Friday, May 16, 2008

வணக்கம்!

தும்பிக்கையே நம்பிக்கைன்னு பிளிரி எல்லாருக்கும் ஒரு வணக்கம் வெச்சுக்கிறான் இந்த வாசுதேவன்.

இவன் கடலூர் மாவாட்டாத்து தலைநகரான கடலூர்லே மாவாட்டுகிறான். வேளா வேளைக்கு புஸ் புஸ் னு காத்தடிச்சுட்டு நானும் வேலை செஞ்சேன்னு பேர் பண்ணிட்டு போகிற புஸ்புஸாலஜிஸ்ட். இவன் வேலையை மதிக்கிற சில ஏமாந்தவங்க தர காசுல வண்டி ஏதோ ஓடுது. இப்படி அப்படி இருக்கணும் என்கிற கற்பனை எல்லாம் பெருசா வளத்துக்காததால நிம்மதியாவே வண்டி ஓடுது.

ஒரு பையர். கல்யாணமாயிடுத்து. மத்த வேதம் கத்துக்காத பசங்களுக்கு கத்துக் கெடுக்க- சீ- கொடுக்கப்போறேன்னு பிடிவாதமா இருக்கார். நெரூர் போகணுமாம். எப்ப எப்படின்னு இன்னும் முடிவாகலை.

ஒரு மனைவி. அட ஏன் சிரிக்கிறீங்க? தானா பிறக்கிற குழந்தைங்கள இவங்க இழுத்து வெளியே போட்டு நல்ல பேர் வாங்கிட்டாங்க.

அவ்ளோதான் என்னப்பத்தி நான் சொல்லிக்க தகிரியம் இருக்கிறது.


மத்தப்படி இந்த ப்ளாக் சமாசாரம் எல்லாம் போன டிசம்பர்லேந்து. தமிழ்ல தட்டச்ச ஓரளவு தெரியும். இநத மாபெரும் ஸ்கில் வீணாப்போகக் கூடாதே என்கிற ஆதங்கத்திலே ப்ளாக் போட்டுடலாம்ன்னு முடிவு பண்ணேன். நல்ல சேதின்னு ஆரம்பிச்சு ஈ ஓட்டிகிட்டு இருக்கேன். கண்ணுல வி. எண்ணை போட்டுகிட்டு தேடினாலும் பல நாட்கள் ஒரு நல்ல சேதியும் கண்ணுல படரதில்லை. இத தமிழ் மக்கள் கண்ணுக்கு கொண்டு போகனுமேன்னு கவலை பட்டுகிட்டு இந்த தமிழ் மண பட்டைய எப்படி கொண்டு வரதுன்னு கேக்க கீதா அக்காவுக்கு ஒரு மயில் தட்டிவிட்டேன்.

அவங்க "என்னப்போய் பெரிய கணினி நிபுணின்னு நினச்சு கேக்கிறயே!” அப்படின்னு பதில் அனுப்பிட்டு உடனயே "அதான் பட்டை இருக்கே! தெரிலியா? பட்டை போட்டு இருக்கியா?" ன்னு உறுமினாங்க. என்டாதுன்னு வலைல போய் பாத்தா இருந்தது. ஒரே ஒரு தலைப்ப பாக்கிறப்ப மட்டுமே அது தெரியும்னு யார் கண்டாங்க? நன்னி ன்னு சொன்னா அது என் காப்பிரைட் ன்னு சண்டைக்கு வந்தாங்க.


யார்ரா இந்தப்பயல் வாலாட்டறானோன்னு உளவுப்படைய ஏவிவிட்டு விவரம் சேகரிச்சுட்டாங்க. ஏதோ அவங்க போதாத காலம் இவன் நல்ல கிழவன்னு தோணிப்போச்சு. பிரெண்டு ஆயிட்டாங்க பாவம்.


அம்பிக்கு வாழ்த்து சொல்லி போஸ்ட் போட்டப்ப லிங்க் அனுப்பி இருந்தாங்க. "அட! நமக்கு இருக்கிற பதிவுல மொக்கை போட வாய்ப்பு இல்லாம கஷ்டப்படறோமே. அதுக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் போல இருக்கேன்!" ன்னு இது என்ன கான்செப்ட் ன்னு கேக்கப்போய் 'ஆப்டான்டா ஒரு ஆசாமி" ன்னு சேர்ரீங்களா சொல்லுங்க ன்னாங்க. உங்க போதாத காலம் சரின்னுட்டேன்.


கீ. அக்கா சொன்னபடி டிடி அக்காவுக்கு ஒரு மயில் அனுப்பினேன்.


டிடி அக்கா,
ப்ளாக் யூனியன்லே என்னையும் சேத்துக்கிறீங்களா?
நான் நல்ல பையன்.
அப்படின்னு சிலர் ஒத்துக்கிறாங்க. ;-)
விதி (யாரை விட்டது?) முறைகள் இருந்தா சொல்லுங்க!
திவா



டிடி அக்கா அப்ளிகேஷன் பாரம் எல்லாம் அனுப்பினாங்க. விதிகளுக்கு ஒத்துக்கறியா இல்லையான்னு பயமுறுத்த விதி யாரை விட்டதுன்னு சரின்னேன். அப்புறமா பாத்தா இந்த பயலை சேத்துக்கலாமா வேணாமான்னு ஏலம் போட்டுகிட்டு இருக்காங்க. அட தெரிஞ்சா நாம நாலு ஓட்டு போட்டு இருக்கலாமேன்னு பாத்தா ஆதரவா நாலு பேர் கை தூக்கி இருந்தாங்க. சரி வேணாம்னு விட்டுட்டேன். அந்த நாலு பேருக்கு நன்ஸ். இன்னிக்கு டிடி அக்கா இன்விட் அனுப்ப இதோ மொக்கை எழுதிகிட்டு இருக்கேன்.

அப்பப்ப பாப்போம். ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டேன், கவலைப்படாதீங்க!

:-))

18 comments:

Geetha Sambasivam said...

// மாவாட்டாத்து //

அட, அட, வந்ததுமே சரியாப் பிடிச்சுக்கிட்டார் பாருங்க, இவரும், மாவாட்ட ஸ்பெஷலிஸ்ட் போலிருக்கு! அம்பி, கவலையே பட வேண்டாம், துணை இருக்கு, கை கொடுக்க.

Geetha Sambasivam said...

திங்கள் கிழமை போட்டிருக்கக் கூடாதோ? எல்லாரும் வந்து கல்லெறிவாங்க, 2 நாளைக்கு ஈ, காக்காய் வராது இங்கே! :(

திவாண்ணா said...

மா வாட்டங்க!
இங்கே இருந்தா என்ன வெய்யில்ன்னு தெரியும்!
:-)))))))))))))
//திங்கள் கிழமை போட்டிருக்கக் கூடாதோ? எல்லாரும் வந்து கல்லெறிவாங்க, 2 நாளைக்கு ஈ, காக்காய் வராது இங்கே! :(//

அதனாலதானே வெள்ளி மாலை போட்டேன்!
:-))))))))))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:-)
வாங்க திவா சார் வாங்க!

// 2 நாளைக்கு ஈ, காக்காய் வராது இங்கே! :(//

ஆனா கருடன் வரும்! :-))


//நெரூர் போகணுமாம்.//

இதுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள்!

திவாண்ணா said...

பெரிய திருவடிக்கு நன்ஸ்!

இந்தியாவுக்கு மேற்கில இருக்கிற நாடுகள்ல பிரச்சினை இருக்காது ன்னு தெரிஞ்சுதான் போட்டேன். கணிப்பு வீணாகலை!
ஹேவ் அ நைஸ் வீகென்ட்

Geetha Sambasivam said...

//யார்ரா இந்தப்பயல் வாலாட்டறானோன்னு உளவுப்படைய ஏவிவிட்டு விவரம் சேகரிச்சுட்டாங்க//

இல்லையே, இங்கே வந்து தான் விவரம் தெரிஞ்சுக்கிட்டேன், :P உளவுப்படை ரொம்ப வீக்குனு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

//தமிழ்ல தட்டச்ச ஓரளவு தெரியும். //

அப்படிங்கறீங்க, நம்ப முயற்சி செய்யறேன். :P :P

திவாண்ணா said...

உளவுப்படை வீக்கா? எனக்குதர வேண்டியதை தந்தா நானே என்னைப் பத்தி உளவு சொல்லிடறேன்!

நம்பினால் கெடுவதில்லை...

Sumathi. said...

ஹலோ திவா சார்,

வாங்க, அது சரி இங்க டாமுக்கும் ஜெர்ரிக்கும் தான் கடும் போராட்டம் னு நினைச்சேன், கூட இப்ப நீங்களும் சேர்ந்துட்டீங்களா? ம்ம்ம்ம்... ஆரம்பமே சம்ம லொல்லா இருக்கு. ம்ம்... நடத்துங்க.

Sumathi. said...

ஹலோ,

//ஆனா கருடன் வரும்! :-))//

ஆமா கருடனுக்கு இதெல்லாம் கூட கண்ணு தெரியுமா? பரவாயில்லல்யே...

Geetha Sambasivam said...

//ம்ம்ம்ம்... ஆரம்பமே சம்ம லொல்லா இருக்கு. ம்ம்... நடத்துங்க.//

சரியாப் போச்சும்மா, மின்னலு, சுமதி! நீங்க வேறே தூண்டிவிடாதீங்க, ஏற்கெனவே பயந்துட்டு இருக்கேன், ஒண்டி ஆளா சமாளிக்க வேண்டி இருக்கேனு துணைக்குக் கூட்டி வந்தா, இப்படியா எதிர்க்கட்சியிலே சேர்த்துவிடறது? நீங்க யாரோட ஆளு? அதை முதலில் சொல்லுங்க! :P

மெளலி (மதுரையம்பதி) said...

அண்ணே, வாங்கண்ணே!!!!


//தானா பிறக்கிற குழந்தைங்கள இவங்க இழுத்து வெளியே போட்டு நல்ல பேர் வாங்கிட்டாங்க.//

ஓ அதுவேற அப்படியா?, தெரியாதே!
என்னமோ போங்க, நெருங்க, நெருங்க பெரிய புதிராயிருப்பீங்க போல....:)

மிக அருமையான ஊர் நெரூர். நடக்கட்டும், ரமணனை சதாசிவம் பார்த்துப்பார்.

திவாண்ணா said...

சுமதி அக்கா, ஆசீர்வாதத்துக்கு தாங்க்ஸ்! நடத்திடுவோம்!

மௌலி, வரவேற்புக்கு நன்றி! நாளை நெரூர் பயணம்! ஊரை பாக்க.

ambi said...

Hearty welcome Diva sir,

next postuku will comment in thamizh.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாங்க டாக்டர் வந்து கொஞ்சம் மருந்து கொடுத்து பிளாக் வியாதி எல்லாம் சரி படுத்துங்க.

dubukudisciple said...

vaanga vaanga.. konjam uniona activa vainga...vanakamku bathila dd akkaku nandri navilal nu potu irukalam :P

Geetha Sambasivam said...

// dubukudisciple said...
vaanga vaanga.. konjam uniona activa vainga...vanakamku bathila dd akkaku nandri navilal nu potu irukalam :P//

நல்ல கதையா இருக்கே??? நன்றி நவிலல் எனக்குச் சொல்லணும், பார்க்கப் போனா, விழாவே எடுக்கணும், நீங்க என்னன்னா, இப்ப்ப்ப்ப்ப்ப்படியா உங்களுக்கே கேட்டுக்கிறது???:P

திவாண்ணா said...

@ அம்பி
நன்ஸ்! சென்னைலேந்தே பின்னூட்டமா? பரவாயில்லையே!

@மதுரையம்பதி

நன்றி மௌலி
புதிர் ஒண்ணுமே இல்லை. நான் ரொம்பவே சிம்பிள் ஆசாமி!

@ திரச

நன்ஸ்!
இன்னிக்கு மருந்து முதல் டோஸ் கொடுத்து இருக்கேன்.
எதுக்கும் 24 மணி போனாதான் சொல்ல முடியும்
:-))
படுத்தறதுதானே? நிச்சயமா!

@DD அக்கா,
பாத்தீங்களா? இதுக்குத்தான் நன்றி எல்லாம் வெளியே சொல்லலை!

அல்லாருக்கும் நன்றி!