்டாங்க.
ஹ ஹா ஹா.....



டிடி: ஆஹா... சுமதி உன் கற்பனை எங்கேயோ போயிடுச்சு..
ம்ம்ம்ம்... மீதி ஆளுங்களையும் வம்புக்கு இழுத்துடு..

சுமதி:என்னக்கா இப்படி சொல்லி புட்டீங்க... என்ன போயி...
டிடி: சரி சரி எல்லாம் சும்மாதான். அடுத்தது சொல்லு..

சுமதி: யக்க..இப்போ பாருங்க நம்ம நட்டாம சும்மா எப்படி
வாழ்த்தறார்னு.
டிடி: அட அட அட....இது தான் டாப் போ..

அடுத்தது யாரு?

டிடி: ஹேய் சுமதி, எல்லாம் சரி, நம்ம வலையுலக TR
விட்டுட்டயே....

சுமதி: அது எப்படி, யார விட்டாலும் அவன விடுவேனா,
மொக்க போட்டே கொல்ரவனாச்சே. இத பாருங்க...


டிடி: பாவம் சுமதி. நீ அவன இப்படி பழி வாங்கியிருக்க கூடாது.

சுமதி: யக்கா, என்னாச்சு உங்களுக்கு, எல்லாம் சும்மா ஒரு
தமாஷு தானே.....லூசுல வுடுங்க....

இப்ப பாருங்க நம்ம கவி வேதா எவ்வளவு அழகா பூக்களோட
வாழ்த்தியிருக்காங்க னு.....


டிடி: இது நல்லாயிருக்கு...

சுமதி: யக்கா இப்ப நீங்க..சும்ம கலக்கலா ஒரு கேக் அப்பரம்
என்ன அழகா ஒரு வாழ்த்து சும்மா சூப்பரா...பாருங்க..

டிடி: அடிபாவி... கடைசியில என் தலையிலயே கை
வச்சிட்டியா?உன்ன என்ன பண்றேன் பாரு.


டிடி: பரவாயில்லயே...எங்க நீ என்ன கவுத்துடுவியோன்னு
நினைச்சேன்.அது...அந்த பயம் இருக்கனும்...ம்ம்ம்ம்ம்

சுமதி: யக்கா என்ன போயி தப்பா நினைச்சுட்டீங்களே,
நீங்க யாரு, யூனியன் தலவி ஆச்சே..சும்மாவா..

சரி சரி, யக்கா நாம யூனியன் சார்புல ஒரு கேக் வாங்கி
குடுத்துடலாமா?

டிடி: ஆமாம், அது தான் சரி...




கனவு கலைகிறது. நம்ம டிடி நினைத்து நினைத்து சிரிக்கிறார்.

டிஸ்கி: மக்களே இது சும்மா ஒரு விளையாட்டுக்கு தான். யாரையுமே புண் படுத்தும் நோக்கத்தில செய்யல. ரசிச்சிட்டு எண்ஜாய் பண்ணுங்க.

compiled &composed by: dd & sumathi.

Wednesday, August 29, 2007

SMS செஞ்சா ஆட்டோ வரும் பாருங்க!

something new from govt
http://www.easyauto .in

What are the benefits to Passengers ?
• Courteous and clean drivers
• Tamper proof digital Meters
• No refusal
• No overcharging
• Police verification of papers
• LPG for fuel
• Latest good condition vehicles
• Soft drinks and water in vehicles
• Complaint reporting channel
• Feedback cards with drivers
• Door to door service
• Exclusive Easy Auto stands

How does Easy Auto Work?
Passengers have to register themselves using Passenger Registration Kits (PRK), to avail door-to-door service at a cost of Rs.75 /-. Any one in the family can avail Easy Auto using the same registration. That is, using a single PRK you can register up to ten phone numbers, which will be used as identifiers by the computers.

Registered passengers can use Internet, Interactive Voice Response System (IVRS) or Short Message System (SMS) to hail an Easy Auto. Others can simply hail one, at any of our Easy Auto Stands or on kerb side.

For hailing Easy Auto using SMS, you will have send in your location code to 9844-11-22-33. You will get a receipt confirmation message along with request code. If this message does reach in 5 minutes after your SMS, you may have to try again. Please remember any network congestion can affect smooth flow of SMS. After the confirmation SMS, you will get another in a few minutes along with Easy Auto number followed the auto driver's mobile number. To complete the procedure a parallel SMS will be sent to the auto driver. Please ensure to call the Easy Auto driver within 5 minutes or else he will be assigned to another passenger.

For hailing Easy Auto using IVRS, you will have dial 9844-11-22-33 and follow the instructions told to you. To complete the procedure a parallel SMS will be sent to the auto driver. Please ensure to call the Easy Auto driver within 5 minutes or else he will be assigned to another passenger.

Who can use Easy Auto?
Easy Auto can be used by anyone. A registered commuter gets door-to-door service. For registration, the user will buy a kit from any of the Spice outlets in the city at a cost of Rs.75.00. This is a one-time fee to be paid by the commuter.

Wednesday, August 22, 2007

கவிதாயினிக்கு பிறந்த நாள்

மொக்கையே போட்டு பதிவு எண்ணீக்கையை கூட்டும் நம்ம யூனியனில்(உள்குத்து தான்! ஒத்துக்கறேன்) அவப்போது சமூக சிந்தனையுடனும், தேசியம், உலா வரும் ஒளி கதிர், கவிதைகள்( தனி கடை வேற - எவ்ளோ ஈ அடிச்சாலும் தொடர்ந்து நடதறாங்க) திருப்பாவை பக்தி(பழம்) என போட்டு தாக்கும் நமது பிமுகவின் ஒரிஜினல் முதல்வராம், "வாழ்வளித்த தெய்வம்" வேதா பிராட்டியாரின் பிறந்த நாளுக்காக இந்த கேக் நமது யூனியனால் வழங்க்படுகிறது.

Thursday, August 16, 2007

அம்பியிடம் பாடம் கேட்ட "கைப்ஸ்"

"பெண்"களூரின் கோரமங்களாவின் ஒரு முக்கியமான உணவு விடுதி. மாலை நேரம். ஒரே கூட்டமாக மக்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் அவசரம். கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கிறது. அப்போது அங்கே திடும் பிரவேசமாக நுழைத்தது யாருன்னு நினைக்கிறீங்க? சாட்சாத் நம்ம "ஆப்பு அம்பி"யே தான். ரொம்ப அவசரமாயும், வேகமாயும் வந்ததோடு இல்லாமல் கொஞ்சம் பயந்தும் போயிருப்பார் போல் தெரியுதே! கூர்ந்து பார்த்தால் சட்டை, பான்டில் அங்கங்கே கசங்கலாயும், கொஞ்சம் கிழிசலும் தெரியுது. மாற்றக் கூட நேரம் இல்லையா என்ன? முகம் வேறே கொஞ்சம் வீங்கித் தலையில் இது என்ன? கொழுக்கட்டை? சீச்சீ, கொழுக்கட்டை இல்லை, யாரோ அடிச்சிருக்காங்க போலிருக்கு, ஹிஹிஹி, மனுஷன் அதான் ஒரே பீதியில் வந்து உட்கார்ந்திருக்கார். அப்போது அங்கே வந்த சர்வர் அம்பி கிட்டே என்ன வேணும்னு கேட்க அம்பி கொஞ்சம் இருங்க, ஒரு நண்பருக்குக் காத்திட்டு இருக்கேன், வரட்டும்னு சொல்றார். கூடவே தானே தனியாகப் புலம்பல் வேறே:

"என்ன தப்புப் பண்ணினேன்? ஒண்ணும் புரியலையே? வழக்கம் போல் கணேசன் வந்து குக்கர் வச்சுட்டுக் காய் நறுக்கினான். நான் புளி கரைத்து விட்டு, சம்பாரா, வத்தக் குழம்பானு ரொம்பப் பணிவாத் தானே கேட்டேன். ஏதாவது தப்புப் பண்ணிட்டேனோ?" மறுபடி பயத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கிறார். அப்போது கிட்டத் தட்ட அம்பியோட கோலத்திலேயே ஒருத்தர் வந்து பக்கத்து மேஜையில் உட்காருகிறார். அவரைப் பார்த்தது அம்பிக்குச் சிரிப்பு வருகிறது. யாரோ தெரியலை, நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருப்பான் போலிருக்குனு மனசிலே நினைத்துக் கொண்டு அந்த ஆளைப் பார்த்து, "என்ன சார்? அடி பலம் போலே இருக்கு?" என்று தனக்கு ஒண்ணுமே நடக்காதது போல் தெனாவட்டாகக்கேட்க அந்த ஆள் (ஒரு வேளை புதுசோ?) "சார், சார், எப்படி சார் கண்டு பிடிச்சீங்க? நீங்க ரொம்ப புத்திசாலியா இருப்பீங்க போலிருக்கே?"னு கேட்கிறார் அம்பிக்குக் கொஞ்சம் "துணுக்"குறுகிறது. ஆனாலும் சமாளிப்பு வேந்தன் இல்லையா? புதுக் கல்யாணமா என்று கேட்க அதற்கு அவர் , "அட, ஆமாம் சார்!" என்று சொல்கிறார். அப்போது பார்த்து அங்கே வந்த டிடி அக்கா அம்பிகிட்டே, "என்ன அம்பி, ஏதோ சத்தம் எல்லாம் கேட்டது வீட்டிலே? என்ன விஷயம்? மாமூலா?" என்று கேட்கவே அம்பி திருடனுக்குத் தேள் கொட்டியது போல் விழிக்கிறார். மனதுக்குள் திட்டிக் கொண்டே வெளியில்,

"யக்கா, டிடி யக்கா, இப்போ என்னைப் பார்க்கக் "கைப்ஸ்" வர நேரம். இப்போ பார்த்து என்னைக் காட்டிக் குடுக்காதீங்க." எனக் கெஞ்சவே இப்போது பக்கத்து மேஜை ஆளுக்குத் தூக்கிப் போடுகிறது. "என்ன, நீங்க தான் அம்பியா? மாமூல் வாங்கிட்டு வந்தீங்களா? அடக் கடவுளே, உங்க கிட்டே பாடம் கேட்கத் தானே நான் வந்து பார்க்கறேன்னு சொல்லி இருந்தேன். உங்க கதியே இப்படியா? இப்போ யார் கிட்டே பாடம் கேட்கறது?" என்று கலங்க ஹோட்டல் வாசலில் சலசலப்பு. என்னனு பார்த்தால் அம்பியோட தங்கமணியும், கைப்ஸோட தங்கமணியும் ஆளுக்கு ஒரு பூரிக்கட்டையோட அவங்க அவங்க ரங்கமணியைத் தேடிட்டு வராங்க. திரும்பிப் பார்த்தால் இவங்க ரெண்டு பேரும் எஸ்கேஏஏஏப்!!!!!!!!!

Suicide Attempt

Suicide Attempt...







Tuesday, August 14, 2007

பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?

பிறந்த ராசிக்கு ராசியான ஸ்தலம் எது?


நாம் எத்தனையோ கோவில்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறோம். என்றாலும் கூட நமது ராசிக்கு ஏற்ற ஸ்தலம் எது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப வழிபட்டு வருவோமானால் நம் வாழ்வு இன்னும் சிறப்பாக அமையும்.

எந்த ராசிக்கு எந்த ஸ்தலம் உகந்ததாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது என்று தானே தயங்குகிறீர்கள்! கவலை வேண்டாம் அதற்குத் தானே நாங்கள் இருக்கிறோம்.

இதோ ஒவ்வொரு ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய ஸ்தலங்களின் விபரம் பின்வருமாறு:

ராசி - ஸ்தலம்

மேஷம் - ராமேஸ்வரம் ராமநாதர்
ரிஷபம் - மேல் திருப்பதி வெஙகடேச பெருமாள்
மிதுனம் - திருவெண்காட்டில் புதன் சன்னதி
கடகம் - சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாம சுந்தரி சன்னதி எதிரே உள்ள நவலிங்கம்
சிம்மம் - நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் உள்ள மங்களாம்பிகை
கன்னி - திருக்கழுக்குன்றம் மலை மேல் வேதகிரீஸ்வரர்
துலாம் - திருத்தணி முருகன்
விருச்சிகம் - காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை பவுர்ணமியில் வழிபடுதல்
தனுசு - ராமநாதபுரம் அருகில் தேவிபட்டணத்தில் கடலில் உள்ள நவக்கிரகம்(நவபாஷாணம்)
மகரம் - காசியில் உள்ள விஸ்வநாதர்
கும்பம் - கும்பகோணத்தில் கும்பேஸ்வரர்
மீனம் - மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள சொக்கநாதர் மற்றும் மீனாட்சி.


courtesy: Tamil yahoo.

Tuesday, August 7, 2007

INTERESTING WEDDING INVITATION...

You all must have seen a lots of strange wedding cards... I guess a couple of interesting too, but this one is the most unusual one..... Scroll down to have a look..... (let the card load... )




Thursday, August 2, 2007

சொல்லியே அடிப்பேன்!

எல்லாம் சரி, இதெல்லாம் அடிக்கடி போறவங்களுக்கு, என்னை மாதிரியான கல்லுக் குடல்காரங்க என்ன செய்யறதுன்னு இதோ டிடி அக்கா(ஹிஹிஹி, எனக்கும் நீங்க அக்காதான்), கேட்டு மெயிலியிருக்காங்க. அதுக்கு என்ன வழி தெரியுமா? ரொம்பவே சிம்பிள்தான். எல்லாம் வீட்டிலே இருக்கிற பொருள் தான். தண்ணீரைக் குடிக்கிறதுக்குக் கொதிக்க வைக்கிறீங்களோ இல்லையோ தெரியலை. இப்போ என்ன செய்யுங்க, 4 பங்கு தண்ணீரை ஒரு பங்கா வர வரைக்கும் கொதிக்க விடுங்க. அதை நல்லாக் குளிரவைக்கணும். அதனாலே காலம்பரவே நல்லாக் கொதிக்க வச்சு ஆறவச்சு வச்சுக்குங்க. அந்தத் தண்ணீரை மிச்சம் இருக்கும் சாதத்தில் ஊத்தி மூடி வச்சுடவும். கூடவே சின்ன வெங்காயமும் தோல் உரித்து நறுக்கிப் போட்டு விடவும். ஒரு இரவு பூராவும் வச்சிருக்கும் இந்த சாதத்தில் உள்ளத் தெளிந்த நீராகாரத்தை எடுத்துக் கொண்டுக் கல் உப்பு, நினைவிருக்கட்டும், கல் உப்புத் தான் போடணும், போட்டு 2 டம்ளர் எடுத்துக் குடிக்கணும் வெறும் வயிற்றிலே. காபி, டீ எல்லாம் அப்புறமா ஒரு மணி நேரமாவது கழித்துத் தான். முக்கியமா அம்பி நோட் திஸ் பாயின்ட், காபி காலை எழுந்ததுமே குடிக்கக் கூடாது. எப்பேர்ப்பட்ட மலச்சிக்கல்னாலும் பறந்து போயிடும். அந்த வெங்காயத்தை என்ன செய்யறதுங்கறவங்களுக்கு, ஹிஹிஹி, ஆப்பீஸிலெ பக்கத்தில் உட்காரப் போகிறவங்களுக்கு ஆட்சேபணை இல்லைனால் நல்லா மென்று தின்னுடலாம், சாதத்தோட சேர்த்து. ப்ரெக் ஃபாஸ்டாத் தான்! :)))))))))