Tuesday, May 13, 2008

"டாம்" மின் திருமண முதலாண்டு நிறைவுக்கு "ஜெரி"யின் வாழ்த்து!

கண்டதுண்டா? கேட்டதுண்டா இவ்வுலகிலே? இம்மாதிரியான ஒரு அதிசயத்தை? இப்போது இதோ முதல் முதலாய்ப் பாருங்கள். டாம் விரித்த வலையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு வரும் ஜெரி டாமை வாழ்த்துகின்றது, அதன் முதலாண்டு திருமண நாளுக்காக.
11-ம் தேதி தான் திருமணநாள்னு நினைச்சு, ஜெரி தொலைபேசியில் வாழ்த்தலாம்னு கூப்பிட்டப்போ டாம் இதோ பார்க்கிறீங்களே, இதே மாதிரிக் குறட்டை விட்டுட்டு இருந்தது. கூப்பிட்டால் உலகமே புரியலை. என்ன, யாரு, எங்கே இருந்துனு ஒரே நடுக்கம். தங்கமணியோன்னு ஒரு பவ்யம் குரலிலே, தங்க மணி இல்லைனு தெரிஞ்சதும் சந்தேகம். வாழ்த்தினப்போ கூட என்ன இது ஜெரியானு ஒரே குழப்பம். ஏதோ உளவு பார்க்கவோனு நினைப்பு. எங்கே தம்பி சமைச்சுப் போட்டு நாம சாப்பிடறோம்கிற உண்மையை ஜெரி போய் வலை உலகுக்கு அறிவிச்சுடுமோனு கவலை.

இதை எல்லாம் போக்கி விட்டு டாம் ஜெரியைத் துரத்தினதை எல்லாம் ஜெரி பெருந்தன்மையாக மன்னித்துவிட்டு, அதன் முதலாம் ஆண்டு திருமணநாளுக்காக வாழ்த்துத் தெரிவிக்கின்றது.
இதோ பாருங்க, வாழ்த்துத் தெரிவிக்கும் ஜெரியை டாம் எப்படிக் கோபத்துடன் முறைக்கின்றது? சண்டை போடுது? இருந்தாலும் பரவாயில்லை, அனைத்து வலை உலக நண்பர்களும் வந்து வாழ்த்துத் தெரிவியுங்கள்.


நாளை முதலாம் ஆண்டு மணநாள் கொண்டாடப் போகும் "அம்பி"க்குத் திருமண நாள் வாழ்த்துகள்.

27 comments:

dubukudisciple said...

ambiku vaazhthukal...

gils said...

ada..adhukula one year odipoacha...wow..belated wishes vambi..

மதுரையம்பதி said...

அம்பி அண்ட் திருமதி அம்பிக்கு திருமண தின நல்வாழ்த்துக்கள்...

மதுரையம்பதி said...

அம்பி, பாருங்க என்னதான் பாட்டின்னெல்லாம் நீங்க கலாய்ச்சாலும் கீதாம்மா எப்பவும் உங்க நினைவுடன் இருக்காங்கன்னு இப்பவாவது புரியுதா? :)

G3 said...

Vaazhthukkal ambi :)

கீதா சாம்பசிவம் said...

அட, அம்பிக்குன்னதும் எல்லாரும் போட்டி போட்டுட்டு வாழ்த்தறதிலே குறைச்சல் இல்லை, இதிலே என்னைச் சொல்லணுமா? :P

திவா said...

அம்பி வாழ்த்துக்கள்!

திவா said...

//என்னதான் பாட்டின்னெல்லாம் நீங்க கலாய்ச்சாலும் கீதாம்மா எப்பவும் உங்க நினைவுடன் இருக்காங்கன்னு இப்பவாவது புரியுதா? :)//

ஹிரண்யன் ஹரியையே நினைச்ச மாதிரியா?

மதுரையம்பதி said...

//ஹிரண்யன் ஹரியையே நினைச்ச மாதிரியா?//

கீதாம்மா, நோட் த பாயிண்ட்...உங்க தம்பி, உங்களை ஹிரண்யன் அப்படிங்கறார்...நான் இல்லை....

திவாண்ணா, நீங்க கீதாம்மாவை அப்படி சொன்னதுக்கு நான் சரி/தப்பு சொல்லலை, உங்க அனுபவத்தை நீங்க சொல்றீங்க...ஆனா அம்பியை ஹரின்னு சொல்லப்படாது...அது சரியே இல்லை... :)

Sumathi. said...

ஹாய் அம்பி,

அட என்ன அதுகுள்ள ஒரு வருஷமா? நம்பவே முடியலை.

அம்பிக்கும் அவரது மறு பாதிக்கும்,அதாங்க தங்கமணிக்கும் என்னோட நல் வாழ்த்துக்கள்.

ஆரம்பத்துல டாமும் ஜெர்ரியும் சிரிச்சுகிட்டே தான் இருக்கும், ஆனா திடீருன்னு ரெண்டும் ஆரம்பிக்கும் பாருங்க, ஹா ஹா ஹா...

ambi said...

வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்னி. :))

ambi said...

@all, ஒரு சின்ன பிழை திருத்தம்:

இந்த பதிவில் டாம் என்று இருக்கும் இடத்தில் எல்லாம் ஜெர்ரி என மாத்தி போட்டு படித்து கொள்ளவும். :)))

ambi said...

எல்லோரும் தவறாது கீழே உள்ள ஐபில் பற்றிய பதிவை படிக்கவும். :))

ambi said...

//திவாண்ணா, நீங்க கீதாம்மாவை அப்படி சொன்னதுக்கு நான் சரி/தப்பு சொல்லலை, உங்க அனுபவத்தை நீங்க சொல்றீங்க...ஆனா அம்பியை ஹரின்னு சொல்லப்படாது...அது சரியே இல்லை... //

@m-pathi, நீங்க எங்க கட்சினு மறுபடி நிரூபித்ததுக்கு மிக்க நன்னி அண்ணா. :p

சரி தான் நான் ஹரி இல்லை, ப்ரகலாதன். ஹிஹி.

(கேஆரெஸ் வந்தா உதைக்க போறாரு என்னை)

கீதா சாம்பசிவம் said...

@Tom alias ambi, sunday phone chatting was recorded by me. mp3 le pottu publish kodukkavaa???????

கீதா சாம்பசிவம் said...

I mean with music and all the background sounds effect? how is that? கணேசன் சாட்சி சொல்லுவான், எனக்கு அம்பி பிரகலாதனா? இல்லை, ஹிரண்யனாட்சனான்னு! :P

கீதா சாம்பசிவம் said...

//ஹிரண்யன் ஹரியையே நினைச்ச மாதிரியா?//
@திவா, இது என்ன உ.கு.?????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்

//திவாண்ணா, நீங்க கீதாம்மாவை அப்படி சொன்னதுக்கு நான் சரி/தப்பு சொல்லலை, உங்க அனுபவத்தை நீங்க சொல்றீங்க...ஆனா அம்பியை ஹரின்னு சொல்லப்படாது...அது சரியே இல்லை... :)//
@மெளலி, அம்பியோட சேர்ந்து கெட்டுப் போயிட்டீங்க நீங்களும்! :P சரி, சரி, நடிச்சது போதும், அம்பி&கோ பேசிண்டதை எல்லாம் நாளைக்கு சாட்டில் சொல்லிடுங்க, இல்லைனா தனிமெயில் கொடுங்க, ஓகே????

மாட்டி விட்டுட்டேனே??? :P

திவா said...

அட! மாதிரின்னு சொன்னா அத உவமையாதானே எடுத்துக்கனும்?

முதல்ல யார் டாம் யார் ஜெர்ரின்னு அவங்க முடிவு பண்ணட்டும். அதுவரை யாரும் என்னெ ஏன் இப்படி சொன்னே ன்னு சண்டைக்கு வர முடியாதே!
:-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திருமதி & திருவாளர் அம்பிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

தம்பி சமைச்சுப் போட்டு நாம சாப்பிடறோம்கிற உண்மையைத் தமிழ் கூறும் பதிவுலகுக்கு உணர்த்திய ஜெரியம்மாவிற்கு கோடானு கோடி வாழ்த்துக்கள்! :-)

வரலாற்றில் இனி நீங்கள் ஜெரியம்மா என்றே அழைக்கப்படுவீர்களாக!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சரி தான் நான் ஹரி இல்லை, ப்ரகலாதன். ஹிஹி.
(கேஆரெஸ் வந்தா உதைக்க போறாரு என்னை)//

அடக் கொடுமையே! பிரகலாதனா? அப்படின்னா தூண்ல இருந்து வந்து மொதல்ல உன்னையத் தான் ஒதைக்கணும்! சரி தானே ஜெரியம்மா? :-)

கீதா சாம்பசிவம் said...

//வரலாற்றில் இனி நீங்கள் ஜெரியம்மா என்றே அழைக்கப்படுவீர்களாக!//

ஹிஹிஹி, அம்பி தான் "டாம்"னு ஒத்துக்கிட்டதுக்கு நன்னி, டாங்கீஸ், போனாப் போகுதுனு நீங்க சிவனைப் பத்தியும் எழுதறவர்னு ஒத்துக்கலாமானு யோசிக்கிறேன். :P

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//போனாப் போகுதுனு நீங்க சிவனைப் பத்தியும் எழுதறவர்னு ஒத்துக்கலாமானு யோசிக்கிறேன். :P
//

ஹா ஹா ஹா
நான் இன்னும் விசாலமா சிவபெருமானைப் பற்றி எழுதத் துவங்கினேன்னு வைங்க...
ஜெரியம்மா திருவரங்கமே கதின்னு ஓடிருவாங்க! :-)))

அப்பறம் எங்க பிரகலாதப் பிள்ளையார் டாம் தான் வந்து ஒங்களுக்குத் தீட்சை கொடுப்பாரு! :-))

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;)

கீதா சாம்பசிவம் said...

//அப்பறம் எங்க பிரகலாதப் பிள்ளையார் டாம் தான் வந்து ஒங்களுக்குத் தீட்சை கொடுப்பாரு! :-))//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., டாம் மூலமாவா????
எனக்குத் தீட்சையே வேண்டாம்., :P

ambi said...

//நான் இன்னும் விசாலமா சிவபெருமானைப் பற்றி எழுதத் துவங்கினேன்னு வைங்க...
//

@KRS அண்ணே! அப்படி நீங்க சிவபெருமானைப் பற்றி எழுத துவங்கினா நான் டாம்னு ஒத்துக்கறேன். :p

அத்தைக்கு மீசை முளைச்ச பிறகு தான் சித்தப்பா. :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//@KRS அண்ணே! அப்படி நீங்க சிவபெருமானைப் பற்றி எழுத துவங்கினா நான் டாம்னு ஒத்துக்கறேன். :p//

ஏற்கனவே எழுதனதுக்கே இந்நேரம் நீ பாதி டாம் அம்பி!

//அத்தைக்கு மீசை முளைச்ச பிறகு தான் சித்தப்பா. :))//

அத்தைக்கு எப்பவோ மீசை முளைச்சி சித்தப்பு ஆகியாச்சு! ஊரே ஓட்டு போட்டாச்சு! மக்கள் தீர்ப்பே மகேஸ்வரன் தீர்ப்பு! புரிஞ்சுதா டாம்?

ஒழுங்கா ஜெரியம்மாவுக்கு தீட்சை கொடுங்க! :-)

மதுரையம்பதி said...

நானில்லை, கடைசி பின்னூடங்களை நான் பார்க்கவேயில்லை...