Tuesday, May 20, 2008

நினைவாற்றல் !

இன்னைய தினமலர்ல ஒரு செய்தி வந்திருக்கு:

// எத்தனையோ நாள் முன்பு நடந்ததை உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு வாரம்...ஒரு மாதம்...? 27 ஆண்டாக, ஒவ்வொரு நாளும் நடந்த விஷயங்களை நினைவுகூறுகிறார் ஒரு அதிசய பெண். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண் ஜில் பிரைஸ்; வயது 42. "கடந்த மாதம் 14 ம் தேதி எங்கு போனீர்கள்? 28 ம் தேதி என்ன சாப்பிட்டீர்கள்?' என்பது முதல், பல ஆண்டுக்கு முன், சந்தித்த ஒருவரை பற்றி கூட சொல்கிறார்.


கடந்த 27 ஆண்டில் அவர் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் குறித்தும் சொல்கிறார் இவர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அசந்து விட்டனர். இவர் குறித்து நிபுணர்கள் கூறியதாவது: ஒருவரால், குறிப்பிட்ட காலம் வரை தான் நினைவாற்றல் மூலம் எந்த விஷயத்தையும் சொல்ல முடியும். ஆனால், ஜில்லுக்கு அளவுக்கு மீறி நினைவாற்றல் இருக்கிறது. இதற்கு காரணம், அவர் மூளையில் உள்ள ஒரு வித அசாத்தியமான சக்தி தான். இது உண்மையில் நல்லதல்ல; ஒரு வகை மனநல வியாதி. இந்த வியாதிக்கு ," ஹைபெர் தைமெஸ்டி' என்றுபெயர்.


கடந்த 1980ம் ஆண்டில் இந்த பெண்ணுக்கு வயது 14. அப்போது தான் இந்த "போபியா' ஆரம்பித்துள்ளது. நல்ல விஷயங்கள் அறிந்து கொள்வதுடன், கெட்ட நினைவுகள் வரும் போது மன அழுத்தம் ஏற்படும். இதனால், இந்த பெண்ணுக்கு தனி சிகிச்சை தேவை.இந்த அளவு அசாத்திய நினைவாற்றல் இருக்கும் நிலையில் திடீரென இது எதிரிடையாகக்கூட மாறலாம்; நினைவாற்றல் மங்கி விடலாம். இவ்வாறு நிபுணர்கள் கூறினர். பள்ளி ஒன்றின் நிர்வாகியாக பணியாற்றும் ஜில் கூறுகையில்,"எனக்கு பழைய நினைவுகள் வருவதால் எந்த பிரச்னையும் இல்லை.


ஆனால், சில மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகள் பற்றி நினைவு வரும் போது பெரிதும் மனஉளைச்சல் ஏற்படுகிறது. இதனால் மனஅழுத்தம் வந்து பெரும் அவதிப்படுகிறேன். இந்த அசாத்திய நினைவாற்றல் எனக்கு நல்லதை விட, கெட்ட தை தான் தருகிறது' என்றார்.//

இத படிச்சப்ப ஒரு ஜோக் நினைவு வந்தது. கொஞ்சம் சடில்.
------------------

அமெரிக்கால ஒரு ஆசாமி. அவர் வேலை ஊர் ஊரா போய் வியாபாரம் செய்யறது. ஒரு ஊருக்கு போயிருந்தப்ப அங்க இருக்கிற ஒரு செவ்விந்தியரை பத்தி ரொம்ப உயர்வா பேசிக்கிட்டாங்க. அவருக்கு அபாரமான ஞாபக சக்தியாம். பல வருஷங்கள் முன்னால நடந்தத எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு இருக்காராம். இப்படி கேள்வி பட்டதும் நம்ம வியாபாரிக்கு ஒரு உந்துதல். செவ்விந்தியரை பாக்கப்போனா ர். அவர் இருக்கிற குன்று ஏறிப்போய் பாத்து பேசினார். செவ்விந்தியருக்கு நிஜமாவே அபார சக்திதான். அங்கிருந்தே ஊரை காட்டி இந்த வீடு இந்த வருஷம் கட்டினது இந்த இடத்தில இன்ன மரம் இருந்தது ன்னு எல்லாம் சொல்ல முடிஞ்சது அவராலே. பல கேள்விகள் கேட்டு டக்கு டக்குன்னு பதில் வரதை பாத்து ஆச்சரியப்பட்டார். செவ்விந்தியர பாராட்டிட்டு "சரி, போய் வரேன்" னு சொல்லிட்டு கிளம்பிட்டார். கடைசியா ஒரு கேள்வி கேக்க தோணிச்சு. "அஞ்சு வருஷம் முன்னே இதே மாசம், இதே தேதி, காலை உணவு என்ன சாப்டீங்க" ன்னு கேட்டார்.

செவ்விந்தியர் சொன்னார், "eggs!"

படு ஆச்சரியத்தோட திரும்பிட்டார் நம்ம ஆளு.


நாலு வருஷம் போச்சு. திருப்பியும் அந்த ஊருக்கு போற வாய்ப்பு வந்தது. செவ்விந்தியர எப்படியும் திரும்ப ஒரு முறை பாத்து ஹலோ சொல்லணும்ன்னு நினச்சுக்கொண்டே போனார். அவர பாத்ததும் செவ்விந்திய மொழில ஹலோ சொல்லாம்னு ,

"how!"

அப்படின்னார். செவ்விந்தியர் நிமிர்ந்து யார்ரான்னு பாத்தார் வியாபாரின்னு தெரிஞ்சது. தயங்காம பதில் சொன்னார்.

"scrambled of course!"

4 comments:

கீதா சாம்பசிவம் said...

//"scrambled of course!"//

தோசை மாதிரியாவா???:P

திவா said...

அதே அதே! அம்பீஸ் கபே ஸ்பெஷல்!

ambi said...

ஹஹா!


//அம்பீஸ் கபே ஸ்பெஷல்!
//

இல்ல, சாம்பு மாமா தோசை ஸ்பெஷல். :p

Madhavan Srinivasagopalan said...

உங்கள் இந்தப் பதிவினை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். படித்துவிட்டு, உங்க கருத்தினை சொல்லவும். நன்றி. -மாதவன்