Thursday, May 15, 2008

திருமண வரவேற்பில் தலைவி????? எஸ்கே எம்மின் சந்தேகம்!நேத்திக்கு வேதாவின் திருமண வரவேற்பு வைபவத்துக்குப் போவதென முடிவெடுத்து போஸ்டும் போட்டுட்டுக் கிளம்பியும் போயாச்சு. நேற்றுக் காலையில் திராச அவர்கள் தானும் வருவதாய்ச் சொன்னார். ஏற்கெனவே எஸ்கேஎம் தானும் வருவதாய்ச் சொல்லி இருந்தார். ஜி3யும் வரப்போவதாய் ஒற்றர்படை தகவல்கள். புலி வந்தால் வருவேன்னு உறுமிட்டுக் கடைசியில் வரலை. போய்ப் பதுங்கி விட்டது. எஸ்கேஎம் என்னைப் பார்த்தது இல்லை. நான் எஸ்கேஎம்மைப் புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். எனினும் அடையாளம் காணவேண்டுமே என, எங்க செல்லை எடுத்துட்டு வரும்படியும், சத்திரத்துக்குள் வந்ததும், தான்கூப்பிடுவதாயும் எஸ்கே எம் சொல்லி இருந்தார். சரினு சொல்லிட்டு, நான் நேத்துக் கிளம்பும்போது வழக்கம்போல் செல்லை வீட்டிலேயே விட்டுட்டு, வில்லிவாக்கம் போக ரெயில் ப்ளாட்பார்முக்குள் நுழைந்ததும், அடடா, செல்லை மறந்துட்டேனே? என்று சொல்ல, ம.பா. உன் வழக்கமே இதான், என் கிட்டே சொல்றதுக்கென்ன என்று கேட்க, குருக்ஷேத்திரம் ஆரம்பிக்க இருவரும், ரெயிலில் ஏறினோம்.

வில்லிவாக்கம் வந்ததும், ஏற்கெனவே வேதா சொல்லி இருந்தபடியால் நான் நேரே போக, வழி கேட்காமல் போறயேன்னு அவர் சொல்ல, மீண்டும் ஒரு கைகலப்பு ஏற்பட்டுப் பின்னர் , நான் சொன்ன வழியிலேயே போய், அங்கே கேட்டுக் கொண்டு சரியாகவே சத்திரம் போய்ச் சேர்ந்தோம். போய் வேதாவைப் பார்த்துவிட்டுப் பேசி, வாழ்த்துச் சொல்லி, அம்பி சரியா இன்னிக்கு சென்னை வரார்ங்கிற அதிமுக்கியமான தகவலையும் கொடுத்துவிட்டு, டிடி அக்கா, சுமதி, அம்பி, கோபிநாத், புலி, மெளலி,ரசிகன் ஸ்ரீதர் (மெளலி, மொய் அனுப்பறேன் கூரியரிலேனு சொல்லிட்டு அனுப்பவே இல்லை, வேதா, கவனிச்சுக்கவும்) எல்லாருடைய வாழ்த்தையும் சுமக்க முடியாமல் சுமந்து போய்ச் சொல்லிவிட்டுப் பின்னர் வந்து உட்கார்ந்தேன். இதுக்கே அலுப்பு. போறாததுக்குப் ப.பு. வேறே. சூடு தாங்கலை. வேர்த்து, விறு விறுத்துப் போய் என்னைப் பார்த்தால் நான் தான் கல்யாணத்துக்கு ஓடி ஆடி வேலை செய்தமாதிரி களைத்துப் போய் உட்கார்ந்தேன். என் பரிதாப நிலையைப் பார்த்துவிட்டு என்னோட ம.பா. கீழே போய் உன் நண்பர்கள் வராங்களானு பார்க்கலாம்னு கீழே அழைத்துப் போனார். அங்கே ஒரு கும்பல் அலை மோதிக் கொண்டிருக்க தெரியாத்தனமாய் அந்தக் கும்பலில் அகப்பட்ட நாங்கள் நீந்திக் கொண்டு போய்ச் சேர்ந்த இடம் டைனிங் ஹால். உடனேயே கைபிடித்து உட்கார்த்தி வைக்கப் பட்டு, சாப்பாடு சாப்பிட வைக்கப் பட்டோம்.

என்ன சாப்பாடா இருந்தாலும் இந்த வெயிலில் என்னத்தைச் சாப்பிடறது? சும்மாதான் நிறையப் பேர் உட்கார்ந்து எழுந்தாங்க. சாப்பாடு கொஞ்சம் வீணாகிவிடுமோ என்ற எண்ணத்தில் எதுவும் போட்டுக் கொள்ளாமல், ரசம், மோர் சாப்பிட்டுவிட்டு எழுந்தோம். ஃப்ரூட் சாலடில் அவர் மூழ்க, நான் தெரியாத் தனமாய் வெற்றிலையைப் போட்டு மெல்ல ஆரம்பித்தால் அது லேசில் உள்ளே போகவில்லை. சரி, மாடியில் போய் உட்கார்ந்து மெல்ல, மெல்ல உள்ளே தள்ளலாம்னு போனால் அதுக்குள்ளே ஒரு பெண்மணி செல்லும் காதுமாய், சத்திரத்தில் அலைமோதுவது தெரிந்தது. உடனேயே எஸ்கே எம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிட என்னைக் கண்ட அவருக்குக் கொஞ்சம் ஆச்சரியம். என் பெயர் எப்படித் தெரியும்னு கேட்க, அட, என்ன இது? இப்படி அறியாமையில் மூழ்கி இருக்காங்களே, அம்பிக்கு அக்கான்னது சரியாத் தான் இருக்குனு நினைச்சுட்டு, நான் தான், "நான்" என்று சொன்னேனோ இல்லையோ, ஏமாற்றம் முகத்தில் படர, அவநம்பிக்கையுடன், நிஜமா, நீங்க தான் கீதாவா?னு கேட்க, என்னத்தைச் சொல்றது போங்க,அவங்க எதிர்பார்த்த மாதிரி நான் இல்லைனா, நான் தலைவி இல்லைனு ஆயிடுமா என்ன? அம்பியும் இப்படித் தான் ஏமாந்தார். அதே போல் அவங்க அக்காவும் ஏமாந்தாங்க. என்ன செய்ய முடியும்?

இருந்தாலும் அவங்க முழுச் சமாதானம் ஆகவில்லை, பேச்சே கிளம்பவில்லை, சரினு வேதாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போனேன். வேதா பலமுறை என்னைப் பார்த்திருக்கிறதாலே, அவங்க கொஞ்சமாவது நிச்சயம் பண்ணிக்கலாமே, நான், நான் தான்னு. மேடையிலே போய் வேதா கிட்டேயும், அவங்க கணவர் கிட்டேயும் பேசிட்டு வந்ததும், வேறு வழியில்லாமல் ஒத்துக்க வேண்டியதாப் போச்சு அவங்களுக்கு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நிதானத்துக்கு வந்தாங்க. அதுக்குள்ளே, நம் வலை உலகில் "காப்பி, பேஸ்ட்" என்றால் ஜி3, ஜி3 என்றால் "காப்பி,பேஸ்ட்", என்ற அளவுக்கு அதைப் பிரபலப்படுத்தி இன்றைய நாளில் எதிரணியினர் கூட ஜி3 பண்ணணும்னு சொல்ற அளவுக்கு மாத்திய நம் பெருமைக்குரிய ஜி3 தன் சகோதரியுடன் வந்தார். பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டிருந்தபோதே திரு திராச அவர்களும் அவசர, அவசரமாய் வந்தார். அதே அவசரத்தோடு வேதாவைப் போய்ப் பார்த்துவிட்டு, அவங்க சாப்பிடப் போக, நாங்க சொல்லிட்டுக் கிளம்பி வந்தோம். அதுக்குள்ளே மணி 8-30 ஆகி இருந்தது. இன்று திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்கும்.

வேதாவுக்கும், அவள் கணவர் சத்யநாராயணனுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். புதுமணத்தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்க அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

13 comments:

மதுரையம்பதி said...

வேதாவுக்கும், அவரது ரங்கமணிக்கும் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் வாழ்க!!!

அப்பாடியோ, ஒரு மாதிரி கீதாம்மா வேதா கல்யாணத்துக்குப் போன கதை முடிந்தது.. :)

Sumathi. said...

ஹாய் தலைவி,

/அவங்க எதிர்பார்த்த மாதிரி நான் இல்லைனா, நான் தலைவி இல்லைனு ஆயிடுமா என்ன?//

அதானே நல்லா கேளுங்க. ஆக எங்க சார்பா எங்க வாழ்த்துக்களோடு வேதா(ள்)வை வாழ்த்திட்டும் நல்லா மூக்க பிடிக்க எங்களுக்கும் சேர்த்து சாப்டுட்டும் வந்ததுக்கு நன்றி.

Sumathi. said...

தலைவி,

//அவங்க எதிர்பார்த்த மாதிரி நான் இல்லைனா, நான் தலைவி இல்லைனு ஆயிடுமா என்ன? அம்பியும் இப்படித் தான் ஏமாந்தார். அதே போல் அவங்க அக்காவும் ஏமாந்தாங்க..//

இதிலேர்ந்து என்ன தெரியுது? நீங்க இன்னும் சரியா பிரபலம் ஆகலைனு.
ஆகயால மொதல்ல அதுக்கு என்ன பண்ணனுமோ அத பண்ணுங்க.

(ஹி ஹி ஹி ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல ஐடியா..)

திவா said...

//மீண்டும் ஒரு கைகலப்பு //
ஒரே கலகலப்பா இருக்கே!

//அங்கே ஒரு கும்பல் அலை மோதிக் கொண்டிருக்க தெரியாத்தனமாய் அந்தக் கும்பலில் அகப்பட்ட நாங்கள் நீந்திக் கொண்டு போய்ச் சேர்ந்த இடம் டைனிங் ஹால்.//

டைனிங் ஹாலை தேடிப்போனோம்ன்னு சொன்னா குறஞ்சா போயிடுவீங்க?
ஆமா பால் பாயாசம் கிடச்சுதா?

//புதுமணத்தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்க அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.//

அதென்னா? ஆங்.. ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

கீதா சாம்பசிவம் said...

மூக்க பிடிக்க எங்களுக்கும் சேர்த்து சாப்டுட்டும் வந்ததுக்கு நன்றி.


சரியாப் போச்சு போங்க, இப்படியா கண்ணு வைக்கிறது? க்ர்ர்ர்ர்., என்னடாப்பா நேத்திலேருந்து வயித்தை வலிக்கிறதேனு பார்த்தேன்.

@மெளலி, அடைப்புக் குறிக்குள்ளே, மொய், மொய்னு ஒண்ணு கொடுப்பாங்களே, கல்யாணத்திலே, அதைப் பத்தி எழுதி இருந்தேன், அது கண்ணிலே படலை உங்களுக்கு, வேண்டாதது தான் பட்டதா?? :P

@திவா, ரிப்பீட்ட்டேஏஏஏஏஏஏ கத்துக்கிறதுக்காக ப்ளாக் யூனியனுக்குள் நுழைஞ்சதுக்கு வாழ்த்துகள். :P

மத்தவங்க யாரையும் காணோம்/ அதுக்குள்ளே வீக் எண்ட் வந்துடுச்சா????

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

////அவங்க எதிர்பார்த்த மாதிரி நான் இல்லைனா, நான் தலைவி இல்லைனு ஆயிடுமா என்ன? அம்பியும் இப்படித் தான் ஏமாந்தார். அதே போல் அவங்க அக்காவும் ஏமாந்தாங்க..//

அவங்க ஏமாந்தாங்களா இல்லை அவங்க போட்ட திட்டத்துல நீங்க ஏமாந்தீங்களான்னு இன்னும் சரியாத் தெரியலை! எதுக்கும் அம்பி வர வரைக்கும் மக்கள்ஸ் ஆல் வெயிட்டீஸ்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வேதா-சத்யா தம்பதிகளுக்கு மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்!

மெளலி அண்ணா
கீதாம்மா ஏதோ நொய் நொய்-னு கேட்குறாங்களே! என்னான்னு கொஞ்சம் கண்டுக்கறது!

//சாப்பாடு கொஞ்சம் வீணாகிவிடுமோ என்ற எண்ணத்தில் எதுவும் போட்டுக் கொள்ளாமல், ரசம், மோர் சாப்பிட்டுவிட்டு எழுந்தோம்//

ஃபோட்டோவில் வேற மாதிரி தெரிஞ்சுதே! :-)

கீதா சாம்பசிவம் said...

அட, அதுக்குள்ளே எனக்கு வராமல் உங்களுக்கு எப்படி போட்டோ வரும்?

ambi said...

கல்யாணத்தை கவர் பண்ண சொன்னா உங்க புராணமா இருக்கே! மாப்ளை என்ன சூட்?
வேதா என்ன புடவை?
எனது அருமை அக்கா எஸ் கே எம் என்ன புடவை?
ஜி 3 அக்கா கஷ்டப்பட்டு புடவை கடித்து வந்த்தங்காலா இல்லையா? கூட்டம் வந்தது?
ஒரு தகவலும் இல்லை, :p

எல்லாம் சரி, கொண்டு போன மொய்யை மறந்து விட்டுக்கே கொண்டு வந்துடீங்களாமே? உண்மையா? :p

ambi said...

உங்க அடையாளம் எல்லாம் சொல்லி குறிப்பா அந்த டிரேட் மார்க் சிரிப்பை சொல்லி, எஸ் கே எம் அக்காவுக்கு ஏற்கனவே எச்சரிக்கை மெயில் குடுத்துட்டேனே. :)))

கீதா சாம்பசிவம் said...

//எல்லாம் சரி, கொண்டு போன மொய்யை மறந்து விட்டுக்கே கொண்டு வந்துடீங்களாமே? உண்மையா? :p//

@அம்பி, இது என்ன டாம் என்ற அம்பியோட கல்யாணமா, மொய்யே கொடுக்காமல் இருக்கிறதுக்கு? அதெல்லாம் போனதுமே வேதா கையிலே கொடுத்தாச்சு,


பெண்,மாப்பிள்ளை உடை அலங்காரம் பத்திச் சொல்லலை, இந்த வெயிலிலே என்ன கஷ்டமா இருக்கும்னு தோணியதாலே, கொஞ்சம் பாவமாவே இருந்தது. சொந்தக் காரங்க வீட்டுக் கல்யாணம்னா நானும் காட்டன் புடவையிலேயே போயிருப்பேன். வேஷம் போட்டுண்டு!!! வெயில் கொடுமை தாங்கலை! :(((((

கீதா சாம்பசிவம் said...

//டைனிங் ஹாலை தேடிப்போனோம்ன்னு சொன்னா குறஞ்சா போயிடுவீங்க?
ஆமா பால் பாயாசம் கிடச்சுதா?//

அந்த சோகத்தை ஏன் கேட்கறீங்க??? பால் பாயாசமே இல்லை, மறுநாள் முகூர்த்தத்துக்கோ ஒரு வேளை, முன்னாலே தெரியாமல் போச்சு! :P

கீதா சாம்பசிவம் said...

//ஜி 3 அக்கா கஷ்டப்பட்டு புடவை கடித்து வந்த்தங்காலா இல்லையா? கூட்டம் வந்தது?
ஒரு தகவலும் இல்லை, :p//
அம்பி, இவ்வளவு மோசமா ஆயிடுச்சா கண்ணு?? ஜி3 பத்தி ஒரு புராணமே பாடி இருக்கேன், அவங்க அப்போ தான் சந்தோஷப் படுவாங்கனு! க்ர்ர்ர்ர்ர்

ஜி3 கஷ்டப்பட்டு புடவை கட்டினாங்களோ இல்லையோ, எனக்குக் கஷ்டமா இருந்தது, அந்த மாதிரி டிசைனர் சாரி கட்டறவங்களை எல்லாம் பார்த்து! :((((

அப்புறம் அலைமாதிரி அடிச்ச கூட்டத்திலே நீஞ்சிப் போய்ச் சாப்பிட்டோம்னு சொல்லி இருக்கேனே, கவனிக்கலை, படிச்சுட்டுப்பின்னூட்டம் கொடுக்கக் கத்துக்குங்க அம்பி, அதான், கணேசன் சமைச்சுப் போட்டு, ப்ளாக் போஸ்டுக்கு எழுதியும் கொடுத்துடறான், இன்னும் என்ன???ஓஓஓ, சென்னையிலே இருக்கீங்க இல்லை?
படிச்சுச் சொல்ல கணேசனும் இல்லை, பாவம், அதான்! :P